Untitled Document
November 10, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிளாக்பஸ்டர் இயக்குநருடன் முதல் முறையாக கைகோர்க்கும் நடிகர் சூர்யா!
[Tuesday 2026-11-10 16:00]

நடிகர் சூர்யாவின் 49வது திரைப்படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். நடிகர் சூர்யாவிற்கு இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை என்றுதான் சொல்ல வேண்டும். கருப்பு ரூ. 335 கோடி, விஸ்வநாத் & சன்ஸ் 220+ கோடி மற்றும் சீன் 4 நாட்களில் உலகளவில் ரூ. 150+ கோடி என வசூலில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்த மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை சூர்யாவிற்கு தேடி தந்துள்ளன.

மூன்று வெற்றிகளை அடுத்ததாக நடிகர் சூர்யா TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 48-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பின் மீண்டும் இந்த கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சூர்யாவின் 49-வது திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் உலா வருகிறது. இதில், இந்த ஆண்டு மண்டாடி பஸ்டர் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்திதான் சூர்யாவின் 49-வது திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

பொறுப்பு துறப்பு: சூர்யா 49வது திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார் என்பதை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா