Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பொப்கோர்ன் நிறுவனத்துக்கு எதிராக மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமான நிறுவனம் வழக்கு!
[Thursday 2016-03-03 07:00]

பொப்கோர்ன் நிறுவனமொன்றுக்கு எதிராக, மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமான நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. பாடகர் மைக்கல் ஜக்ஸனின் நிறுவனத்துக்கும் பொப்கோர்ன் எனும் சோளப்பொரி நிறுவனமொன்றுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் என எண்ணுவது கடினம். ஆனால், அமெரிக்க பொப்கோர்ன் நிறுவனமொன்று இத்தகைய வழக்குக்கு முகம் கொடுத்துள்ளது. பாடகர் மைக்கல் ஜக்ஸன் பொப்பிசை சக்கரவர்த்தி, அதாவது 'கிங் ஒவ் பொப்' ( King of Pop) என அழைக்கப்பட்டவர். இந் நிலையில், கிங்ஒவ்பொப் (KingOfPop.com) எனும் இணையத்தளம் நிறுவனமொன்று பொப்கோர்ன் (சோளப்பொரி) விற்பனை செய்துவருகிறது. KingOfPop எனும் பெயரானது, பாடகர் மைக்கல் ஜக்ஸனின் மிகப் பிரபலமான புனைபெயரைப் போல் உள்ளது என மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமான ஜக்ஸன் எஸ்டேட் நிறுவனம் கூறுகிறது.

பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமானதாக மைக்கல் ஜக்ஸன் எஸ்டேட் எனும் நிறுவனம் விளங்குகிறது. 2009 ஆம் ஆண்டில் மைக்கல் ஜக்ஸன் மறைந்த பின்னர் அவரின் சொத்துக்கள், அவர் மீதான வழக்குகள் முதலியவற்றை இந் நிறுவனமே கையாள்கின்றமை குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியா மாநிலத்திலுள்ள நீதிமன்றமொன்றில் கடந்த வாரம் இவ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பொப்கோர்னை 'பொப்' என எவரும் அழைக்கமாட்டார்கள் என ஜக்ஸன் எஸ்டேட் அதிகாரிகள் கூறுகின்றனர். KingOfPop.com இணையத்தளத்தை முடக்க வேண்டும் எனவும் தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் ஜக்ஸன் எஸ்டேட் நிறுவனம் தனது மனுவில் கோரியுள்ளது. மைக்கல் ஜக்ஸனின் நெவர்லேண்ட் விற்பனைக்கு வருகிறது. இதேவேளை, மைக்கல் ஜக்ஸனின் மாளிகை அடங்கிய நெவர்லேண்ட் (Neverland) தோட்டத்தை விற்பனை செய்வதற்கு ஜக்ஸன் எஸ்டேட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் லோஸ் ஒலிவோஸ் பகுதியில் அமைந்துள்ள நெவர்லேண்ட், சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவுடைய பிரமாண்ட தோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம்ப விலையாக 10 கோடி அமெரிக்க டொலர் (சுமார் 1420 கோடி ரூபா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு 1.95 கோடி டொலர்களுக்கு இந்த தோட்டத்தை வாங்கிய மைக்கல் ஜக்ஸன் அதற்கு நெவர்லேண்ட் எனப் பெயரிட்டார். 1988 முதல் 2009 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை அங்கு மைக்கல் ஜக்ஸன் வசித்தார். ரயில் நிலையம், களியாட்டப் பூங்காக்கள் முதலானவற்றையும் உள்ளடக்கிய நெவர்லேண்ட் சுற்றுலா பயணிகள் பார்வையிட விரும்பும் ஓர் இடமாகவும் விளங்குகிறது. மைக்கல் ஜக்ஸனின் மகள் பாரிஸ் ஜக்ஸன், 2013 ஆம் ஆண்டில் அங்கு புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா