Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மார்ககம் மைதானத்தில் - அதிஷ்டமாக வந்து சென்ற காரும் ரொறன்ரோ சிறுவனது ஏமாற்றமும்..! - ஒரு உண்மைமிக்க ஏமாற்று சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.. Top News
[Thursday 2016-03-24 22:00]

ரொறன்ரோவில் அது ஒரு கோடைகாலம் வானொலிகளும் டிவிக்களும் மார்க்கம் மைதானத்தில் மாறி மாறி போட்டி போட்டு பண்டிகை செய்யும் காலம்..

ஆம்... வளமைபோல அந்த குடும்பமும் பண்டிகை காண உற்றார் உறவினரோடு பண்டிகை நடைபெறும் மார்க்கம் மைதானத்தை வந்தடைந்தது.. அவர்களைக் காணும் நண்பா்களும் உறவினா்களும் இந்தியாவிலிருந்து அந்த நடிகையும் வந்திட்டாவாம் - அந்த பாடகரும் வந்திட்டாராம் என்ன..! என குசு குசுத்தபடி தமது தமது பிள்ளைகளுக்காக சவாரிகளுக்காக பற்றுச் சீட்டுக்களை பெற்று தமது பிள்ளைகளை சந்தோசப்படுத்தியவாறு அந்த மைதானத்தின் ஒரு பக்கத்தை சுற்றிவருகிறார்கள்..

மைதானத்தினுள் மக்கள் திரள் திரளாக வருகிறார்கள் அந்தச்சிறுவனது தாயாருக்கு எச்சரிக்கை உணா்வு மேலோங்க .. அப்பா பெடியன் கவனம் சனத்துக்கை மாறுப்பட்டுவிடுவான் கவனமா பாருங்கோ என்ன என்றவாறு கூறி - மக்கள் மிண்டியடிக்கும் ஒரு பகுதியை நோக்கி அங்கே என்ன நடக்கிறது என பார்த்துவிடலாம் என எட்டி நடக்கிறார் அத்தாய்..

ஓ.. இரு டாலருக்கு ஒரு கார் பரிசா..!!

ஆசை பற்றிக்கொள்ள தகவலை அறிந்தவாறு கணவரிடம் விசயத்தை சொல்ல கணவரும் ஒரு பத்து டொலருக்கு எடப்பா .. யாரோ ஒருவருக்கு அந்தகார் அதிஸடம் அடிக்கத்தானே போகிறது..

நாங்களும் எங்கட அதிஸ்டத்தை பார்ப்பம்.. என அனுமதிக்கிறார் கணவர்.. மக்களோடு மக்களாக வரிசையில் நின்று அந்ததாய் 5 டிக்கட்டுகளை பெற்று வெளியே வர ஒரு மணிநேரம் ஆனது - தாகம் மிகுதியால் யாழ் கிறீம் கவுசில ஒவ்வொரு ஐஸ்கிறீம் வாங்கியவாறு நிழல்தேடி அலைந்த அந்த குடும்பம் ஒரு மரத்தடி தேடி நடந்து உட்கார்ந்து கொள்கிறது..

தந்தையும் மகனாரும் குளிர்பாணம் சுவைக்க தாயவளோ தானெடுத்துவந்த டிக்கெட்டுகளை பத்திரப்படுத்துவதில் கவனமானாள்..

இவா்களது இருப்பிடத்தை நோக்கி அவா்களை அறிந்த மேலும் இரு குடும்பம் வந்தமர கதை சூடு பிடிக்கிறது .. பாட்டுகாரர் வர 5 மணி ஆகுமாம்.. அதுவரைக்கும் நம்மூர் பாட்டுகாரர் படுக்கினமாம் எவ்வளவு நேரம் இந்த வெயிலுக்கை நிற்கிறதெண்டுதான் இங்க ஒதுங்கியிருக்கிறம்..

ஓ... நீங்களும் கார் பரிசுக்காக டிக்டிகட்டு எத்தனீங்களோ.. என வினாவினாள் அந்ததாய் .. ஓமோம் ஆளுக்கு பத்து - பத்து டொலர்படி 50 ருபாய்க்கு எடுத்திருக்கிறம்..

ஓ.. அப்படியா சனம் மிண்டியடிக்கிறத பார்த்தால் - உந்த காரின் பெறுமதியை விட கூட காசு சேரும் போல கிடக்கு... என சம்பாசனை தொடர்கிறது..

இந்தக்கார் நாளைக்குதானாம் குலுக்குவினம் - அதுவும் நாளைக்கு வாற அந்த நடிகைதானாம் பரிசு கொடுப்பா.. என சொல்லிமுடிக்கிறார் அந்த நபர்..

ஓ.. அப்ப நாளைக்கும் வாற பிளான் இருக்குதோ என வியக்கிறார் அந்த அப்பா.. அடுத்தகிழமை தம்பியின்ரை பிறந்தநாள் வேற வருகிறது.. ஒழுங்குகள் செய்யவேணும்.. என்னப்பா நீர் நாளைக்கும் வரவேணும் என்கிறீர் என விழிக்கிறார் அந்த அப்பா..

சரி சரி பார்ப்பம் என கூறியபடி அடுத்த 5மணி நேரம் நிகழ்வை கண்டுகளித்து மைதானத்தை விட்டு வெயியேற இரவு 12 மணிதாண்டியிருந்தது..

இந்த நெரிசலுக்கை நாளைக்கும் வரவேணுமாம் பிளான் போட்டுட்டாள் இவள் என மனதுக்கை முணுமுனுத்தவாறு அந்த அப்பா காரை நகர்த்துகிறார்..

காரினுள் மகனார் குட்டித் தூக்கம் போட அம்மா கதையளக்கிறார்... இண்டைக்கு நாங்கள் எடுத்த டிக்கெட்டுக்கு அந்த கார் பரிசாக விழுந்தால் இந்த ஓட்டைகாரை நீங்கள் வைத்துக்கொண்டு எனக்கும் எங்கட குட்டியனுக்கும் அதை எங்களுக்காக தரவேணும் என்ன.. என கற்பனை கட்டி பேசுகிறாள் அந்ததாய் -

அதை நாளைக்கு வந்து பார்ப்பம் என்றவாறு சிறிது சினமாக பதிலளித்த அப்பாவினது அந்த ஓட்டை கார் மேஜர் மக்கன்சி சந்திப்பை தாண்டியதும் வேகமாக நகருகிறது.. வீடுவந்து சேர பாவம் அந்த தாயும் மகனோடு தூக்கத்தில் பின்சீற்றில் இருந்தாள்..

அப்பா இருவரையும் பார்த்து புன்னகைக்கிறார்.. என்டைகார் ஓட்டை காரோ..!! அதுக்குள்ளேயே தாயும் மகனும் தூக்கமோ..! ம்.. எழும்புங்கோ...!! வீடு வந்தாச்சு...

தொடரும்...

எழுத்துருவாக்கம் - சித்ரா - தேவநாயகம்

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா