Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாம்பு என்றால் படையும் நடுங்கும் ! - தன்னை கடித்த பாம்பை உயிருடன் சாப்பிட்டு பசியாறிய இளைஞன்
[Sunday 2016-03-27 18:00]

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தன்னை கடித்த பாம்பை மனிதன் உயிருடன் விழுங்கிய சம்பவம் ஜார்க்கண்ட்டில் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்தாகா மாவட்டத்தில் உள்ள ஹர்மு கிராமத்தை சேர்ந்த மலைவாழ் இளைஞர் சுரேந்திர ஒரான். இவர் தனது விளைநிலத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த பாம்பு இவரை கடித்துள்ளது. பாம்பு கடித்ததும் சற்றும் பதற்றம் அடையாத அவர், அந்த பாம்பின் தலையை மட்டும் விட்டுவிட்டு உயிருடன் அப்படியே சாப்பிட்டு விட்டார்.

இதன் பின் அவரது உடல்நிலை சற்று மோசமானதை அடுத்து, வீட்டில் உள்ள உறவினர்களிடம் இந்த விஷயத்தை அவர் கூறியுள்ளார். உடனே பதற்றம் அடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள், தங்களை கடித்த பாம்பினை சாப்பிட்டால் அந்த பாம்பின் விஷம் முறிந்துவிடும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர்.

சிலர் வௌவால்களை சாப்பிட்டால் மூளை பக்கவாதம் குணமாகும் என்றும், கரடி சாப்பிட்டால் மலேரியா குணமாகும் என்றும் நம்பி வருகின்றனர். இதுகுறித்து, அப்குதியில் உள்ள முதியவர் கூறும்போது, இதுபோன்ற பாம்பு சாப்பிட்ட சம்பவங்கள் இதுவரை நான்கு நடைபெற்றதாகவும், நான்கு முறையும் சாப்பிட்ட நபர் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா