Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கோயில் பெருவிழாவில் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி!
[Thursday 2016-04-21 09:00]

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டர் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முக்கிய விழாவான, சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.இதில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டனர். பின்னர் திருநங்கைகள் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொண்டு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரை பய, பக்தியுடன் வழிபட்டனர். தாலி கட்டிய பிறகு புதுமணப்பெண்கள் போல் காட்சி அளித்த திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயில் அருகில் இரவு முழுவதும் விடிய, விடிய கும்மி அடித்து கூத்தாண்டவரை கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து பாடல்களாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

நேற்று காலை சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக வடபுறம் சகடையில் 30 அடி உயரம் கம்பம் நட்டு வைக்கோல் புரி சுற்றப்பட்டது. இதுவே அரவான் உருவம் அமைப்பதற்கான அடிப்படை பணியாகும். பின்னர் கீரிமேட்டில் இருந்து மார்பு பகுதியும், சிவிலியன்குளம் கிராமத்தில் இருந்து அரசிலை, விண்குடையும், நத்தம் கிராமத்தில் இருந்து கைகளும், புஜங்களும், தொட்டி கிராமத்தில் இருந்து கயிறு, கடையாணி ஆகியவை வாணவேடிக்கை முழங்க எடுத்துவரப்பட்டு அரவான் உருவம் அமைக்கப்பட்டு தேர் செய்யப்பட்டது.

இதன்பிறகு தேரோட்டம் நடந்தது. அப்போது திருநங்கைகள் கற்பூரத்தை போட்டு பயபக்தியுடன் வேண்டிக்கொண்டனர். பொதுமக்கள், விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் இருந்து கொண்டு வந்த மணிலா, கம்பு, மாங்காய் உள்ளிட்டவைகளை சூறைவிட்டனர். இன்று மாலை பலிச்சோறு படைக்கும் நிகழச்சி நடைபெறுகிறது. பலிச்சோற்றினை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம் என்பதால் இதற்காக ஏராளமான குழந்தை இல்லாத பெண்கள் வந்து இந்த சோற்றினை பெற்றுச்செல்வார்கள். ஏப்ரல் 21ம் தேதி விடையாத்தியும், 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைப் பெருவிழா நிறைவு பெறுகிறது.

விதவை கோலத்தில் திரும்பிய திருநங்கைகள்அரவான் தேரோட்டம் களப்பலிக்கு சென்றதும் பந்தலடியில் திரண்ட திருநங்கைகள் அங்கு தங்களது தாலியை அறுத்துவிட்டும், பொட்டு அழித்து, வளையல்களை உடைத்து, தலைமூழ்கி, வெள்ளைப்புடவை உடுத்தி விதவை கோலத்துடன் தங்களது ஊருக்கு சென்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா