Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நிர்வாண நடனம் அறிவித்த மாடல் அழகி அண்ணனால் கவுரவக்கொலை!
[Sunday 2016-07-17 17:00]

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையும், மாடல் அழகியுமான காண்டீல் பலுச், தனது சொந்த அண்ணனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவற்றை மீறுவோரை குடும்பத்தினர் அல்லது உறவினர்களே கொலை செய்து தண்டனை நிறைவேற்றுகின்றனர். அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் அங்கு 1,096 பெண்கள் கவுரவக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், சமீபத்திய நிகழ்வாக பிரபல நடிகை காண்டீல் பலுச் (வயது 26) கவுரவக்கொலைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட சியால்கோட் மாவட்டத்தின் டஸ்கா நகரை சேர்ந்த இவரது இயற்பெயர் பவுசியா அசீம் ஆகும்.

மாடலிங் மற்றும் நடிப்புத்துறையில் கால்பதித்து இருந்த காண்டீல் பலுச், தனது கவர்ச்சிப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பரவ விடுவதன் மூலம் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார். அத்துடன் தனது அதிரடி அறிவிப்புகளால் பாகிஸ்தானியர் மட்டுமின்றி, இந்தியர்களின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்த டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவை பாகிஸ்தான் அணி வென்றால், நிர்வாண நடனம் ஆடப்போவதாக அறிவித்தார்.

இது அப்போது இரு நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான இம்ரான்கானை திருமணம் செய்வதற்கு பலமுறை வெளிப்படையாக விருப்பம் தெரிவித்து இருந்தார்.

காண்டீல் பலுச் மாடலிங் மற்றும் திரைத்துறையில் இருப்பதையும், தனது படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையும், அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக அவருக்கு செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக மிரட்டல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் மாவட்டத்தில் தங்கியிருந்த காண்டீல் பலுச் நேற்று முன்தினம் இரவு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்குப்பின் அவரது அண்ணன் வாசிம் தப்பி ஓடிவிட்டார். எனவே அவர்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது கவுரவக்கொலையாக இருக்கக்கூடும் என தெரிவித்த போலீசார், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். 26 வயதான காண்டீல் பலுச்சுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் கவுரவக்கொலைக்கு ஆளான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா