Untitled Document
November 13, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி இவருக்குத்தான்: கணித்த பிரபல கரடி!
[Sunday 2020-11-01 08:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று சைபீரிய பழுப்புக்கரடி கணித்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் 3-ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதைய அமெரிக்க அதிபரும், குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டிரம்ப் பற்றும் இருக்கும் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இருவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை கருப்பினத்தவ மற்றும் இந்தியர்களின் ஓட்டும், தேர்தலின் முடிவையே மாற்றும் என்பதால், இருவரும் இவர்களின் ஓட்டை பெறுவதற்கு மாற்றி, மாற்றி வாக்குறுதி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும், ஒரு சில நாள்களில் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், பழுப்புக் கரடியின் கணிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் தான் வெற்றி பெறுவார் என புயான் என்னும் பழுப்புக்கரடி கணித்துள்ளது.

சைபீரிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பழுப்புக்கரடியின் முன்பாக இரண்டு வேட்பாளர்களின் உருவம் வரைந்த தர்பூசணிப் பழங்கள் வைக்கப்படுகின்றன.

அதில் புயான் தேர்ந்தெடுக்கும் பழத்தில் யாருடைய உருவம் வரையப்பட்டுள்ளதோ அவரே வெற்றியாளர் என்கின்றனர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர்.

கடந்தமுறை புயான் ட்ரம்பை தேர்ந்தெடுக்க அது அப்படியே பலித்தது நினைவுகூரத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா