Untitled Document
November 13, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தனது கடைக்கு 'கொரோனா' என பெயரிட்ட நபர்!
[Thursday 2020-11-19 17:00]

கேரளாவைச் சோர்ந்த ஜார்ஜ் என்ற நபர், "கரோனா" என்று தனது கடைக்கு பெயர் வைத்துள்ளதால், விற்பனை அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் "கரோனா" என்ற பெயரில் இன்டீரியர் அலங்கார பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார். இதில், பூந்தொட்டிகள், பானைகள், விளக்குகள் மற்றும் வீடுகளில் டெக்கரேசனுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.

ஜார்ஜ் 7 வருடங்களாக இந்த கடையை நடத்தி வருகிறார். அவர், இந்த கடையைத் துவங்கிய போதே, கரோனா என்று பெயர் வைத்துள்ளார். கரோனா என்பது லத்தீன் மொழியில் கீரிடம் என்று பொருள்படும். அதன் அடிப்படையிலேயே, அவர் இந்த பெயரை வைத்துள்ளார். சராசரியாக விற்பனை நடந்து வந்த "கரோனா" கடையில், கரோனா ஊரடங்குக்குப் பின் விற்பனை அதிகரித்துள்ளது.

இப்போது, மக்கள் அதிக ஆர்வத்துடன் தனது கடைக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்வதாக, ஜார்ஜ் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கரோனா காலத்தில் இதுபோன்று பல கடைகள் பிரபலமடைந்துள்ளது. கடந்த வாரத்தில், மலேசிய நாட்டில் பைலட் ஒருவர் நடத்தி வந்த நூடுல்ஸ் கடை பிரபலமானது பற்றிய செய்திகள் அதிக அளவு பகிரப்பட்டது. அதேபோல் சிலருக்கு கரோனா சற்று சாதகமான சூழலையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா