Untitled Document
November 14, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பாகிஸ்தானில் பிச்சை எடுத்து வந்த திருநங்கை: ஆச்சர்யப்படும் வகையில் மாறிய வாழ்க்கை!
[Friday 2020-11-27 17:00]

பாகிஸ்தானில் பிச்சை எடுத்து வந்த இளம் திருநங்கை தற்போது பெரிய வழக்கறிஞர் ஆகியுள்ளதுடன் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி ஆவேன் என சபதமிட்டு உழைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிஷா ராவ் (28) என்ற திருநங்கைக்கு தற்போது 28 வயதாகிறது. இவருக்கு 18 வயதான போது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை உணர்ந்தார்.

தான் திருநங்கை என்பதை புரிந்து கொண்ட நிஷா வீட்டிலிருந்து வெளியேறினார்.

பின்னர் சக திருநங்கைகள் நிஷாவிடம் பிச்சை எடுப்பது அல்லது பாலியல் தொழில் செய்தால் தான் நாம் பிழைக்க முடியும் என கூறினர். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிஷா பிச்சை எடுக்க தொடங்கினார்.

அதில் கிடைத்த பணத்தை வைத்து சட்டம் தொடர்பான வகுப்புகளுக்கு சென்று கல்வி பயின்றார்.

வருடங்கள் கடந்தன, பிச்சை எடுத்த பணத்தில் படித்தே வழக்கறிஞர் ஆனார் நிஷா.

தற்போது பாகிஸ்தானில் பிரபல வழக்கறிஞராக உள்ள நிஷா திருநங்கைகள் உரிமைகள் தொடர்பான 50 வழக்குகளுக்காக போராடி சிறப்பான அந்தஸ்துடன் வலம் வருகிறார்.

நிஷா கூறுகையில், எனது குறிக்கோள், லட்சியம், எனது கனவு பாகிஸ்தானின் முதல் திருநங்கை நீதிபதியாக வேண்டும் என்பது தான் என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா