Untitled Document
November 13, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டிராகன் பழத்தின் பெயரை மாற்றிய மாநிலம்: என்ன பெயர் தெரியுமா?
[Wednesday 2021-01-20 17:00]

தாமரை வடிவ டிராகன் பழ வகைக்கு கமலம் (தமிழில் அர்ததம் தாமரை) என குஜராத் அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. ஆனால் இந்த முடிவில் அரசியல் ஏதும் இல்லை என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.

பிறகு நிரூபர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'டிராகன் பழகத்திற்கு அந்த பெயர் பொருத்தமானதாக இல்லை. அதனால் அதற்கு கமலம் என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளோம். டிராகன் என்ற பெயர் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை.

கமலம் என்ற சொல், சமஸ்கிருத சொல். இந்த பழம் தாமரை வடிவத்தை கொண்டுள்ளதால் கமலம் என இப்போது முதல் இந்த பழம் கமலம் என அழைக்கப்படும். இதில் அரசியல் ஏதும் இல்லை. இந்த பெயரை வைக்க வேண்டும் என யாரும் சொல்லவில்லை,' என்றார்.

தாமரை, பாஜக.,வின் சின்னம் என்பதை தாண்டி பாஜக.,வின் அடையாளமாக மாறி உள்ளது. காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கூட ஸ்ரீ கமலம் என்று தான் பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் குஜராத் முதல்வர் அளித்துள்ள விளக்கம் ஏற்கப்படுவதாக இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா