Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சவப்பெட்டிகளை மலைமுகடுகளில் தொங்கவிடும் வினோத வழக்கம்: எங்கு தெரியுமா?
[Wednesday 2022-08-31 18:00]

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பழங்குடி இனம் இறந்தவர்களைப் புதைக்காமல் அவர்களின் உடல் வைக்கப்பட்ட சவபெட்டியை மலைமுகடுகளில் தொங்கவிடும் நடைமுறையைப் பின்பற்றிவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் சகடா பகுதியில் ராக்பேஸ், இகோரோட் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் சுமார் 2,000 ஆண்டுகளாக இறந்தவர்களைப் புதைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

அவர்களின் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து, அவரின் உடலைச் சவப்பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். சவப்பெட்டியில் உள்ள உடல் அழுகாமல் இருக்க, மூலிகைகளால் நிறப்பப்படுகிறது.

மேலும், சில மூலிகைகளின் புகையையும் காண்பித்து இறுக ஆணி அடித்துவிடுகிறார்கள். அதன் பிறகு அந்தச் சவப்பெட்டியை அங்கு இருக்கும் ஒரு மலையின் உச்சிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்தவாறே இறந்தவரின் பெயரை மூன்று முறை சப்தமிட்டுக் கூறுகிறார்கள்.

அதன் பிறகு அந்த சவபெட்டியை கயிற்றில் கட்டி அந்த மலையில் தொங்கவிடுகிறார்கள். இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் “இறந்தவர் உடலைப் பாதுகாக்கவே இப்படிச் செய்கிறோம்.

அவரின் உடல் இருந்தால்தான் அவர் சுவனம் செல்ல முடியும். மேலும், அவரின் பெயரை மூன்று முறை சப்தமிட்டுக் கூறினால்தான், இதற்கு முன் இறந்தவர்கள், புதிதாக இறந்தவரை வரவேற்க வசதியாக இருக்கும்.

இந்த வழக்கத்தை 2,000 வருடங்களாகத் தொடர்கிறோம். ஒருவேளை சவப்பெட்டியிலிருந்த உடல் அழுகிவிட்டதை அறிந்தால் அந்த சவப்பெட்டியில் மட்டும் மூலிகை ரசாயனத்தைச் சொட்டவிடுவோம்.

ஒரு முறை மூடிய சவபெட்டியில் மீண்டும் இரசாயனம் விடக் கூடாது. அது கடவுள் குற்றமாகிவிடும். ஆனாலும், இறந்தவர் சுவனம் செல்ல இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறோம்.

இந்தச் சூழல் எப்போதாவதுதான் ஏற்படும்” எனத் தெரிவித்திருக்கின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தப் பழங்குடி மக்களின் சவப்பெட்டி இருக்கும் இடம் சுற்றுலாத்தலமாக பிரபலமாகிவிட்டது.

அதனால், தொங்கும் சவப்பெட்டிகளை பார்க்க நிறைய சுற்றுலாப்பயணிகள் வருவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா