Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆண்களின் விந்தணுக்களில் ஆபரணங்கள் தயாரிக்கும் கனேடிய பெண்!
[Friday 2022-09-02 19:00]

கனடாவை சேர்ந்த அமாண்டா பூத் என்ற பெண்மணி ஆண்களின் விந்தணு, தாய்ப்பால், உயிரிழந்தவர்களின் சாம்பல் ஆகியவற்றை கொண்டு நகை செய்து விற்பனை நடத்தி வருகிறார். மோதிரங்கள், செயின்கள், வளையல்கள் என அனைத்து ஆடம்பர மற்றும் அலங்கார நகைகள் உலக மக்கள் அனைவராலும் விருப்பத்துடன் வாங்கப்பட்டு அணியப்படுகிறது.

அதிலும் நமது மனதிற்கு நெருக்கமானவர்களால் வாங்கி தரப்படும் நகைகள், அல்லது நமக்கு பிடித்த நெருக்கமானவர்களை ஞாபகப்படுத்தும் நகைகள் எப்போதும் மனதிற்கு இதம் தருபவையாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் கனடாவை சேர்ந்த அமாண்டா பூத் (Amanda Booth) என்ற பெண்மணி மனதிற்கு பிடித்தமானவர்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதற்காக வித்தியாசமான முறையில் அபரண நகைகளை வடிவமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அது என்வென்றால், அமாண்டா பூத்(Amanda Booth) என்ற கனடா பெண்மணி தனது கணவரின் விந்தணு மாதிரிகளை சேகரித்து அபரண நகையாக வடிவமைத்துள்ளார். ஜிஸ்ஸி ஜூவல்லரி (jizzy jewellery) என்ற முறையினை அமாண்டா பூத் முதலில், தனது சொந்த கணவரிடம் இந்த சோதனையை செயல்முறையை பரிசோதித்துள்ளார்.

கடந்த மாதம் ஜிஸ்ஸி துண்டுகள் தயாரிப்பது தொடர்பான வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்டதன் மூலம் அவை பிரபலமடைந்து அமாண்டா பூத் வடிவமைக்கும் நகைகளுக்கு தற்போது ஏராளமான வரவேற்பு கிடைத்ததுடன் மட்டுமில்லாமல் நகை வடிவமைப்பதற்கான விண்ணப்பங்களும் குவிந்து வருகிறது.

இவ்வாறு ஜிஸ்ஸி ஜூவல்லரி நகைகளுக்கு வாடிக்கையாளரான Espy, தானும் தனது கணவரும் எளிய முத்து பதக்கத்தை ஏற்பாடு செய்ய கூறினோம், அது தங்களது உறவின் மேலாதிக்கம், உரிமை குறிக்கும் ஒன்றாக இருக்க விரும்புனோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு இந்த நகை விற்பனை தொடங்கிய அமாண்டா தற்போது, மனிதர்களின் உடல் திரவங்கள் மற்றும் சாம்பல் இருந்து அணியக்கூடிய சிற்பங்கள் மற்றும் டிரிங்கெட்டுகளை உருவாக்குகிறார்.

மேலும் தாய்ப்பால், அன்புக்குரியவர்கள் அல்லது செல்லப்பிராணிகளின் தகனம் செய்யப்பட்ட எச்சங்கள், ரோமங்கள் மற்றும் முடி ஆகியவற்றை கொண்டு நகை வடிவமைத்து வருகிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா