Untitled Document
November 10, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இங்கிலாந்தில் நதியைத் திருமணம் செய்துகொண்ட பெண்!
[Friday 2026-07-10 18:00]

இங்கிலாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மேக் என்ற பெண், அங்குள்ள 'ஏவோன்' என்ற நதியைத் திருமணம் செய்துகொண்டு, தற்போது தனது 3-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ள வினோத சம்பவம் உலகளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. நதிக்கும் தனக்கும் உள்ள காதல் இன்னும் குறையவில்லை என்று கூறி, அண்மையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண் 'மேகன் ரூத்-ட்ரம்ப்'. இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 17 அன்று, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வெள்ளை நிற திருமண ஆடை அணிந்து, 'ஏவோன்' நதியைத் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு தனது பெயரை 'மேக் ஏவோன்' என்றும் மாற்றிக் கொண்டார்.

அண்மையில் தனது 3-வது திருமண நாளைக் கொண்டாடிய மேக், "நதிக்கும் எனக்குமான காதல் இன்னும் ஆழமாகத் தொடர்கிறது. கடுமையான குளிர்காலத்திலும் கூட வாரத்திற்கு ஒருமுறை நான் என் நதியுடன் நேரம் செலவிட (குளிக்க) தவறுவதில்லை" எனத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது ஏதோ வேடிக்கைக்காகவோ அல்லது மனநலக் குறைபாட்டாலோ செய்யப்பட்ட திருமணம் அல்ல. இங்கிலாந்தின் நீர்நிலைகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கலக்கப்படும் 'கழிவுநீர் மற்றும் நச்சு மாசு' குறித்த விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்தவே இந்த வினோத போராட்ட வடிவத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.

தற்போதைய சட்டப்படி ஒரு நதியை மனிதர்கள் முறைப்படி திருமணம் செய்ய முடியாது. எனவே, 'ரைட்ஸ் ஆஃப் நேச்சர்' அமைப்புகளுடன் இணைந்து, "நதிகளுக்கு மனிதர்களைப் போன்ற சட்டப்பூர்வ வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகிறார்.

இந்த உரிமை கிடைத்தால், நதியைத் தான் சட்டப்பூர்வமாக மீண்டும் திருமணம் செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா