Untitled Document
November 12, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தூங்கினால் இவ்வளவு பணமா? - 60 நாட்களில் லட்சாதிபதியான பெண்!
[Wednesday 2026-11-11 16:00]

தூங்குவதற்கே சம்பளம் கிடைத்தால் எப்படி இருக்கும்? இது வெறும் கற்பனை அல்ல, உண்மையாகவே இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், 60 நாட்கள் நடைபெற்ற வித்தியாசமான தூக்கப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.9.63 லட்சம் பரிசுத் தொகையையும் இலவச சுற்றுலா பேக்கேஜையும் வென்றுள்ளார். இந்த வினோதப் போட்டியை இந்தியாவின் பிரபல மெத்தை தயாரிப்பு நிறுவனமான Wakefit நடத்தியது. 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஐந்தாவது சீசனில், நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 10 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகினர்.

இந்தப் போட்டியின் முக்கிய விதி, தினமும் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதுதான். இதற்காகப் போட்டியாளர்களுக்கு மெத்தை, தலையணை மற்றும் தூக்கத்தைக் கண்காணிக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.

அவர்களின் தூக்க நேரம், தரம் மற்றும் தினசரிச் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டன.ஆனால், தூங்குவது மட்டுமே போட்டியாக இருக்கவில்லை.

வாரந்தோறும் திரைப்படக் காட்சிகளை நகைச்சுவையாக மீண்டும் நடித்துக் காட்டுவது, தூக்கப் பழக்கங்களைப் பதிவு செய்வது, உரையாடல்களில் 'போர்வை', 'தலையணை' போன்ற வார்த்தைகளை இயல்பாகப் பயன்படுத்துவது எனப் பல சுவாரஸ்யமான சவால்களும் நடத்தப்பட்டன.

60 நாட்கள் போட்டிக்குப் பிறகு நான்கு பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிப் போட்டியில், படுக்கையறையைப் படத்தின் அடிப்படையில் மீண்டும் அமைப்பது, தூக்கத்திற்குத் தேவையான பொருட்களை ஏலம் மூலம் தேர்வு செய்வது உள்ளிட்ட சவால்கள் இடம்பெற்றன.

இறுதியாக, தங்களுக்கென அமைக்கப்பட்ட படுக்கையறையில் ஒரு இரவு தூங்கிய போட்டியாளர்களின் தூக்கத் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் மும்பையைச் சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு ரூ.9.63 லட்சம் பரிசுத் தொகையுடன் Wakefit நிறுவனத்தின் இலவச சுற்றுலா பேக்கேஜும் வழங்கப்பட்டது. தூக்கத்தைப் போட்டியாக மாற்றி, அதையே வருமானமாகவும் மாற்றிய இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அடுத்த சீசனில் பங்கேற்க விரும்புவோர் Wakefit நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா