Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற வன்னி மயில் நடனப் போட்டி: - 2016 இறுதிநாள் நிகழ்வு! Top News
[Wednesday 2016-03-02 21:00]

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - தமிழ் பெண்கள் அமைப்பு 7 ஆவது தடவையாக நடாத்திய தாயக விடுதலை பாடலுக்கான நடனப்போட்டி நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. மூன்றாவது நாளாக கடந்த 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை ஒள்னே சுபுவா பகுதியில் இடம்பெற்ற பிரமாண்டமான அரங்கில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. காலை 08.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின. ஈகைச்சுடரினை கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலைப் பகுதியில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப். கட்டி அவர்களின் புத்திரி ஏற்றிவைத்தார். போட்டியின் நடுவர்களாக திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் ( 'நாட்டியக் கலைமணி" - யாழ் பல்கலைக் கழகம், 'பரத சூடாமணி" நிருத்திய நாட்டியாலய அதிபர் - ஜேர்மனி), திருமதி நிஷாந்தி சண்முகதாசன் (பரத கலாவித்தகர் - வட இலங்கை சங்கீத சபை, நுண்கலைமாணி (பரதம்) - இராமநாதன் நுண்கலைப் பீடம்) சாவித்திரி இம்மானுவேல் (நாட்டியகலாரத்னா - பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி, MA/ Mphil தஞ்சாவூர் பல்கலைக்கழகம் தமிழ்நாடு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஆரம்ப நிகழ்வாக நடுவர்கள் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி சுகந்தி அவர்கள் போட்டியாளர்களின்; விபரக்கோவையை நடுவர்களிடம் கையளித்து போட்டியை ஆரம்பித்துவைத்தார்.

கடந்த 20.02.2016 சனிக்கிழமை மற்றும் 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் SARCELLES பகுதியில் மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு குழு, பாலர் பிரிவு, மத்திய பிரிவு குழு, கீழ்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக அதி மேற்பிரிவு, அதிஅதிமேற்பிரிவு, சிறப்புப்பிரிவு மேற்பிரிவு குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது சிறப்புரையில், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதனை அனைவரும் கவனத்தில்கொள்ளவேண்டும். தேச விடுதலையை நோக்காகக் கொண்டே குறித்த நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்றுவருகின்றன. தொடர்ந்து எமது தேசவிடுதலைக்கான பாதையில் நாம் அனைவரும் பயணிக்கவேண்டும் என்றார்.

தொடர்ந்து, நிகழ்வின் நடுவர்கள், நடன ஆசிரியர்கள் வன்னிமயில் நினைவுக் கேடயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். நிகழ்வில் உள்ள குறைநிறைகள் நடுவர்களின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், கரகோசத்தின் மத்தியில் பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் அமைப்பின் சார்பில் குறித்த நிகழ்வு திறம்பட நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வன்னி மயில் 2016 நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது. பரிசளிப்பின் நிறைவாக அனைவரும் எதிர்பார்த்த 2016 இற்கான வன்னி மயிலாகத் தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் கரகோசத்தின் மத்தியில் புஸ்பகுணபாலசிங்கம் அனித்தா 2016 ஆம் ஆண்டுக்கான வன்னிமயிலாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

அவருக்கான வன்னிமயில் கிரீடம், பட்டி, வெற்றிக் கிண்ணம் சென்ற ஆண்டுகளில் வன்னிமயில்களாக தெரிவுசெய்யப்பட்ட மாணவிகளால் வழங்கப்பட்டது. கேணல். பரிதி அவர்களின் நினைவாக தமிழீழத் தேசிய சின்னம் மற்றும் கேணல் பரிதி அவர்களினதும் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவுப் பதக்கத்தை கேணல் பரிதி அவர்களின் தாயார், வன்னிமயில் 2016 புஸ்பகுணபாலசிங்கம் அனித்தாவிற்கு அணிவித்து வைத்தார். கேணர் பரிதி அவர்களின் நண்பர்களான முந்நாள் போராளிகள் 2014 ஆம் ஆண்டு முதல் இந்த நினைவுப்பதக்கத்தை வன்னிமயிலாகத் தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

500 வரையான போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்நிகழ்வில், வன்னிமயில் விருதுக்கு இம்முறை 66 பிள்ளைகள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ்பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு அதிர்ஸ்டம் பார்க்கப்பட்டது.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு கண்டன.

நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற போட்டியாளர்களின் விபரம்:

வன்னி மயில் 2016 - புஸ்ப குணபாலசிங்கம் அனித்தா

அதிமேற்பிரிவு
அ) 1 ஆம் இடம் - கோகுலதாஸ் சூர்யா
2 ஆம் இடம் - ஜேசுதாசன் ஜெருஷா
3 ஆம் இடம் - செல்வரதன் ஜெனுஷா

ஆ) 1 ஆம் இடம் - விநாசித்தம்பி உமையாள்
2 ஆம் இடம் - கேதீஸ்வரன் கெனிதவி
3 ஆம் இடம் - திலீப்குமார் திசானிகா

அதிஅதி மேற்பிரிவு
1 ஆம் இடம் - செல்வரதன் நிந்துஷா
2 ஆம் இடம் - வெஞ்சஸ் அன்ரன் றெஜிஸ்ரினா
3 ஆம் இடம் - சுரேந்திரன் லவண்யா
சுப்பிரமணியம் சபித்தா

சிறப்புப் பிரிவு
1 ஆம் இடம் - ஸ்ரீஸ்கந்தராஜா சோபி
2 ஆம் இடம் - ஸ்ரீரஞ்சன் ஆரணி
3 ஆம் இடம் - சந்திரபாலன் சுவேதிகா

மேற்பிரிவு குழு
குழு 3 - 1 ஆம் இடம் - பாதச் சலங்கை (கவின்கலையகம்)
குழு 2 - 2 ஆம் இடம் - கடல்வீரம் வேங்கை காண (சேர்ஜி தமிழ்ச்சோலை)
குழு 6 - 2 ஆம் இடம் - பொங்கு தமிழா (சோதியா தமிழ்கலைக் கல்லூரி)

மத்திய பிரிவு குழு
குழுஇல.8 - 1ஆம் இடம் - எங்கள் தலைவன் பிரபாகரன்(செவ்ரோன் தமிழ்ச்சோலை)
குழு இல.1 - 2 ஆம் இடம் - மண்ணில் கொண்ட காதல்தான்(சேர்ஜி தமிழ்ச்சோலை)
குழு இல.2 - 3 ஆம் இடம் - பிரபாகரன் பெயரைச் சொல்லி (கவின்கலையகம்)

மத்திய பிரிவு
அ) 1 ஆம் இடம் - வினாசித்தம்பி இளையாள்
2 ஆம் இடம் - றஞ்சன் யான் பிருந்தா
3 ஆம் இடம் - மைக்கேல் சுவித்தா
ஆ) 1 ஆம் இடம் - ஜெகநாதன் சில்வியா
2 ஆம் இடம் - மகேஸ்வரன் புளோராஃ துஷந்தன் தீபிகா
3 ஆம் இடம் - சுரேஸ் சோந்ரின்

இ) 1 ஆம் இடம் - தயாபரன் சௌமியா
2 ஆம் இடம் - மகேந்திரராஜா பார்கவி
3 ஆம் இடம் - வடிவேலு ஆருதி

ஈ) 1 ஆம் இடம் - பத்மராஜா கோபிகா
2 ஆம் இடம் - குகராஜா சாரு
3 ஆம் இடம் - கஜேந்திரா அதிஷாஃ சிறீதரன் அபிஷா

மேற்பிரிவு
அ) 1 ஆம் இடம் - வஜீந்திரன் சௌமியா
2 ஆம் இடம் - புஸ்பகரன் அட்ஷயா
3 ஆம் இடம் - சுரேஸ் ஸ்டனிசியா

ஆ) 1 ஆம் இடம் - ராஜ்குமார் ரம்யா
2 ஆம் இடம் - சிறிநாதன் ஆர்த்தி
3 ஆம் இடம் - ஜேரோம் பெலாஷி

இ) 1 ஆம் இடம் - ராஜசுப்பிரமணியம் அபிஷா
2 ஆம் இடம் - ஜெயந்தன் ஆஷிகா
3 ஆம் இடம் - கோவிந்தராஜ் சௌந்தர்யா

ஈ) 1 ஆம் இடம் - வசந்தகுமார் லேனா
2 ஆம் இடம் - சந்திரசேகரன் அபிலானா
3 ஆம் இடம் - பத்மராஜா லோஜிகா

குழு அதிமேற்பிரிவு
1 ஆம் இடம் - இல.5 - 'கடலே கடலே...." (செவ்ரோன் தமிழ்சோலை)
2 ஆம் இடம் - இல.1 - 'வீழமாட்டோம்...." (ஓர்னேசுபுவா தமிழ்ச்சோலை)
3 ஆம் இடம் - இல.3 - 'பாதச் சலங்கை...." (திரான்சி; தமிழ்சோலை)

பாலர்பிரிவு
1 ஆம் இடம் - மணிவேந்தன் தூயா
2 ஆம் இடம் - லோஜன் சாதனா
3 ஆம் இடம் - பார்த்தீபன் ஷரினி ஃ விவேகானந்த சிவம் அபிஷா

கீழ்ப்பிரிவு
அ) 1 ஆம் இடம் - பொன்னுச்சாமி விக்ரம் யூலியன்
2 ஆம் இடம் - யாதவராசன் டொறின்
3 ஆம் இடம் - கிருஷ்ணகுமார் பிலோனா

ஆ) 1 ஆம் இடம் - ஆதவன் இலக்கியா
2 ஆம் இடம் - யூனேஸ் ஷேர்லின்
3 ஆம் இடம் - ஸ்ரீரங்கன் ஹரினி

குழு கீழ்ப்பிரிவு
1 ஆம் இடம் - இல.2 - 'சின்ன சின்ன பூக்கள்...."
2 ஆம் இடம் - இல.1 - 'செண்பகமே செண்பகமே...."

மேலதிக படங்களை பார்வையிட.. www.puthinamphotos.com

  
  
   Bookmark and Share Seithy.com



மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்! Top News
[Saturday 2024-11-02 08:00]

எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. ஆலங்குளம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



Voice of Need அமைப்பின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது! Top News
[Tuesday 2024-10-15 21:00]

நாடளாவிய ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் பலதரபட்ட தேவைகளை பூர்த்தி செய்து வந்த 'Voice of Need' அமைப்பின்‌ தலைமை அலுவலகம்‌ கொழும்பில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு கடந்த காலங்களில் தேவையுடையோருக்கான இலவச 90 குழாய் நீர் மற்றும் ஆழ் துளை கிணறு திட்டங்களும் . விதவைகளுக்கான கோழி பண்ணை திட்டங்களும் வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் உலர் உணவு திட்டங்களும் போன்ற பல நூறு சேவைகளை இலவசமாக செய்து வந்துள்ளது.



'ஒன்ராறியோ லைன்' கட்டுமானம் குறித்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது! Top News
[Friday 2024-10-11 17:00]

70 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒன்ராறியோ லைன் போக்குவரத்து விரிவாக்கத் திட்ட கட்டுமானப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. 15 நிறுத்தங்களைக் கொண்ட இத்தடவழிப் பாதை, ரொறன்ரோ பெரும்பாகப் பகுதிகளை இணைத்துப் பயண நேரத்தைக் குறைக்கும். இதேவேளை, ஸ்காபரோ நிலக்கீழ் தொடரிவழிப் பாதை நீட்டிப்பு வேலைகளும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதும் நாம் முன்பை விட வேகமாக கட்டுமானங்களை மேற்கொள்கிறோம் என்பதையே காட்டுகிறது.



புத்தளத்தில் மிக விமரிசையாக இடம்பெற்ற கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா வைபவம்! Top News
[Tuesday 2024-10-08 18:00]

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதியுள்ள இரு நூல்களின் வெளியீட்டுவிழா புத்தளம் நகரில் சனிக்கிழமை இரவு (05-10-2024) மிக விமரிசையாக இடம்பெற்றது. புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி ஷாமில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமை வகித்தார். புத்தளம் CREATE இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் "ரகசியங்கள்" , "மைத்துளிகள் மரணிப்பதில்லை" ஆகிய இரு நூல்களே வெளியிட்டு வைக்கப்பட்டன. நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமத் கலந்து கொண்டார்.



கனேடிய தமிழர் பேரவை 2024 ஆம் ஆண்டிற்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தின நிகழ்ச்சி! Top News Top News
[Thursday 2024-10-03 06:00]

கனேடிய தமிழர் பேரவை 2024 ஆம் ஆண்டிற்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்தை செப்டெம்பர் 29, 2024 அன்று, ஒன்ராறியோவின் ஜோர்ஜினாவில் உள்ள சட்டன் மாவட்ட உயர்நிலைப் பள்ளியில் ஜார்ஜினா தீவின் சிப்பேவாஸ் நடத்திய பவ் வாவ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனுசரித்திருந்தது. பாவ் வாவ், "நாவென்ட்வின்" (உறவினர்கள்) என்ற கருப்பொருளில், பாரம்பரிய நடனம், டிரம்மிங் மற்றும் கதைசொல்லல் ஆகியவை இடம்பெற்றன, இது CTC க்கு முதல் குடிகளின் கலாச்சாரத்துடன் ஈடுபடுவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை பிரதிபலிக்கும் அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது.



கனடா கந்தசாமி ஆலய நிர்வாக இயக்குனர் முத்து செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மூன்று வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிட்டார்! Top News
[Friday 2024-09-27 18:00]

முதலில் யாழ் போதனா வைத்தியசாலையின், பல காலம் வடக்கு பிராந்தியத்தில் மக்களுக்கு பெரும் சேவையாற்றுபவர்களும், பலரின் உயிர்களை காப்பாற்றியவர்களுமான இதய சிகிச்சை நிபுணர்களான வைத்திய கலாநிதி லக்ஷ்மன் மற்றும் வைத்திய கலாநிதி குருபரன் ஆகியோரையும் அதற்கு பின் கடந்த மூன்று ஆண்டுகளாக திறம்பட இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு பல உயிர்களை மீட்டு தந்தவருமான நிபுணர் வைத்திய கலாநிதி சிவசங்கர் மற்றும் அனஸ்தீசியா நிபுணரான வைத்திய கலாநிதி ரமணன் ஆகியோரை சந்தித்து அங்குள்ள நிலைமைகளை அறிந்தார்.



பிரம்டனில் தமிழின அழிப்பு நினைவிட அடிக்கல் நாட்டல்! Top News
[Friday 2024-08-23 06:00]

ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது கனடாவில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு தமிழின அழிப்பு நடைபெற்றது என்பதற்கான சர்வதேச அங்கீகாரம், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் போன்றவற்றின் ஒரு படிநிலையாக அமைகிறது. தமிழர்கள் மீதான இன அழிப்பை மறுதலிப்பவர்கள் இந்நிகழ்வைச் சீர்குலைக்க முனைந்த போதிலும், பிராம்ப்டன் நகரமுதல்வர் பட்றிக் பிரவுன், பிரம்ரன் தமிழ் ஒன்றியம், கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் பேராதரவுடன் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.



தமிழின அழிப்பு நினைவகம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு - ஆகஸ்ட் 14, 2024! Top News
[Tuesday 2024-08-20 21:00]

ஆகஸ்ட் 14, 2024ல் கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் அமைந்திருக்கும் சிங்குசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வானது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பிற்கான அனைத்துலக அங்கீகாரம், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி ஆகியவற்றை அடைவதற்கான தமிழ் மக்களின் நீண்ட பயணத்தில், இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.



முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை சமூகங்கள் பயன்பெறும் வகையில் ஒன்ராறியோ விரிவாக்குகிறது! Top News
[Friday 2024-07-19 06:00]

ஒன்ராறியோ அரசாங்கம், உடல்நலம், உடற்பயிற்சி, சமூக ஒருங்கிணைப்பு போன்ற அமைப்புகளை மேம்படுத்தி சேவைகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALCs) விரிவுபடுத்துகிறது. இது தொடர்பாக அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கும்போது, "முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALC) விரிவுபடுத்துவதன் மூலம், பெருமளவு முதியவர்கள், சுறுசுறுப்பானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கையை வாழத் தேவையான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளோம்" என்றார். மாநிலம் முழுவதும் முந்நூறுக்கும் அதிகமான முதியோர் வாழும் செயற்றிறன் மையங்கள் (SALC) வெற்றிகரமான நிலையில் இயங்கிவரும் வேளையில், இம்முக்கிய திட்டங்களை இணைந்து வழங்க உள்ளூர் நிறுவனங்களையும் அரசாங்கம் அழைக்கிறது.



மல்லாவி வைத்தியசாலைக்கு செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கிவைப்பு! Top News
[Monday 2024-06-10 21:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் நேற்று ஞாயிற்று கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வானது மல்லாவி ஆதார வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 3,367,000 செலவில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.



கனடாவில் அறிவக மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்! Top News
[Monday 2024-06-03 21:00]

நடப்புக் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வு எட்டுத் தேர்வு மையங்களில் இனிதே நடைபெற்று முடிந்தது. கனடாவில் உள்ள 200 இற்கும் மேற்ப்பட்ட அறிவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இத் தேர்விற்கு முகம் கொடுத்தனர். தேர்வுப் பணிகளில் ஏறக்குறைய முன்னூறு ஆசிரியர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் தேசம் தொடர்ச்சியான இராணுவ அடக்குமுறைக்குள்" கலம் மெக்ரே அவர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தின செய்தி! Top News
[Thursday 2024-05-30 06:00]

15 வருடங்கள் ஆகியும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, குற்றங்கள் இன்று வரை தொடர்கின்றது. இதனால் உயிர் பிழைத்தோருக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் மிகவும் பெரும் மன உளைச்சலை கொடுக்கின்றது. இவர்களின் நினைவு கூரல் உரிமை கூட மறுக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் தாயகம், அரச பயங்கரவாத பாதுகாப்பு படையினரால் கொடூர அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டறியப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.



ஈரான் அதிபருக்கான இரங்கல் பதிவு! Top News
[Friday 2024-05-24 21:00]

சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு, வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று, தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.



பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு Top News
[Thursday 2024-05-23 21:00]

சந்ததிகள் கடந்தும் தாயகம் இழந்தும் நீதிக்காக போராடும் தமிழ் இளையோர்கள் - பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தில் தமிழர்களின் வலியை உலகுக்கு உணர்த்திய தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு.



ஊழி திரைப்படம் பற்றிய பின்னோட்டம்! Top News
[Tuesday 2024-05-21 21:00]

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 10ம் திகதி இலங்கையிலும், உலகளவிலும் இத்திரைப்படம் உலகளவில் திரையிடப்படவுள்ளது. ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில் இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ம் ஆண்டு கூறிய பின்னர், கிழக்கு மாகாணத்தில் தொடங்கும் கதையே ஊழி திரைப்படம். இந்த திரைப்படம் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு சிறுவனின் வாழ்வு பற்றியும், 2009ம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் இருண்ட யுகங்களை பற்றியும் பேசுகின்றது. இந்த திரைப்படத்தில் ஈழ கலைஞர்கள் , தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.


Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா