Untitled Document
November 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்து சித்தார்த்தன் ஆதரவு Top News
[Thursday 2017-02-16 22:00]

தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு முன்னால் பொதுமக்களுக்கு சொந்தமான 19-1ஃ4 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 3ஆம் திகதி தொடக்கம் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தமது சொந்த நிலங்களையும் வீடுகளையும் பாதுகாப்பு தரப்பினர் விடுவிக்கவேண்டும் என்றும் காணிகள் விடுவித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவோமென்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் போராட்டம் நடாத்திவரும் இடத்திற்கு இன்றுமுற்பகல் நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கருத்துக் கூறிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,

இந்த மக்கள் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக தங்கள் போராட்டத்தினை தற்போது விரிவுபடுத்தியிருக்கின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவினைத் தெரிவிக்கின்றோம். மேற்படி 19-1ஃ4 ஏக்கர் காணியிலே அரசாங்க அதிபரினுடைய அறிவித்தலின்படி அதில் 7ஏக்கர் காணி அரசாங்கத்தினால் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களின் காணியை அவர்களுக்குத் தெரியாமல் சுவீகரிப்பு செய்யமுடியாது. மக்களுக்கு தெரியாமல் காணி சுவீகரிப்பு செய்திருந்தால் அது மிகவும் பிழையான ஒரு நடவடிக்கை. அந்தக் காணிகளுக்கான உறுதிகள் அந்த மக்களிடம் இருக்கின்றன. அவர்கள் அதற்காக எந்த ஒரு இழப்பீடும் இதுவரையில் பெற்றது கிடையாது. மேற்படி ஏழு ஏக்கர் காணி சுவீகரிப்பினை அவர்கள் ஏற்றுக்கொண்டதும் கிடையாது. ஆனால் அந்தக் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வந்திருப்பதாக அரசாங்க அதிபர் வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.

மிகுதியாகவிருக்கும் 10 ஏக்கர் காணியானது தனிநபர் ஒருவரின் பெயரிலே உள்ளது. அந்தக் காணியில் அவரது உறவினர்களின் பிள்ளைகள்தான் குடியிருந்தார்கள். ஆகவே, அதற்கு ஆவணம் இல்லையென்று கூறுவதை ஏற்க முடியாது. அந்தக் காணி தனிநபர் ஒருவருடைய பெயரில் இருந்தாலும் அவரது சந்ததியினர் அங்கு இருப்பதை தவறென்று எவரும் கூறமுடியாது.

இந்தக் காணிகளுக்கு ஆவணங்கள் கைதவறிப் போனதே தவிர ஆவணம் இல்லையென்று கூறுவது தவறு. அவற்றுக்கான ஆவணங்கள் அவர்களின் கைகளில் இருந்தன. அவற்றில் சிலபேரிடம் காணிகளுக்கான உறுதி இருந்தது. சிலபேரின் காணிகளுக்கு நில அனுமதிப் பத்திரம் இருந்துள்ளன. யுத்த இடம்பெயர்வுகள் காரணமாக அவை தவறவிடப்பட்டிருக்கலாமேயொழிய அவர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரணங்கள், அடையாளங்கள் அங்கு இருக்கின்றன. அவற்றுக்கு அரசாங்க அதிபர், உதவி அராங்க அதிபர் மற்றும் கிராம சேவகர்களுடைய ஆதாரபூர்வமான தகவல்களும் நிச்சயமாக இருக்கின்றன.

அடுத்தது வைத்தியசாலை இருந்த 2ஏக்கர் காணியாகும். அதாவது பொன்னம்பலம் வைத்தியசாலை இருந்த பகுதி. ஏற்கனவே அது ஒரு பதிவுசெய்யப்பட்ட வைத்தியசாலையாகும். அந்த 2 ஏக்கரும் ஒரு தனியாருக்குரிய காணி. அந்தக் காணியும் விடுவிக்கப்பட வேண்டும். அது மாத்திரமல்ல, ஏனைய முல்லைத்தீவுpல் சுவீகரிக்கப்பட்ட காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும், அதுபோல் வட்டுவாகலில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். கொக்குளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் இருக்கக்கூடிய பெருந்தொகையான காணிகள்; இன்னமும் உரியமுறையில் கையளிக்கப்படவில்லை. அது மாத்திரமல்ல தனியார் காணிகளில் அத்துமீறிய குடியேற்றங்கள்கூட அரங்கேற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பாக நிச்சயமாக நாம் ஜனாதிபதி, பிரதமர், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட தரப்புக்களுடன் பேசி அவற்றை விடுவிப்பதற்கான அழுத்தங்களை தொடர்ந்து கொடுப்போம் என்று தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com



இந்திய வீட்டு உதவி கிராமம் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டது! Top News
[Friday 2024-11-08 06:00]

மொனராகலை மாவட்டத்தின் மெதகம பிரதேச செயலகப் பிரிவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பீ.எம்.பீ. அதபத்து தலைமையில் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.



மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்! Top News
[Saturday 2024-11-02 08:00]

எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. ஆலங்குளம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



Voice of Need அமைப்பின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது! Top News
[Tuesday 2024-10-15 21:00]

நாடளாவிய ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் பலதரபட்ட தேவைகளை பூர்த்தி செய்து வந்த 'Voice of Need' அமைப்பின்‌ தலைமை அலுவலகம்‌ கொழும்பில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு கடந்த காலங்களில் தேவையுடையோருக்கான இலவச 90 குழாய் நீர் மற்றும் ஆழ் துளை கிணறு திட்டங்களும் . விதவைகளுக்கான கோழி பண்ணை திட்டங்களும் வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் உலர் உணவு திட்டங்களும் போன்ற பல நூறு சேவைகளை இலவசமாக செய்து வந்துள்ளது.



'ஒன்ராறியோ லைன்' கட்டுமானம் குறித்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது! Top News
[Friday 2024-10-11 17:00]

70 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒன்ராறியோ லைன் போக்குவரத்து விரிவாக்கத் திட்ட கட்டுமானப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. 15 நிறுத்தங்களைக் கொண்ட இத்தடவழிப் பாதை, ரொறன்ரோ பெரும்பாகப் பகுதிகளை இணைத்துப் பயண நேரத்தைக் குறைக்கும். இதேவேளை, ஸ்காபரோ நிலக்கீழ் தொடரிவழிப் பாதை நீட்டிப்பு வேலைகளும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதும் நாம் முன்பை விட வேகமாக கட்டுமானங்களை மேற்கொள்கிறோம் என்பதையே காட்டுகிறது.



புத்தளத்தில் மிக விமரிசையாக இடம்பெற்ற கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா வைபவம்! Top News
[Tuesday 2024-10-08 18:00]

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதியுள்ள இரு நூல்களின் வெளியீட்டுவிழா புத்தளம் நகரில் சனிக்கிழமை இரவு (05-10-2024) மிக விமரிசையாக இடம்பெற்றது. புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி ஷாமில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமை வகித்தார். புத்தளம் CREATE இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் "ரகசியங்கள்" , "மைத்துளிகள் மரணிப்பதில்லை" ஆகிய இரு நூல்களே வெளியிட்டு வைக்கப்பட்டன. நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமத் கலந்து கொண்டார்.



கனேடிய தமிழர் பேரவை 2024 ஆம் ஆண்டிற்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தின நிகழ்ச்சி! Top News Top News
[Thursday 2024-10-03 06:00]

கனேடிய தமிழர் பேரவை 2024 ஆம் ஆண்டிற்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்தை செப்டெம்பர் 29, 2024 அன்று, ஒன்ராறியோவின் ஜோர்ஜினாவில் உள்ள சட்டன் மாவட்ட உயர்நிலைப் பள்ளியில் ஜார்ஜினா தீவின் சிப்பேவாஸ் நடத்திய பவ் வாவ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனுசரித்திருந்தது. பாவ் வாவ், "நாவென்ட்வின்" (உறவினர்கள்) என்ற கருப்பொருளில், பாரம்பரிய நடனம், டிரம்மிங் மற்றும் கதைசொல்லல் ஆகியவை இடம்பெற்றன, இது CTC க்கு முதல் குடிகளின் கலாச்சாரத்துடன் ஈடுபடுவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை பிரதிபலிக்கும் அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது.



கனடா கந்தசாமி ஆலய நிர்வாக இயக்குனர் முத்து செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மூன்று வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிட்டார்! Top News
[Friday 2024-09-27 18:00]

முதலில் யாழ் போதனா வைத்தியசாலையின், பல காலம் வடக்கு பிராந்தியத்தில் மக்களுக்கு பெரும் சேவையாற்றுபவர்களும், பலரின் உயிர்களை காப்பாற்றியவர்களுமான இதய சிகிச்சை நிபுணர்களான வைத்திய கலாநிதி லக்ஷ்மன் மற்றும் வைத்திய கலாநிதி குருபரன் ஆகியோரையும் அதற்கு பின் கடந்த மூன்று ஆண்டுகளாக திறம்பட இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு பல உயிர்களை மீட்டு தந்தவருமான நிபுணர் வைத்திய கலாநிதி சிவசங்கர் மற்றும் அனஸ்தீசியா நிபுணரான வைத்திய கலாநிதி ரமணன் ஆகியோரை சந்தித்து அங்குள்ள நிலைமைகளை அறிந்தார்.



பிரம்டனில் தமிழின அழிப்பு நினைவிட அடிக்கல் நாட்டல்! Top News
[Friday 2024-08-23 06:00]

ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது கனடாவில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு தமிழின அழிப்பு நடைபெற்றது என்பதற்கான சர்வதேச அங்கீகாரம், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் போன்றவற்றின் ஒரு படிநிலையாக அமைகிறது. தமிழர்கள் மீதான இன அழிப்பை மறுதலிப்பவர்கள் இந்நிகழ்வைச் சீர்குலைக்க முனைந்த போதிலும், பிராம்ப்டன் நகரமுதல்வர் பட்றிக் பிரவுன், பிரம்ரன் தமிழ் ஒன்றியம், கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் பேராதரவுடன் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.



தமிழின அழிப்பு நினைவகம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு - ஆகஸ்ட் 14, 2024! Top News
[Tuesday 2024-08-20 21:00]

ஆகஸ்ட் 14, 2024ல் கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் அமைந்திருக்கும் சிங்குசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வானது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பிற்கான அனைத்துலக அங்கீகாரம், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி ஆகியவற்றை அடைவதற்கான தமிழ் மக்களின் நீண்ட பயணத்தில், இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.



முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை சமூகங்கள் பயன்பெறும் வகையில் ஒன்ராறியோ விரிவாக்குகிறது! Top News
[Friday 2024-07-19 06:00]

ஒன்ராறியோ அரசாங்கம், உடல்நலம், உடற்பயிற்சி, சமூக ஒருங்கிணைப்பு போன்ற அமைப்புகளை மேம்படுத்தி சேவைகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALCs) விரிவுபடுத்துகிறது. இது தொடர்பாக அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கும்போது, "முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALC) விரிவுபடுத்துவதன் மூலம், பெருமளவு முதியவர்கள், சுறுசுறுப்பானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கையை வாழத் தேவையான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளோம்" என்றார். மாநிலம் முழுவதும் முந்நூறுக்கும் அதிகமான முதியோர் வாழும் செயற்றிறன் மையங்கள் (SALC) வெற்றிகரமான நிலையில் இயங்கிவரும் வேளையில், இம்முக்கிய திட்டங்களை இணைந்து வழங்க உள்ளூர் நிறுவனங்களையும் அரசாங்கம் அழைக்கிறது.



மல்லாவி வைத்தியசாலைக்கு செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கிவைப்பு! Top News
[Monday 2024-06-10 21:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் நேற்று ஞாயிற்று கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வானது மல்லாவி ஆதார வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 3,367,000 செலவில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.



கனடாவில் அறிவக மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்! Top News
[Monday 2024-06-03 21:00]

நடப்புக் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வு எட்டுத் தேர்வு மையங்களில் இனிதே நடைபெற்று முடிந்தது. கனடாவில் உள்ள 200 இற்கும் மேற்ப்பட்ட அறிவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இத் தேர்விற்கு முகம் கொடுத்தனர். தேர்வுப் பணிகளில் ஏறக்குறைய முன்னூறு ஆசிரியர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் தேசம் தொடர்ச்சியான இராணுவ அடக்குமுறைக்குள்" கலம் மெக்ரே அவர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தின செய்தி! Top News
[Thursday 2024-05-30 06:00]

15 வருடங்கள் ஆகியும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, குற்றங்கள் இன்று வரை தொடர்கின்றது. இதனால் உயிர் பிழைத்தோருக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் மிகவும் பெரும் மன உளைச்சலை கொடுக்கின்றது. இவர்களின் நினைவு கூரல் உரிமை கூட மறுக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் தாயகம், அரச பயங்கரவாத பாதுகாப்பு படையினரால் கொடூர அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டறியப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.



ஈரான் அதிபருக்கான இரங்கல் பதிவு! Top News
[Friday 2024-05-24 21:00]

சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு, வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று, தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.



பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு Top News
[Thursday 2024-05-23 21:00]

சந்ததிகள் கடந்தும் தாயகம் இழந்தும் நீதிக்காக போராடும் தமிழ் இளையோர்கள் - பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தில் தமிழர்களின் வலியை உலகுக்கு உணர்த்திய தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா