Untitled Document
December 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அனைத்துலகத் தமிழர் பேரவை! Top News
[Wednesday 2024-12-11 17:00]

"அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் அங்குரார்ப்பன வைபவம் டொரென்டோ மாநகரில் கடந்த 8ஆம் திகதி (December 8 2024) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. தாயகத்தை நேசிக்கின்ற கனடா வாழ் மக்கள் மாத்திரமன்றி உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இணைய வழியாகவும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்புடன் இணைந்து பணியாற்றவும் உறுதியளித்தனர். புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நூற்றுக் கணக்கான அமைப்புகள் தாயகத்தை நோக்கிய அரவணைப்புக் கரங்களுடன் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் தாயகத்தின் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளிலும் அரசியல் கட்டமைப்புக்களை முன்னோக்கி நகர்த்துவதிலும் பணியாற்றி வருகின்றன. இந்த ஒரு பின்னணியில் இன்னும் ஒரு அமைப்பு தேவையா என்ற கேள்விகள் எழும்பலாம்.

2009 ஆம் ஆண்டில் தாயக மண்ணில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் நகர்வுகள் மிக வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசிய அவசரத் தேவைகளுக் கூடே தமிழ் மக்களின் இனப் பரம்பலை மீளக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை புலம்பெயர் தமிழ் மக்களிடையே விஷ்வரூபம் எடுத்து நிற்கின்றது. இதற்கும் அப்பால் தாயக "தமிழர் அரசியல்"; என்பது திசை மாறியதன் விளைவு இந்த அரசியல்மீது தாயக மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இதனால் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தாயக மண்ணில் நேரடியாக நிலை கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்த ஒரு பின்னணியில் "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் வருகை முக்கியத்துவம் பெறுகின்றது என்பதுதான் டொரென்டோ மாநகரில் நடைபெற்ற "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் அங்குரார்ப்பன வைபவத்தில் கலந்து கொண்டோரினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களினதும் ஏகோபித்த முடிவாக அமைந்தது.

"அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நிமால் விநாயகமூர்த்தி கருத்துரைக்கையில் 2009 க்குப் பின் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் சிவப்பு எச்சரிக்கையாகும். "தாயகம்"; என்பது தாயகத்தில் உள்ள மக்களுக்கு மாத்திரமல்ல புலம்பெயர் மக்களுக்கும் அத்திவாரமாகும். தாயக மண்ணின் அத்திவாரம் அசைக்கப்படுவதையும் தகர்க்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது. குறிப்பாக புலம்பெயர் சமூகம் இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதனை இலக்காகக் கொண்டே"அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது. இதனை முன்னோக்கி நகர்த்த புலம்பெயர் தமிழர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இருந்து வருகைதந்நத சட்டத்தரணி விக்னேஸ்வரா தனது வாழ்த்துரையில்

" போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் தலைமை இன்றி அரசியல் அநாதைகளாக உள்ளனர். தாயக மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியதாக மாறி விட்டது. கடந்தகால தியாகங்கள ;மறக்கப்பட்டுள்ளன. தியாகங்கள் செய்தவர்களும் அதற்கு உறுதுணையாக இருந்து தியாகங்களைச் செய்த தாயக மக்களும் புறந்தள்ளப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியமே கேள்விக்குள்ளாக்பட்டுவிட்டது. இதற்கும் அப்பால் தமிழ்த் தேசியம் ன்பது "நாடாளுமன்ற மாகாணசபைகளுக்கான கதிரைகளுக்கான "தேசியமாக" மாறிவிட்டது. இத்தகைய அபாயகரமான போக்கில் இருந்து தாயகமும் தமிழ்த் தேசியமும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். இதற்கு "அனைத்துலகத் தமிழ் பேரவை" அமைப்பின் வருகை அவசியமாகுகின்றது என்று குறிப்பிட்டார்.

இணையவழி வாழ்த்து

இணைய வழியூடாகக் கலந்து கொண்டவர்களில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தனது வாழ்த்துரையில் ஈழத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டியது அவசர அவசியத் தேவையாக இருக்கின்றது.தமிழ் மக்களின் குறிப்பாக தாயக மண்ணின் பொருளாதார சமூக மேம்பாடு பண்பாடு மேம்படுத்தப்படல் வேண்டும். தாயக அரசியல் கபளீகாரம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஈழத் தமிழர் என்ற வகையில் புலத்திலும் தாயகத்திலும் ஒன்றிணைய வேண்டும். இதனை முன்னெடுக்க "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின்" வருகை அவசியமானது எனக் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொண்ட பேராசிரியர் செல்வநாதன் இளையதம்பி கருத்துரைக்கையில் தமிழர் போராட்டத்தை முன் நோக்கி நகர்த்த ஐந்து முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டார்.

1. தாயகத்தில் மக்கள் தொகை குறைவடைந்து கொண்டு போகின்றது. மறுபுறம் தமிழர்களின் இனப்பரம்பல் பறி போய்க் கொண்டிருக்கின்றது. மக்கள் தொகை இன்றி போராட்டத்தை நகர்த்த இயலாது. கூடுதலான பிள்ளைகளைப் பெற்றால் பராமரிப்பது கடினம் என்ற நிலையில் தாயக மக்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.எனவே கூடுதல் பிள்ளைகளைப் பெறுபவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும். இல்லையேல் இன்னும் இரண்டொரு வருடங்களில் தாயகத் தமிழர் இனவிகிதாசாரத்தில் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படுவர்.

2.பெரும்பாலான இளைஞர்கள் யுவதிகள் வெளிநாடு போக விரும்புகின்றனர். தாயகத்தில் பொருளாதாரம் கட்டி எழுப்பப்படல் வேண்டும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படல் வேண்டும். பொதுத் தொழில் கட்டமைப்பு தனியார் தொழிற் துறை என்பன கட்டி எழுப்பப்பட வேண்டும். தாயக விவசாயம் மேம்படுத்தப்பட வேண்டும்.

3.தாயகக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில பாடசாலைகள் கூடுதலான வளங்களை புலம் பெயர் அமைப்புக்களிடம் இருந்து பெறுகின்றன. பெரும்பாலான பாடசாலைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகின்றன.இந்த நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி வரை தமிழ் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

4.தாயகத்தில் பண்பாடு கலாசாரம் என்பன சீரழிந்து கொண்டு போகின்றது. மதுபாணம் மற்றும் போதைவஸ்த்து பாவணை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சீரழிவிற்கு தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு காரணம். தாயக மண் போதைவஸ்த்து மதுபாண பாவணையில் இருந்து மீட்டெடுக்கப்படல் வேண்டும்.

5. தாயக மக்களின் வாழ்வாதாரம் கட்டி எழுப்பப்பட வேண்டும். வதிவிட வசதியை உறுதிப்படுத்துவதுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதுடன் மக்கள் நிம்மதியாக வாழ உதவி செய்ய வேண்டும். தாயகத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கின்றன அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். யூதர்கள் போன்று தாயக பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். தாயகப் பொருளாதாரத்தைக் கட்டி ழுப்பினால் மக்கள் தாமாக அரசியல் செய்வர்.

ராமு மணிவண்ணன் தமது வாழ்த்துரையில் " 2009 க்குப் பின் தமிழர்களின் தலைமையில் ஒரு வெற்றிடம் உள்ளது. வரலாறு கற்றுத்தந்த பாடம் என்ன? இன்றும் ஈழத் தமிழர்கள் தேசிய அடையாளத்தையும் வாழ்வாதாரத்தையும் தேட வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இணைந்து செல்ல வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

லோகன் லோகேந்திரலிங்கம் வாழ்த்துரை வழங்கியதுடன் "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

லிங்கஜோதி வினாசித்தம்பி ரஜீவ் முத்துராமன்பிரசன்னா பாலச்ந்திரன் பாலச்சந்திரன் நாகலிங்கம் மற்றும் பலரும் கருத்துரை வழங்கினர்.வாழ்த்துரைகளை வழங்கினர்.இந் நிகழ்ச்சியை கென் கிருபா ஒறுங்கிணைத்து வழிநடத்தினார். இறுதியில் மரியராசா மரியாம்பிள்ளை நன்றியுரை வழங்கினார்.

  
  
   Bookmark and Share Seithy.com



புதிய வானம் மற்றும் கிரீண் சேனல் அமைப்பும் இணைந்து இலங்கையில் நடாத்திய சர்வதேச விருது விழா 2024! Top News
[Tuesday 2024-12-10 08:00]

இலங்கை இந்தியா மற்றும் கனடா ஐரோப்பா நாட்டிலும் இந்திய பல்வேறு துறைகளில் சாதனையாளர்களுக்கு புதிய வானம் மற்றும் கிறீண் சேனல் இணைந்து வழங்கும் விழா மாதவன் தனலட்சுமி மற்றும் மனி ஸ்ரீ காந்த் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் மிக விமர்சையாக நடைபெற்றது‌. இதன் போது இலங்கையை சேர்ந்த இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னாருக்கு 'சிறந்த சமூக சேவையாளர் ' விருது வழங்கி வைக்கப்பட்டதோடு மூத்த ஊடகவியலாளர் தினகரன் செந்தூரம் வார மஞ்சரி ஆசிரியர் ஈஸ்வர லிங்கம் . பல்துறை ஆளுமை அலைகலை வட்ட ஸ்தாபக தலைவர் ராதா மேத்தா. கவிதாயினி ஊதாப்பூ சிமாரா அலி என்பவர்களோடு மேலும் பல ஆளுமைளுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டதோடு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்திருந்த பல ஆளுமைகளுக்கும் விருது மற்றும் கௌரவம் வழங்கி வைக்கபட்டனர்.



ஐயமிட்டுண் நிகழ்ச்சி செயல் திட்டம்! Top News
[Saturday 2024-12-07 18:00]

ஐயமிட்டுண் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடந்த மாவீரர் தினத்தன்று (27/11/2024) முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பை சேர்ந்த 35 மாவீரர் குடும்பங்களுக்கு தலா 5000/= பெறுமதியான உலருணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. இதற்கு பங்களிப்பு வழங்கிய பைரவி நுண்கலைக்கூடம், சஹானா இசைக்கல்லூரி மற்றும் சிகரம் கல்விச்சாலை ஆகியவற்றுக்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.



அகில இலங்கை கிக்பொக்சிங் போட்டியில் வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவர் தங்கப் பதக்கம் வென்றார்! Top News
[Wednesday 2024-12-04 08:00]

2024 நவம்பர் மாதம் 29 ஆம்‌ திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரை நாவலப்பிட்டிய ஜயதிலக்க விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இங்கை கிக்பொக்சிங் போட்டித் தொடரில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் *எம்.என்.‌ நபீர் அஹமட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.* வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் இந்த மாணவர் வெலம்பொடையைச் சேர்ந்த M.N.நலீம் S A. நசீரா தம்பதியினரின் புதல்வராவார்‌.



மாவீரர்நாள் 2024 -யேர்மனி, டோட்முண்ட்! Top News
[Monday 2024-12-02 07:00]

27.11.2024 அன்று யேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. தமிழீழ மண்மீட்புப் போரிலே வீரகாவியமான மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து, ஏராளமான மக்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தார்கள். மாவீரர்நாள் நிகழ்வு மதியம் 12:55 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் தொடங்கிவைக்கப்பட்டது. பொதுச்சுடரை கடந்த சில வருடங்களாக எங்கள் மாவீரர்நாள் நிகழ்வுகளை பதிவுசெய்யும் சக ஒளிப்படக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் ஒளிப்படக்கலைஞர் ( தமிழ் மெமோறிஸ்) திரு. சுரேஸ் சங்கரப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார்.



கனடா பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்ட முதல் தமிழ் நடிகர் கருணாஸ்! Top News
[Thursday 2024-11-28 21:00]

ஈழப் போரின் போது மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றிய மருத்துவப் போராளிகளின் அசாத்திய பங்களிப்பையும், தமிழர் போர் மரபில் கடைபிடித்த மருத்துவ அறத்தையும் பறைசாற்றும் வகையில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் “ சல்லியர்கள்” இந்த படத்தை இயக்குநர் கிட்டு அவர்கள் இயக்கியுள்ளார். நடிகர் கருணாஸ் & ப. கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி உலகெங்கும் இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் கருணாஸ் அவர்கள், சல்லியர்கள் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதற்காக பிரான்சு, இலண்டன், சுவிஸ்சர்லாந்த், நோர்வே, உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றார். புலம்பெயர் தமிழர்களின் வரவேற்பில் சல்லியர்கள் திரைப்படம் பேராதரவைப் பெற்றுள்ளது.



அரசபாளையத்தில் மாவீரர் நாள் அஞ்சலி 2024! Top News
[Thursday 2024-11-28 21:00]

தமிழீழப் போரில் இன்னுயிர் ஈந்த வீரவேங்கைகளுக்கு அரசபாளையத்தில் மாவீரர் நாள்அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர். தமிழீழ விடுதலையை நெஞ்சில் ஏந்தி களமாடிய வீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றி புகழேந்தி தங்கராசு அவர்கள் மாவீரர்களின் ஈகங்கள், வீர களமுனைச் செய்திகள், ஈழ வரலாற்றில் தமிழினத்தின் எழுச்சிகள் பற்றி விரிவான உரை ஆற்றி, மாண்ட விடுதலை வீரர்களை தமிழர்களின் நெஞ்சில் படமாகச் செதுக்கினார். தொடர்ந்து மாவீரர்களின் எழுச்சி பாடல்களுக்கு கலைநிகழ்வுகள் நடந்தேறின. நிகழ்சிகளை தமிழ் தமிழர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.



தாயக உறவுகளுக்கு வீட்டு திட்ட பணியில் கனடா குமரன் விளையாட்டு கழகம்! Top News
[Friday 2024-11-22 21:00]

கனடாவில் சுமார் 41வருடங்களுக்கு மேலாக தனது செயற்பாட்டை தொடரும் யாழ் கோண்டாவில் கிழக்கு இராமகிருசுண மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் "குமரன் விளையாட்டு கழகம்" தனது செயற்பாடு பற்றியும் தாயக உறவுகளுக்கு உதவி வரும் வீட்டு திட்டம் பற்றியும் வெளிப்படுத்தும் நோக்கோடு கடந்த 15 - 11- 2024 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் 18, Lee Centre Dr. Scarborough என்னும் முகவரியில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றிருந்தது.



இந்திய வீட்டு உதவி கிராமம் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டது! Top News
[Friday 2024-11-08 06:00]

மொனராகலை மாவட்டத்தின் மெதகம பிரதேச செயலகப் பிரிவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பீ.எம்.பீ. அதபத்து தலைமையில் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.



மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்! Top News
[Saturday 2024-11-02 08:00]

எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. ஆலங்குளம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



Voice of Need அமைப்பின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது! Top News
[Tuesday 2024-10-15 21:00]

நாடளாவிய ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் பலதரபட்ட தேவைகளை பூர்த்தி செய்து வந்த 'Voice of Need' அமைப்பின்‌ தலைமை அலுவலகம்‌ கொழும்பில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு கடந்த காலங்களில் தேவையுடையோருக்கான இலவச 90 குழாய் நீர் மற்றும் ஆழ் துளை கிணறு திட்டங்களும் . விதவைகளுக்கான கோழி பண்ணை திட்டங்களும் வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் உலர் உணவு திட்டங்களும் போன்ற பல நூறு சேவைகளை இலவசமாக செய்து வந்துள்ளது.



'ஒன்ராறியோ லைன்' கட்டுமானம் குறித்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது! Top News
[Friday 2024-10-11 17:00]

70 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒன்ராறியோ லைன் போக்குவரத்து விரிவாக்கத் திட்ட கட்டுமானப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. 15 நிறுத்தங்களைக் கொண்ட இத்தடவழிப் பாதை, ரொறன்ரோ பெரும்பாகப் பகுதிகளை இணைத்துப் பயண நேரத்தைக் குறைக்கும். இதேவேளை, ஸ்காபரோ நிலக்கீழ் தொடரிவழிப் பாதை நீட்டிப்பு வேலைகளும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதும் நாம் முன்பை விட வேகமாக கட்டுமானங்களை மேற்கொள்கிறோம் என்பதையே காட்டுகிறது.



புத்தளத்தில் மிக விமரிசையாக இடம்பெற்ற கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா வைபவம்! Top News
[Tuesday 2024-10-08 18:00]

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதியுள்ள இரு நூல்களின் வெளியீட்டுவிழா புத்தளம் நகரில் சனிக்கிழமை இரவு (05-10-2024) மிக விமரிசையாக இடம்பெற்றது. புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி ஷாமில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமை வகித்தார். புத்தளம் CREATE இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் "ரகசியங்கள்" , "மைத்துளிகள் மரணிப்பதில்லை" ஆகிய இரு நூல்களே வெளியிட்டு வைக்கப்பட்டன. நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமத் கலந்து கொண்டார்.



கனேடிய தமிழர் பேரவை 2024 ஆம் ஆண்டிற்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தின நிகழ்ச்சி! Top News Top News
[Thursday 2024-10-03 06:00]

கனேடிய தமிழர் பேரவை 2024 ஆம் ஆண்டிற்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்தை செப்டெம்பர் 29, 2024 அன்று, ஒன்ராறியோவின் ஜோர்ஜினாவில் உள்ள சட்டன் மாவட்ட உயர்நிலைப் பள்ளியில் ஜார்ஜினா தீவின் சிப்பேவாஸ் நடத்திய பவ் வாவ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனுசரித்திருந்தது. பாவ் வாவ், "நாவென்ட்வின்" (உறவினர்கள்) என்ற கருப்பொருளில், பாரம்பரிய நடனம், டிரம்மிங் மற்றும் கதைசொல்லல் ஆகியவை இடம்பெற்றன, இது CTC க்கு முதல் குடிகளின் கலாச்சாரத்துடன் ஈடுபடுவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை பிரதிபலிக்கும் அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது.



கனடா கந்தசாமி ஆலய நிர்வாக இயக்குனர் முத்து செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மூன்று வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிட்டார்! Top News
[Friday 2024-09-27 18:00]

முதலில் யாழ் போதனா வைத்தியசாலையின், பல காலம் வடக்கு பிராந்தியத்தில் மக்களுக்கு பெரும் சேவையாற்றுபவர்களும், பலரின் உயிர்களை காப்பாற்றியவர்களுமான இதய சிகிச்சை நிபுணர்களான வைத்திய கலாநிதி லக்ஷ்மன் மற்றும் வைத்திய கலாநிதி குருபரன் ஆகியோரையும் அதற்கு பின் கடந்த மூன்று ஆண்டுகளாக திறம்பட இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு பல உயிர்களை மீட்டு தந்தவருமான நிபுணர் வைத்திய கலாநிதி சிவசங்கர் மற்றும் அனஸ்தீசியா நிபுணரான வைத்திய கலாநிதி ரமணன் ஆகியோரை சந்தித்து அங்குள்ள நிலைமைகளை அறிந்தார்.



பிரம்டனில் தமிழின அழிப்பு நினைவிட அடிக்கல் நாட்டல்! Top News
[Friday 2024-08-23 06:00]

ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது கனடாவில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு தமிழின அழிப்பு நடைபெற்றது என்பதற்கான சர்வதேச அங்கீகாரம், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் போன்றவற்றின் ஒரு படிநிலையாக அமைகிறது. தமிழர்கள் மீதான இன அழிப்பை மறுதலிப்பவர்கள் இந்நிகழ்வைச் சீர்குலைக்க முனைந்த போதிலும், பிராம்ப்டன் நகரமுதல்வர் பட்றிக் பிரவுன், பிரம்ரன் தமிழ் ஒன்றியம், கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் பேராதரவுடன் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா