Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம்! Top News Top News
[Monday 2025-01-20 21:00]

இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் எனும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது 17-01-2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் லண்டனில் உள்ள கிறிஸ்ரல் மண்டபத்தில் இடம் பெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கொண்டாடுவதற்கான சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமான கௌரவத்திற்குரிய திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள முக்கியமான பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்கள், சட்டத்துறை சார்ந்தவர்கள், பொறியியலார்கள், தொழில்சார் வல்லுநர்கள், வர்த்தக பிரமுகர்கள், நீண்டகால தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக பிரதிநிதிகள் ஆகியோரும் பிரித்தானியா தமிழர் பேரவையுடன் இணைந்து சிறப்பித்தார்கள்.

தொடர்ந்து திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கான சிறப்புக் காணொளி ஒன்று திரையிடப்பட்டது. இக் காணொலியில் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதையும், இவருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவைக்குமிடையேயான நீண்ட கால உறவு குறித்து விவரணப்படுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளர் கவுன்சிலர் செல்வி. சர்மிளா வரதராஜ் அவர்கள் உரையாற்றினார். இவர் மிக குறைந்த வயதில் வொன்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

“பல்லின பாரம்பரியத்தினை அடிப்படையாக கொண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி அதிகாரங்களை பகிர்ந்து சனநாயக பாராளுமன்ற “ஒன்றிய” அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மாறாக சிறிலங்கா தன்னை தானே சிதைத்து கொள்ளும் ஒற்றை இன, ஒற்றை மத, ஒற்றை மொழி நாடாக சம உரிமைகளை மறுதலித்து, தொடரும் வன்முறை சுழற்சி, படுகொலைகள் என 30 ஆண்டு கால யுத்தத்தினை தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பு அதனை வங்குரோத்து (Bankruptcy) நிலைமைக்கு இட்டு சென்றுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, ஐ.நா. மனித உரிமைகள் கழகத்துடனும் அதன் உறுப்பு நாடுகளுடனும் நீண்ட காலமாக செயல்பட்டு வருவதுடன் ஐ.நா.வில் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளை தற்போது இருக்கும் நிலைக்கு முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) உறுப்பு நாடுகள், உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை’ (SLAP) அமைத்து சாட்சியங்களை திரட்டி வருகின்றது. குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கு சரியான ஆதாரங்கள் தேவை. BTF ஒரு குற்றவியல் விசாரணை பொறிமுறையை நிறுவுவதற்கான அடுத்த படிகளில் உறுப்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா அண்மையில் விடுத்த அறிக்கையில், "தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்" என குறிப்பிட்டிருந்தது.

ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில், சுதந்திரமாக வாழக் கூடிய எதிர்காலம் உருவாகும் வரை BTF உலகெங்கும் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்” என சர்மிளா வரதராஜ் தன் உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

மண்ணும் மக்களும் அவர் தம் சமூக, பொருளாதார, அரசியல் பலம் தாயகத்தில் நாளாந்தம் திட்டமிட்ட சிதைவுக்குள்ளாக்கப்பட்டு மீள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. இதன் முழு பரிமாணத்தையும் ஆராய்ந்து அதற்கான சரியான மூலோபாயத்தின் அடிப்படையில் என்னென்ன வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற விபரங்களை சுருக்கமாக துல்லியமான புள்ளி விபரங்களுடன் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் ரவி குமாரின் உரை அமைந்தது. குறிப்பாக மீள் குடியேற்றம், மீள் கட்டுமானம், சமூக பொருளாதார வலுவூட்டல், தாயக மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு, அதற்காக வெளி சக்திகளின் மூலம் பிரயோகிக்க வேண்டிய அழுத்தம் கொடுக்கும் பொறிமுறைகள் என்பன ஒரு வழி வரைபடமாக முன் வைக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொண்டு வரும் தாக்குதல் மற்றும் ஈழத் தமிழர்களின் குறைவடைந்து வரும் இன விகிதாசாரம் பற்றிய ஓர் காணொலியும் காட்சிப்படுத்தப்பட்டமையானது இந்நிகழ்வின் ஓர் சிறப்பம்சமாகும்.

சர்வதேச சட்டங்களும் ஒப்பந்தங்களும் அவற்றை மீறிய சிறிலங்காவின் போர்க் குற்றங்கள், இனவழிப்பு நடவடிக்கைகளும் குறித்து உரையாற்றிய சட்டவாளரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் நிருவக உறுப்பினர்களில் ஒருவருமான கலாநிதி நகுலேசன் அவர்கள் மேற்படி அட்டூழிய குற்றங்களை ஆவணப்படுத்தி சர்வதேச பொறிமுறைகளை பயன்படுத்தி சட்டரீதியாக தீர்வு காணும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முயற்சிகளை விபரித்திருந்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த திருமதி வானதி சீனிவாசன் அவர்களின் உரை நடைபெற்றது. இந்திய - ஈழத்தமிழர் உறவுப்பாலமானது செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே இந்திய - ஈழத்தமிழர் இடையே உறவானது, உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக கலாச்சார ரீதியாக இணைந்திருக்கக் கூடிய பாதைதான், இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாதை. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கக் கூடிய பிரச்சனையானது, பல்வேறு பரிமாணங்கள், பல்வேறு வடிவங்களில் மாறிக் கொண்டே இருக்கக் கூடிய சூழலில் இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சி பிரதிநிதியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் வந்திருக்கும் வகையில், ஒரு நீண்ட காலப் பிரச்சனைக்கான ஓர் ஒற்றைத் தீர்வு என்பதை யாராலும் முன் வைக்க முடியாது. ஆனால் இதற்கான தீர்வு ஒரு தொடர்ச்சியான முயற்சி. 15 ஆண்டுகளுக்கு மேலாக BTF வேலை செய்து கொண்டிருக்கிறது. இதே சமயத்தில் உலகத்திலே பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி செயற்பட்டு வருகின்றார்கள். இந்தியாவில் வாழும் இலங்கை மக்கள் எவ்வாறு தங்களை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் இணைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியும். பாரதிய ஜனதா கட்சி உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயகக் கட்சியாக வளர்ந்து வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவைப் பேணுவதென்பதும் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத் துறையின் கொள்கைகளுடன் பொருத்திப் பார்ப்பதென்பதும் முக்கியமானது. ஒரு நாடானது பல்வேறு தரப்பட்ட இராஜதந்திரங்களுடன் தான் செயற்படும்.

2014இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசியதுடன் நின்று விடாது, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்களுடன் தைப் பொங்கல் விழாவைக் கொண்டாடினார் என்ற செய்தி, அவர் யாழ்ப்பாண மக்களுடன் நிற்கிறேன், அவர்களுக்கென்று இருக்கின்ற அந்த நீண்டகால கோரிக்கையை நான் இலங்கை மண்ணிலே உங்கள் முன் வைக்கிறேன் என்று அந்த நாட்டு பாராளுமன்றத்திலே உரையாற்றிய ஒரு இந்தியப் பிரதமர்.

யாழ்ப்பாணத்திலே ‘Multi Cultural Center’ முழுவதும் இந்திய அரசின் சார்பாக கட்டி முடிக்கப்பட்டது. இரயில்வே திட்டங்களுக்கான நிதி உதவி, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி உதவி, Power Projects, மற்றும் சிறப்பு நிதி உதவி திட்டங்கள், Soft Loan போன்றவற்றை இந்திய அரசானது இலங்கை அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த போது உதவியது. இலங்கை அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தால் அங்கே தவிக்கப் போவது தமிழ் மக்களின் வாழ்வாதாரம் தான். இலங்கை தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிரதமர் முனைந்து கொண்டிருக்கிறார்.

மேலும், ‘வான்வழி’, ‘கடல் வழி’ தொடர்பானது 40 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியில், யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி வான் வழி விமான சேவை நடைபெற்றது. ‘கடல் வழி’ போக்குவரத்து பற்றிய தகவல்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே BTF ஐ சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் டெல்லி வந்த போது, அமைச்சர்களைச் சந்தித்த பின்னர், எப்படி படகு சேவையை ஆரம்பிக்கலாம் என்று ஆலோசனை செய்த பின், அமைச்சர்களுடன் பேசி, புதுச்சேரியிலிருந்து படகு போக்குவரத்தை தொடக்கி வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடிதான். இன்று நாகபட்டிணத்திலிருந்து பயணியர் போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கூட இந்த பயணங்கள் போக்குவரத்து திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான விழாவை இந்திய அரசு நடத்தியது. இந்திய அரசு அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தை செயல்படுத்துவதோடு மட்டுமின்றி இலங்கையிலும் அதைச் செயற்படுத்தியது. மிகவும் ஒரு இக்கட்டான சூழலில் இந்திய அரசு சிறிது சிறிதாக ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. ஈழத் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகள், அந்த நாட்டிலே அவர்கள் சம உரிமையோடு வாழ்வதற்கான அங்கீகாரமும், அவர்களுக்கென புதிதாக உருவாக்கப்பட வேண்டிய தொழில் வாய்ப்புகளும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் உரிமைகளை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்ற தெளிவு, உல‌க நாடுகளில் இருக்கக்கூடிய அமைப்புகளின் உதவிகள் போன்ற பல்வேறு நிலையில், நீங்கள் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் அடையாளம், எங்கள் மக்களின் எதிர்காலமென தொடர்ந்து பணிகளைச் செய்கிறீர்கள். ஒரே குரலாக இது இருக்க வேண்டும். ஒரே பாதையை நோக்கியதாகவும் இருக்க வேண்டும். குரலில்லாத மனிதர்களுக்காக வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களுக்காக, வாழ்க்கையின் நம்பிக்கைக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்காக நீங்கள் பயணியுங்கள். ஈழத் தமிழர்கள் உலகின் எல்லா நாடுகளிலும் நிறைந்து தம் மொழியைக், கலையை, சிறந்த சிந்தனையை, தன் நிலையை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பின் திருமதி வானதி சீனிவாசன் அவர்களிடம் இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் எழுதப்பட்டு, கேட்கப்பட்ட வினாக்களுக்கு திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தெளிவாகவும் பதிலளித்து இருந்தமையானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், வரலாற்றில் முதன் முறையாக கடல் படை ஒன்றினை கட்டி எழுப்பி கடல் வழியே சென்று தூர தேசங்களை வசப்படுத்தி பேரரசினை உருவாக்கிய சோழர் வலிமையை எடுத்தியம்பும் வகையில் ஒரு காணொலி காட்சிப்படுத்தப்பட்டமையானது வந்திருந்த அனைவரினது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

மில்ரன்கீன்ஸ் நடன ஆசிரியை திருமதி. சியாமா சொரூபநாதன் அவர்களின் மாணவிகளான நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

“சக்கரக்கட்டி” எனத் தொடங்கும் ‘தைப் பொங்கல்’ பாடலானது பிரித்தானிய தமிழர் பேரவையின் கலைப் பிரிவால் உருவாக்கப்பட்டு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவில் பெருமையுடன் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப் பாடல் ஈழப் போரினால் பாதிக்கப்பட்ட இரு கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இப் பாடலை எழுதியவர் தமிழீழத்தின் கலைஞர் திரு. தூ.வீரா அவர்கள் ஆவார். பாடலை இசையமைத்தவர் தமிழீழத்தின் கலைஞர் இசைப்பிரியன் ஆவார். வளர்ந்து வரும் இளம் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி, அவர்களை உள்வாங்கி பாடப்பட்ட இப் பாடல், உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்காக தமிழர்களிடம் ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டிய கடமை இருப்பதை வலியுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

மேலும், ‘Voice Art’ மாணவர்களால் ‘மகளி’ என்ற பாடல் பெண்களை முதன்மைப்படுத்தும் பாடலாகப் பார்க்கப்படுகின்றது. இப் பாடலை இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகரும், பாடகருமான திரு. ஜீ.வி.பிரகாஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். இப் பாடலை ‘Voice Art’ பிரித்தானியா பாராளுமன்றத்தில் பெருமையுடன் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றியுரையுடன் இந் நிகழ்வானது சிறப்பாக நிறைவுற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com



இளம் குரலில் ஒலித்த ஆன்மீகத் தேன்! – செல்வி தியா இளங்கீரனுக்குப் பாராட்டுகள்! Top News
[Thursday 2026-11-05 07:00]

கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் ஈழத்தமிழ்ச் சிறுமியான செல்வி தியா இளங்கீரன் அவர்கள், கனடாவில் முதன்முறையாகக் கந்த சஷ்டி கவசத்தைத் தனது இனிய குரலில் பாடி இசை வடிவில் வெளியிட்டிருப்பது பெருமகிழ்ச்சியும் பாராட்டுக்குரியதுமான ஒரு சிறப்பான நிகழ்வாகும். முருகப்பெருமானின் அருளையும், பக்தியின் மகத்துவத்தையும் எடுத்துரைக்கும் கந்த சஷ்டி கவசம், தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ள ஓர் அருள்மிகு பக்திப் பாடலாகும். அத்தகைய புனிதமான பாடலை, இளமையின் இனிமையும் பக்தியின் ஆழமும் கலந்த தனது மழலைக் குரலில் தியா அவர்கள் பாடியிருப்பது கேட்போர் மனங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துகின்றது.



கனடாவில் இலங்கைத் தமிழ் பாடகி லக்ஷ்மிக்கு புதிய அங்கீகாரம்! Top News
[Tuesday 2026-11-03 07:00]

இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட கனடா வாழ் பாடகி லக்ஷ்மி சிவநேஸ்வரலிங்கம் (Luksimi Sivaneswaralingam), 2026ஆம் ஆண்டுக்கான South Asian Music Accelerator (SAMA) இசை மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார். கனடா முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து இசைக் கலைஞர்களில் ஒருவராக லக்ஷ்மி இடம்பெற்றுள்ளார்.



உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பு அறிமுகம்! Top News
[Sunday 2026-10-25 17:00]

அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), உலகத் தமிழர்களின் அறிவு, ஆற்றல், தொழில்சார் அனுபவம் மற்றும் பொருளாதார வளங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பையும் (Global Tamil Economic and Social Network), அதன் ஒருங்கிணைப்புக் குழுவையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்முனைவையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குதல், சமூக மேம்பாட்டை முன்னெடுத்தல் ஆகியவை இவ்வலையமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.



டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2026! Top News
[Sunday 2026-10-25 06:00]

அக்டோபர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில், 90 Littles Road, Scarborough-வில் அமைந்துள்ள Malvern Family Resource Centreஇல், நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. புத்தகங்களின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனையுடன் இந்த ஆண்டு 10 நூல் அறிமுகங்கள், கலை இலக்கிய அமர்வுகள் என புத்தகங்களுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.



திரு. வைரமுத்து சொர்ணலிங்கத்திற்கு ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது! Top News
[Monday 2026-10-05 09:00]

தமிழ்க் கனடிய கலை மற்றும் இசைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வரும் திரு. வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களுக்கு, 7வது ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா – 2026 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) வழங்கி கௌரவிக்கப்பட்டது. ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் 7வது ஆண்டு நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்றன. செப்டம்பர் 25ஆம் திகதி யோர்க் சினிமாவில் ஆரம்ப விழா இடம்பெற்றதுடன், தொடர்ந்து இரண்டு நாட்கள் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டன.



துணுக்காயில் கோலாகலமாக நடைபெற்ற "பண்பாட்டுப் பெருவிழா – 2026"! Top News
[Friday 2026-09-25 16:00]

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகும் துணுக்காய் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” நிகழ்வு 2026 செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு, துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள “கலைத் திலகம் அமரர் புவனேஸ்வரி நடராசா அரங்கில்” கோலாகலமாக நடைபெற்றது. துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சிவராஜசிங்கம் ஜெயகாந்த், மேலதிக மாவட்டச் செயலாளர் – காணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கலந்து சிறப்பித்தார்.



மெத்ரேயி ராமகிருஷ்ணன் – வாழ்க்கைக் கதை! Top News
[Friday 2026-09-25 10:00]

மெத்ரேயி ராமகிருஷ்ணன் ஒரு தமிழ் கனடிய நடிகை. அவர் 2001ஆம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் பிறந்தார். அவரது பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும், ஆரம்பத்தில் அவர் தொழில்முறை நடிகையாக இருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு Netflix-ல் வெளியான Never Have I Ever தொடரில் Devi Vishwakumar என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆயிரக்கணக்கானவர்கள் audition செய்தனர். மெத்ரேயியும் audition கொடுத்தார். இறுதியில், 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து அவர் முக்கிய கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர்தான் அவருடைய முதல் பெரிய நடிப்பு வாய்ப்பு. Devi என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் அவர் பிரபலமானார்.



தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்! Top News
[Wednesday 2026-09-16 07:00]

12 நாட்கள் பசிமறந்து நல்லூர் வீதியில் உயிர்துறந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. தியாக தீபம் திலீபன் அவர்கள், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை, நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரம்கூட அருந்தாமல், அகிம்சை வழியில் தனது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.



துன்னாலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியுடன் நிறைவு! Top News
[Monday 2026-09-14 08:00]

யாழ் துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று நிறைவடைந்தது. திருப்பலிகள் பங்குத்தந்தை விஜின்ரஸ் மற்றும் உதவி பங்குத்தந்தை பஸ்ரியான் அவர்களால் நடாத்தப்பட்டது. ஆலய வாசலிலே ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் ஆசிர்வதிக்கப்பட்டு பவனியாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி ஆர்ப்பாட்டம்! Top News
[Thursday 2026-09-03 07:00]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி, பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் (Sri Lankan High Commission) முன்னால் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகமான 10 Downing Street நோக்கி மாபெரும் போராட்ட ஊர்வலமாகச் சென்று, உறவுகளுக்கான நீதியையும் இப்படுகொலை நாடக அரங்கமும் இடம்பெற்றது.



சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், பிரித்தானியாவில் நீதிக்காகத் திரண்ட மக்கள்! Top News
[Wednesday 2026-09-02 07:00]

தாயகத்தில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்தும், அவர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், பிரித்தானியாவில் நேற்று ஆகஸ்ட் 30ஆம் திகதி நினைவேந்தல் நடைபயணமும் அமைதிவழிப் போராட்டமும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், லண்டன் Trafalgar Square மற்றும் லிவர்பூல் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில், பெருமளவான தமிழ் சமூகத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



யாழில் PickMe நடத்துவது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரனா? Top News
[Thursday 2026-08-20 08:00]

கடந்த காலத்தில் மிகவும் பேசும் பொருளாக இருந்த பிக்மி முச்சக்கர வண்டி சங்கங்களால் அதிகம் பேசப்பட்டது அப்போது இது யாழ்ப்பாணத்தில் முன்னால் கடல்தொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடத்துவதாகவும் கூறப்பட்டது ஆனால் இறுதியில் வந்த தகவலின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் ஒரு முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான திரு MA சுமந்திரன் அவர்கள் மறைமுகமாக நடத்துவது தெளிவாக தெரியவந்தது.



தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Wednesday 2026-08-19 09:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவாக 11வது ஆண்டு கோடைகால விளையாட்டு விழா, 02.08.2016 ஞாயிற்றுக்கிழமை Sutton பகுதியில் அமைந்துள்ள St Helier Open Space மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் ஆண், பெண் இருபாலருக்குமான பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. இதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயதுப் பிரிவினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



வருங்காலத் தமிழ் ஈழம் சுவிட்சர்லாந்திடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்? Top News
[Saturday 2026-08-15 07:00]

தமிழ் தாயகத்தின் எதிர்காலம் குறித்த விவாதம், நிலப்பரப்பின் அளவு என்ற கேள்வியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. புவியியல் ரீதியாகச் சிறிய ஒரு நாடு, திறமையான நிறுவனங்கள், சர்வதேச சந்தைகளுக்கான அணுகல், கல்வியறிவு பெற்ற மக்கள் மற்றும் தனது சொந்தப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, ​​கணிசமான பொருளாதார செல்வாக்கை உருவாக்க முடியும் என்பதை சர்வதேச அனுபவம் காட்டுகிறது. சுவிஸ் வரலாற்றாசிரியர் ஜேக்கப் டானரின் Krisen und Konjunkturen des Kapitalismus in der Schweiz des 20. Jahrhunderts என்ற ஆய்வு, இந்தக் கேள்வியைக் கருத்தில் கொள்வதற்கான ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தை வழங்குகிறது.



ஒன்ராறியோ அரசு சென்டினரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் முதலீடு செய்கிறது! Top News
[Friday 2026-08-07 07:00]

கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பின் சென்டினரி மருத்துவமனையில் புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா