Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வாசிங்டன், டி.சி. - யில் நடைபெற்ற 'நேட்னா' முதல் மாநாடு - மாபெரும் வெற்றி! Top News
[Thursday 2026-04-09 07:00]

வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (North American Thamizh National Association, Inc. -- NATNA) முதல் மாநாடு, அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன், டி. சி.- யில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழ் இன உணர்வாளர்களும், பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர். கனடாவின் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாகப் பயணித்து வந்து தமிழ்த்தேசியத்திற்கான தேவையையும், வலிமையையும் பறைசாற்றினார்கள்! தமிழ் நாட்டுத் தமிழர், ஈழத்தமிழர், மலேசியத் தமிழர் என உலகளாவிய தமிழ் உறவுகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல நாடுகளில் செயல்படும் தமிழ் அமைப்புகளிடம் இருந்தும் அங்கு வாழும் பல தமிழர்களிடம் இருந்தும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துச் செய்திகள் வந்தடைந்தன. ஏப்ரல் 5, 2026, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குத்து விளக்கு ஏற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து ("வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே ! "), அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாட்டுப் பண், தமிழின ஈகியர்க்கு அமைதி அஞ்சலி ஆகியவற்றுடன் மாநாடு தொடங்கிவைக்கப்பட்டது.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான திரு. இரவி சுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார். கூட்டமைப்பின் தலைவர் முனைவர் தணி குமார் சேரன் தலைமையுரை வழங்கினார். வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (தமிழர் கூட்டமைப்பு) ஏன் தொடங்கப்பட்டது, அதன் நோக்கங்கள் யாவை, தமிழ்த்தேசியத்தின் தேவைகள் எவை என்பன பற்றி விளக்கி விரிவான உரையை ஆற்றினார்.

பின்னர், வரும் சூலை திங்கள் நியூ செர்சி (New Jersey) மாநிலத்தில் நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சசிகுமார் ரங்கநாதன், திரு. செந்தில் வாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியதுடன், பேரவையின் ஆண்டு விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.

வர்சீனியா (Virginia) தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. சோதி முருகன், அமெரிக்கத் தமிழர் செயற்குழுவின் தலைவர் திரு. பாலன் குகபாலன், இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவி திருமதி இந்திரா இம்மானுவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழுவின் செயற்குழு உறுப்பினர் முனைவர் முருகையா முரளிதரன், தம் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கியதுடன், வட அமெரிக்கத் தமிழர் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

அதன்பின், தமிழ்த்தேசிப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த பேராசிரியர் தா. மணி, TNTV தமிழ் ஊடகத்தின் நிறுவனர் திரு. வளர்மெய்யறிவான், தமிழ்ப் பேரரசுக் கட்சியின் நிறுவனர் திரு. வ. கௌதமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். "இந்தியா ஒரு கூட்டாட்சி என்பது போல் தோன்றினாலும் அஃது ஒற்றை ஆட்சியே ! " என்ற விளக்கம்; திராவிடத்தால் தமிழர் இதுவரை இழந்தவைகள்; தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சி; தமிழ்த்தேசியம் எட்ட வேண்டிய இலக்குகள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

அடுத்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் மாண்புமிகு விசுவநாதன் உருத்திரகுமாரன் ஐயா உரையாற்றினார். தமிழீழ விடுதலை வரலாறு குறித்தும், பன்னாட்டு அரசியல் சூழலில் எப்படி நம் உரிமைகளை மீட்டெடுப்பதற்குரிய நகர்வுகளை மேற்கொள்வது என்பது பற்றியும் விளக்கினார். தமிழர் நலன் பேண தனியாக வங்கி ஒன்றைத் தொடங்க உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிதி அமைச்சர் திரு. ஜெயகுமார் ஐயாதுரை அறிவித்தார்.

தமிழ் மொழி, தமிழீழம் தொடர்பான பாடல்களை செல்வி சீர்த்திகா செந்தில்நாதன் இசையுடனும் உணர்ச்சியுடனும் பாடியது கேட்போர் அனைவரையும் நெஞ்சுருக வைத்தது என்றால் மிகையாகாது.

"தமிழின் இனிமை" என்ற தலைப்பில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய " கனியிடை ஏறிய சுளையும்" பாடலை, வெர்சீனியா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த திரு. மைதீன் அருமையாகப் பாடி இனிமையூட்டினார்.

செய்யறிவு நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட, மாநாட்டின் கருத்துச் செரிவை வெளிப்படுத்தும் மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டது.

Government of Tamil Nadu என்பது தான் தமிழ்நாட்டு அரசின் பெயர். State என்றால் அரசு என்று பொருள்! தமிழ்நாடு என்பதைத் தமிழகம் என்று சுருக்கி அழைப்பது தாழ்வு / அடிமை உளவியலைத் தமிழர்களிடம் உருவாக்கும். தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக, தமிழகம் என்ற வார்த்தையைத்தான் அனைத்து ஊடகங்களும் பயன்படுத்துகின்றன. “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று முன்பு வீரமுழக்கம் இட்டவர்கள், இப்பொழுது தாங்கள் பாரத புத்திரர்கள் என்று காட்டுவதற்காக, தமிழ் நாடு என்று சொல்வதைத் தவிர்த்துவிட்டு, தமிழகம் என்று சுருகிவிட்டனர், இதைத் திட்டமிட்டுத் தொடங்கி வைத்தவர் திரு. மு. கருணாநிதி என்று முனைவர் சேரன் ஐயா தெளிவுபட விளக்கினார். மேலும், “தமிழர்களாகிய நாம் அனைவரும், தமிழகம் என்ற வார்த்தையைத் தவிர்த்து, தமிழ் நாடு என்றே அழைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். தமிழ்த்தேசியம் பற்றி ஒரு புத்தகக் கண்காட்சியை திரு. அகத்தாய்வன் அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.

நண்பகல் இடைவேளையில், அனைவரும் களிக்குமாறு அறுசுவை உணவு அனைவருக்கும் அன்புடன் பரிமாறப்பட்டது.

உணவு இடைவேளைக்குப்பின், "வெல்லட்டும் தமிழ்த்தேசியம்" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நெறியாளர் திரு. சங்கர் தங்கவேலு சரியாகத் திட்டமிட்டு, ஒவ்வொரு பங்காளருக்கும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து, கருத்தரங்கத்தை மிகச் சிறப்பாக நடத்தினார். கருத்தரங்கத்தில், முனைவர் தணி குமார் சேரன், திரு. சுந்தர் குப்புசாமி, திரு. பாலமுருகன் சம்பந்தம், திரு. இளம்பரிதி கருப்பன், திரு. அகத்தாய்வன் தங்கவேலு, திரு. அரங்கன் கன்னியப்பன், திரு வேல் வேலாயுதபிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கத்தில், திராவிடத்தின் தமிழின அழிப்புச் செயலை எடுத்துக்கூறும் "திராவிட அறிவுரை" நையாண்டிக் கவிதையைப் பார்வையாளர் அனைவரும் சிரித்து, கைதட்டி, மனமகிழ்வு கொள்ளும் வகையில் மிக அருமையாகப் புதுக்கவிதை பாடினார் திரு. இளம்பரிதி. சிலப்பதிகாரக் காலந்தொட்டு தமிழ்நாட்டுக் கொடி பயன்பாட்டில் உள்ளதற்கான சான்றுகள் உள்ளதென திரு. அகத்தாய்வான் விளக்கினார். 2009 ஆம் நடந்த தமிழ் இனப்படுகொலையில் திராவிடத்தின் பங்கு குறித்து திரு. சுந்தர்; தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் ஈ. வே. இராமசாமி இழைத்த துரோகங்கள் குறித்து முனைவர் சேரன்; திராவிட இன மறைப்பு அரசியலின் இரட்டை நிலைப்பாடுகள் குறித்து திரு. அரங்கன்; ஏன் தமிழ்த்தேசியம் வெல்ல வேண்டும்? என்பது குறித்து திரு. பாலமுருகன்; கனடாவின் பிராம்ப்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணுக்குப் பங்காற்றிய ஈழத்தமிழரின் பங்களிப்புகள் குறித்து திரு. வேல் வேலாயுதபிள்ளை ஆகியோர் எடுத்துரைத்தனர்.

கருத்தரங்கத்தின் பங்கேற்பாளர்கள் அனைவருமே ஆழமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். கருத்துச்செரிவான இக் கருத்தரங்கத்தை மக்கள் அனைவரும் விரும்பிக் கேட்டனர், கூர்ந்து கவனித்தனர். கருத்தரங்கத்தின் பங்கேற்பாளர்கள் அனைவருமே தமது கருத்துக்களை நயம்பட எடுத்துரைத்தனர். ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதும், அவர்களின் பாராட்டைப் பெறுவதும் எளிதன்று.

முத்தான பத்துத் தீர்மானங்கள் வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள் அனைத்தையும் முனைவர் இராசா இளங்கோவன் இம்மாநாட்டில் விளக்கிக் கூறினார். ஒவ்வொரு தீர்மானத்தையும் கூடியிருந்த மக்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். இந்த ஆண்டு (2026) வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 -ஆவது ஆண்டு என்பதை நினைவில் நிறுத்தி, "வாசிங்டன், டி.சி. தீர்மானங்கள்" என அழைக்கப்படும் இவை உங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

திரு. அகத்தாய்வான் தங்கவேலின் அன்பு மகள் செல்வி மகிழ், தமிழ்த்தேசிய எழுச்சியும் வெற்றியும் பற்றி மிகவும் சிறப்பான, இனிமையான உரை வழங்கினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டது. இந்தப் பகிர்வுக் கூட்டத்தில், தமிழ்த்தேசியம் வெல்லத் தேவையானவை குறித்துப் பலரும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்தனர். இந்தக் கூட்டம் மிகவும் ஆக்க பூர்வமானதாக அமைந்தது.

மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளரும் வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளருமான திரு. கண்ணன் வெற்றிவேல் நன்றியுரை வழங்கி, மாலை 5 மணியளவில் மாநாட்டை நிறைவுசெய்தார். தமிழ்த்தேசியத்தை முதன்மைப்படுத்தி வட அமெரிக்காவில் நடைபெறும் முதல் மாநாடு இதுவே. இம்மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும், பங்கேற்ற சிறப்பு விருந்தினர் அனைவருக்கும், இந்த மாநாடு வெற்றி பெற அயராது உழைத்த அனைத்து உணர்வாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

தமிழர்களின் குடும்ப விழாவாக அமைந்த இந்த மாநாடு ஒரு மிகப்பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது என்றால் மிகையாகாது. மக்களின் வரவேற்பும் பங்களிப்பும் புது உற்சாகத்தை ஊட்டியுள்ளன. இது தமிழ்த்தேசிய மறுமலர்ச்சிக்கான களம்! தமிழர்க்குப் புத்துணர்ச்சியூட்டும் காலம் !

  
  
   Bookmark and Share Seithy.com



இளம் குரலில் ஒலித்த ஆன்மீகத் தேன்! – செல்வி தியா இளங்கீரனுக்குப் பாராட்டுகள்! Top News
[Thursday 2026-11-05 07:00]

கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் ஈழத்தமிழ்ச் சிறுமியான செல்வி தியா இளங்கீரன் அவர்கள், கனடாவில் முதன்முறையாகக் கந்த சஷ்டி கவசத்தைத் தனது இனிய குரலில் பாடி இசை வடிவில் வெளியிட்டிருப்பது பெருமகிழ்ச்சியும் பாராட்டுக்குரியதுமான ஒரு சிறப்பான நிகழ்வாகும். முருகப்பெருமானின் அருளையும், பக்தியின் மகத்துவத்தையும் எடுத்துரைக்கும் கந்த சஷ்டி கவசம், தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ள ஓர் அருள்மிகு பக்திப் பாடலாகும். அத்தகைய புனிதமான பாடலை, இளமையின் இனிமையும் பக்தியின் ஆழமும் கலந்த தனது மழலைக் குரலில் தியா அவர்கள் பாடியிருப்பது கேட்போர் மனங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துகின்றது.



கனடாவில் இலங்கைத் தமிழ் பாடகி லக்ஷ்மிக்கு புதிய அங்கீகாரம்! Top News
[Tuesday 2026-11-03 07:00]

இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட கனடா வாழ் பாடகி லக்ஷ்மி சிவநேஸ்வரலிங்கம் (Luksimi Sivaneswaralingam), 2026ஆம் ஆண்டுக்கான South Asian Music Accelerator (SAMA) இசை மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார். கனடா முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து இசைக் கலைஞர்களில் ஒருவராக லக்ஷ்மி இடம்பெற்றுள்ளார்.



உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பு அறிமுகம்! Top News
[Sunday 2026-10-25 17:00]

அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), உலகத் தமிழர்களின் அறிவு, ஆற்றல், தொழில்சார் அனுபவம் மற்றும் பொருளாதார வளங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பையும் (Global Tamil Economic and Social Network), அதன் ஒருங்கிணைப்புக் குழுவையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்முனைவையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குதல், சமூக மேம்பாட்டை முன்னெடுத்தல் ஆகியவை இவ்வலையமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.



டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2026! Top News
[Sunday 2026-10-25 06:00]

அக்டோபர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில், 90 Littles Road, Scarborough-வில் அமைந்துள்ள Malvern Family Resource Centreஇல், நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. புத்தகங்களின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனையுடன் இந்த ஆண்டு 10 நூல் அறிமுகங்கள், கலை இலக்கிய அமர்வுகள் என புத்தகங்களுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.



திரு. வைரமுத்து சொர்ணலிங்கத்திற்கு ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது! Top News
[Monday 2026-10-05 09:00]

தமிழ்க் கனடிய கலை மற்றும் இசைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வரும் திரு. வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களுக்கு, 7வது ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா – 2026 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) வழங்கி கௌரவிக்கப்பட்டது. ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் 7வது ஆண்டு நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்றன. செப்டம்பர் 25ஆம் திகதி யோர்க் சினிமாவில் ஆரம்ப விழா இடம்பெற்றதுடன், தொடர்ந்து இரண்டு நாட்கள் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டன.



துணுக்காயில் கோலாகலமாக நடைபெற்ற "பண்பாட்டுப் பெருவிழா – 2026"! Top News
[Friday 2026-09-25 16:00]

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகும் துணுக்காய் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” நிகழ்வு 2026 செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு, துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள “கலைத் திலகம் அமரர் புவனேஸ்வரி நடராசா அரங்கில்” கோலாகலமாக நடைபெற்றது. துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சிவராஜசிங்கம் ஜெயகாந்த், மேலதிக மாவட்டச் செயலாளர் – காணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கலந்து சிறப்பித்தார்.



மெத்ரேயி ராமகிருஷ்ணன் – வாழ்க்கைக் கதை! Top News
[Friday 2026-09-25 10:00]

மெத்ரேயி ராமகிருஷ்ணன் ஒரு தமிழ் கனடிய நடிகை. அவர் 2001ஆம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் பிறந்தார். அவரது பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும், ஆரம்பத்தில் அவர் தொழில்முறை நடிகையாக இருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு Netflix-ல் வெளியான Never Have I Ever தொடரில் Devi Vishwakumar என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆயிரக்கணக்கானவர்கள் audition செய்தனர். மெத்ரேயியும் audition கொடுத்தார். இறுதியில், 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து அவர் முக்கிய கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர்தான் அவருடைய முதல் பெரிய நடிப்பு வாய்ப்பு. Devi என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் அவர் பிரபலமானார்.



தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்! Top News
[Wednesday 2026-09-16 07:00]

12 நாட்கள் பசிமறந்து நல்லூர் வீதியில் உயிர்துறந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. தியாக தீபம் திலீபன் அவர்கள், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை, நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரம்கூட அருந்தாமல், அகிம்சை வழியில் தனது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.



துன்னாலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியுடன் நிறைவு! Top News
[Monday 2026-09-14 08:00]

யாழ் துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று நிறைவடைந்தது. திருப்பலிகள் பங்குத்தந்தை விஜின்ரஸ் மற்றும் உதவி பங்குத்தந்தை பஸ்ரியான் அவர்களால் நடாத்தப்பட்டது. ஆலய வாசலிலே ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் ஆசிர்வதிக்கப்பட்டு பவனியாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி ஆர்ப்பாட்டம்! Top News
[Thursday 2026-09-03 07:00]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி, பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் (Sri Lankan High Commission) முன்னால் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகமான 10 Downing Street நோக்கி மாபெரும் போராட்ட ஊர்வலமாகச் சென்று, உறவுகளுக்கான நீதியையும் இப்படுகொலை நாடக அரங்கமும் இடம்பெற்றது.



சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், பிரித்தானியாவில் நீதிக்காகத் திரண்ட மக்கள்! Top News
[Wednesday 2026-09-02 07:00]

தாயகத்தில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்தும், அவர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், பிரித்தானியாவில் நேற்று ஆகஸ்ட் 30ஆம் திகதி நினைவேந்தல் நடைபயணமும் அமைதிவழிப் போராட்டமும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், லண்டன் Trafalgar Square மற்றும் லிவர்பூல் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில், பெருமளவான தமிழ் சமூகத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



யாழில் PickMe நடத்துவது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரனா? Top News
[Thursday 2026-08-20 08:00]

கடந்த காலத்தில் மிகவும் பேசும் பொருளாக இருந்த பிக்மி முச்சக்கர வண்டி சங்கங்களால் அதிகம் பேசப்பட்டது அப்போது இது யாழ்ப்பாணத்தில் முன்னால் கடல்தொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடத்துவதாகவும் கூறப்பட்டது ஆனால் இறுதியில் வந்த தகவலின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் ஒரு முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான திரு MA சுமந்திரன் அவர்கள் மறைமுகமாக நடத்துவது தெளிவாக தெரியவந்தது.



தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Wednesday 2026-08-19 09:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவாக 11வது ஆண்டு கோடைகால விளையாட்டு விழா, 02.08.2016 ஞாயிற்றுக்கிழமை Sutton பகுதியில் அமைந்துள்ள St Helier Open Space மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் ஆண், பெண் இருபாலருக்குமான பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. இதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயதுப் பிரிவினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



வருங்காலத் தமிழ் ஈழம் சுவிட்சர்லாந்திடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்? Top News
[Saturday 2026-08-15 07:00]

தமிழ் தாயகத்தின் எதிர்காலம் குறித்த விவாதம், நிலப்பரப்பின் அளவு என்ற கேள்வியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. புவியியல் ரீதியாகச் சிறிய ஒரு நாடு, திறமையான நிறுவனங்கள், சர்வதேச சந்தைகளுக்கான அணுகல், கல்வியறிவு பெற்ற மக்கள் மற்றும் தனது சொந்தப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, ​​கணிசமான பொருளாதார செல்வாக்கை உருவாக்க முடியும் என்பதை சர்வதேச அனுபவம் காட்டுகிறது. சுவிஸ் வரலாற்றாசிரியர் ஜேக்கப் டானரின் Krisen und Konjunkturen des Kapitalismus in der Schweiz des 20. Jahrhunderts என்ற ஆய்வு, இந்தக் கேள்வியைக் கருத்தில் கொள்வதற்கான ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தை வழங்குகிறது.



ஒன்ராறியோ அரசு சென்டினரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் முதலீடு செய்கிறது! Top News
[Friday 2026-08-07 07:00]

கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பின் சென்டினரி மருத்துவமனையில் புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா