Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கிழக்கில் தமிழ் இழந்து போகும் அவல நிலை... Top News
[Monday 2016-02-01 19:00]

கனடா மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்று கூடல் விழாவில் மட்டக்களப்பு பாராளுமண்ற உறுப்பினர் திரு.சதாசிவம் யாழேந்திரன் உரை....

'கிழக்கு மாகாணம் கல்வித் துறை, விளையாட்டுத் துறை,தொழில் துறை ஆகிய பல்வேறு துறை களிலும் நீண்ட காலமாக பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றது. ஏனைய மாகாணங்க ளுடன் ஒப்பிடும் போது எமது கிழக்கு மாகாணம் அபிவிருத்தி குன்றிய மாகாணமாகவே இருந்து வந்துள்ளது. தமிழினத்தவர்கள் மாத்திரமல்ல எமது சகோதரர்களான முஸ்லீம் இனத்தவர்களும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கில்தான் தமிழர்களின் இருப்பிடமும் பண்பாட்டுடன் வாழும் எமது தமிழ் நிலமுமாகும் ஆனால் இன்று கிழக்கு மாகானத்தை பொறுத்தவரையில் தமிழர்களுடய நிலங்களும் அடயாளமும் இல்லாது போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது தமிழர்கள் அல்லாத இனத்தவர்கள் எமது மண்ணை ஆழ்வது மட்டுமல்ல அவர்கள் முன்னேற்றத்திலும் வளர்ச்சியடைந்து வருகிறார்கள்.காலப்போக்கில் கிழக்கில் தமிழ் இழந்து வடக்கில் மட்டுமே தமிழ் வாழும் நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் .

கடந்த 31 -01 -2016 சனிக்கிழமையன்று PANEMONTE BANQUET HALL 220 HUMBER LINE DRIVE ETOBICOKE நடைபெற்ற மட்டக்களப்பு மெதடிஷ்ற் மத்திய கல்லூரி யின் பழைய மாணவர் சங்க ஒன்று கூடல் வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு பாராளுமண்ற உறுப்பினர் திரு.சதாசிவம் யாழேந்திரன் இவ்வாறு கூறினார் கடந்த தமிழ் ஈழப்போராட்டத்தின் பின் அதாவது யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் நமது தமிழ் எல்லைக்கிராமங்களும் பறிபோய்க்கொண்டு இருக்கிறது. அந்நிலையினை மாற்றி எமது தமிழ் நிலத்தினை தக்கவைத்துக்கொள்ள புலம் பெயர்ந்து வாழுகின்ற எம் தமிழ் மக்கள் அனைவரும் எமது பிரதேச மக்களுக்கான கல்வி அபிவிருத்தி மற்றும் உதவிகளையும் வழங்க முன்வரவேண்டும். கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் கசப்பானவை என்பதனால் புதியதொரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என அரசியல்வாதிகளும் பொது மக்களும் ஆர்வம் கொண்டனர். அதற்கேற்ப தற்போதைய ஜனாதிபதி திரு.மைத்திரிபால சிறிசேனாவும் அரசி யல் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார். அவர் எமது கிழக்கு மாகாண த்திலும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு." 'மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 1996ம் ஆண்டு நானும் கல்வி கற்றேன். அதனால் பழைய மாணவன் என்ற முறையில் இவ்விழாவில் கலந்து கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடை கின்றேன். எனக் குறிப்பிட்டார். கனடா மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தலைவர் திரு.கோகுல் மற்றும் திரு.போல் தலைமையில் .வருடாந்த ஒன்று கூடலும் இராப்போசன விருந்தும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

(செய்திகளுக்காக தளிரன் ) ( படங்கள் : கெங்கா )

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா