Untitled Document
November 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சர்வஜன வாக்கெடுப்பை வலியுறுத்தி கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் இந்தியத் துணைத் தலைவர் உட்பட பல அரசியல் சந்திப்புக்களை மேற்கொண்டனர்: Top News
[Thursday 2016-02-04 19:00]

கனடியத் தமிழர்களின் ஒருமித்த குரலாக செயல்ப்பட்டு வரும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் (NCCT) தாம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே மூன்று தீர்மானங்களை முன்னிறுத்தி அதனது அரசியல் திட்டங்களை நடத்தி வருகின்றது. அவையாவன:

1) ஈழத்தில் தொடர்ச்சியாக தமிழ் இன அழிப்பு நடைபெறுகின்றது என்ற உண்மையை வலியுறுத்துதல்.

2) ஈழத்தில் இடம்பெறுகின்ற போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு என்பவற்றிற்கான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தல்.

3) தமிழ்த் தேசிய இனம் தனது சுய நிர்ணய உரிமையை மீட்டெடுப்பதற்கான ஒர் நீண்ட கால அரசியல் தீர்விற்காக ஐ.நா மேற்பார்வையிலான ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்

இத் தீர்மானங்களை மையமாக வைத்து சர்வதேச சமூகத்தில் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மாற்றின மக்களுடைய புரிதல் தோழமை உறவையும் ஆதரவையும் வளர்த்துக் கொண்டு அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதே கனடியத் தமிழர் தேசிய அவையின் முதன்மை இலக்காக இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் டென்னிஸ் ஹாலிடே போன்றவர்களை அழைத்து மாற்றின மக்கள், அரசியல் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரையும் சந்திக்க வைத்து முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் எங்கள் மண்ணில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இன அழிப்பில் இருந்து விடுதலையாக ஒற்றை வழி சர்வசன வாக்கெடுப்பே என்றும் விளக்கங்கள் அளித்து கனடிய மண்ணில் மாற்றின மக்கள் மற்றும் கனடிய அரசு மத்தியில் பெரும் பரப்புரைகள் எடுத்து செல்லப்பட்டன. இப்பரப்புரையின் விளைவாக கனடாவின் மூன்று முக்கிய கட்சிகளும் இலங்கை அரசாங்கம் நடத்திய தமிழின அழிப்பினை உறுதிப்படுத்தி அறிக்கைகள் வெளியிட்டனர்.

இதே போன்று கனடாவிலும், மொறிஷியசிலும் கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) முன்னெடுத்த பொது நலவாய நாடுகளின் மகாநாடு இலங்கையில் நடப்பதற்கு எதிரான பரப்புரைகளின் அடிப்படையில் இவ்விரு நாடுகளும் இம் மாநாட்டை புறக்கணித்திருந்தனர்.

தொடர்ச்சியாக பல நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டு விளக்க கூட்டங்களையும் சந்திப்பு பலவற்றையும் நிகழ்த்தி வரும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் அண்மையில் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இப்பயணத்தில் முன்னை நாள் கர்நாடக முதலமைச்சரும் ஆளும் பாரதீய கட்சியின் உப தலைவருமான எடியூரப்பா, புதுச்சேரி முதலமைச்சர் இரங்கசாமி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், IAS அதிகாரிகளான திரு. தேவசகாயம் மற்றும் பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஈழத் தமிழர்க்கான நீதியான நியாயமான தீர்வு கிடைக்க சர்வசன வாக்கெடுப்பை வலியுறுத்தி ஆதரவு நல்கி கை கொடுக்குமாறு கேட்டிருந்தார்கள்.

கனடியத் தமிழர் தேசிய அவையின் தமிழ் மக்களுக்கான பணிகள் தொடர்ந்தும் முனைப்போடு தொடரும்.

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா