Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நிறுவுனரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களது 39வது சிராத்த தினம்: Top News
[Wednesday 2016-02-10 22:00]

இலங்கைத்தீவில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியாக 1944ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதலாவது அமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகும். அதன் நிறுவுனரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களது 39வது சிராத்த தினத்தில் இன்று கூடியிருக்கின்றோம். இக்கட்சியானது 1947ல் சோல்பெரி ஆணைக்குழு மூலம் இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது இத்தீவில் நிரந்தர பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சிங்கள மக்கள் ஏனைய இனங்களுக்கு எதிரான வகையிலும் தமக்கு மட்டும் சாதகமான வகையிலும் சட்டங்களை நிறைவேற்றுவதனை தடுப்பதற்காக ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை முன்வைத்தது. எனினும் துரதிஸ்டவசமாக சிங்களத் தரப்பினாலும் சோல்பெரி ஆணைக்குழுவினாலும் அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

வெறுமனே ஒற்றையாட்சி முறையில் சிங்கள மக்களுடைய தயவில் ஒரு தனித்துவமான தமிழ்த் தேசம் எண்ணிக்கையில் குறைந்த ஒரே ஒரு காரணத்திற்காக சட்டரீதியான எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒரு ஆப்த்தான நிலைக்குத் தள்ளப்படுவதனை தடுக்கும் நோக்கில் பிரித்தானியாவுக்கு அவசரமாக ரெலிகிராம் ஒன்றினை அனுப்பி அதாவது சோல்பெரி அரசியல் அமைப்பிற்கு கீழ் இலங்கைக்கு விடுதலை வழங்குவதாயின் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்றும் அவ்வகையான ஒரு நிலையில் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தங்களது தலைவிதியை தீர்மானப்பதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு கோரியிருந்தார்.

அந்த ரெலிகராம் அனுப்பியதற்குப் பின்னர் அவர் பிரித்தானியாவுக்கு அவசரமாக பயணித்தார். அங்கு சென்று பிரித்தானிய தலைவர்களை சந்திப்பதற்கு இருந்த சமயத்தில் டீ.எஸ்.சேனாநாயக்கா இலங்கையில் இருந்த ஏனைய தமிழத் தலைவர்களை போலி வாக்குறுதிகளை வழங்கி சுயநிர்ணய உரிமையை கைவிட்டு இலங்கையர்கள் என்ற கோணத்தில் ஒன்றாக வாழ்வதற்கு இணங்க வைத்தார்.

அன்றிலிருந்து இன்று வரையிலும் அந்த முடிவின் பாரதூரமான விளைவுகளை தமிழ்த் தேசம் தொடர்ந்தும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடார்பாக பேச்சுக்கள் தமிழ் தரப்பினர் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.

எமது மக்களும் தலைவர்களும் சந்தித்த கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசம்

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா