Untitled Document
November 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாணவி ஹரிஸ்ணவி கொலையைக் கண்டித்து வவுனியாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்! Top News
[Tuesday 2016-02-23 20:00]

மாணவி ஹரிஸ்ண வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வவுனியாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வன்முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் இருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை பேரணியாக பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்.

பேரணியாக சென்றவர்கள் வவுனியா -மன்னார் வீதி மற்றும் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதி மற்றும் வவுனியா மன்னார் வீதியிலான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தது. ஆக்ரோசமாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் வவுனியா மாவட்ட செயலகத்தின் பிரதான வாயிலும் மூடப்பட்டிருந்தது.

இந் நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தின் வாயிலுக்கு வருகை தந்த அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்காக மகளிர் அமைப்புகளால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் ரோஹண புஷ்பகுமார, இந்த மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்ப தாகவும் இக் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு விசாரணைகளை தொடாங்கியுள்ளதாக வும் தெரிவித்தார். இன்னும் சில நாட்களுக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாக வும் தெரிவித்தார். இந் நிலையில் இவ்வாறான கொடூர மான சம்பவங்கள் தற்போது வவுனியாவில் மட்டுமல்ல இலங்கையில் எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதனை நிறுத்த வேண்டும். அதற்கு பொதுமக்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் இவ்வாறான சம்பவங்களை நிறுத்த முடியும் என்றார்.

இதேவேளை ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதி வழங்காவிட்டால் இவ் விடத்தை விட்டு அகலமாட்டோம் என மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கோசமெழுப்பியிருந்த நிலையில் ஏற்பாட்டாளர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தனர்.

இப்போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏனைய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், மகளிர் அமைப்புகள், வடபகுதியைச் சேர்ந்த மகளிர் வலையமைப்புகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், முற்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், வவுனியா பிரஜைகள்குழுவின் பிரதிநிதிகள். பாடசாலை அதிபர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை, வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவிக்கு நீதி வேண்டி வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களும் இன்று சுமார் ஒரு மணி நேரம் பாடசாலைக்கு வெளியில் வந்து பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது மாணவர்கள், இருப்பவர்கள் இருந்தால் இதுவும் நடக்குமா ,தந்தை வெளிநாடு சென்றது குற்றமா ,பெண்பிள்ளை பெற்றது குற்றமா, பெண் பிள்ளையாய் பிறந்தது குற்றமா, பிள்ளை சுகமில்லை என்றது குற்றமா, நீதி எங்கே தூங்கி விட்டதா, அன்று கிருசாந்தி அடுத்து வித்தியா இன்று ஹரிஷ்ணவி நாளை...?நல்லாட்சி அரசே தண்டனை வழங்க ஏன் இந்த இழுத்தடிப்பு, மனித குலத்தை அவமானப்படுத்தும் காமுகர்களை விரைந்து தண்டித்து விடு அரசே என பல பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா