Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தற்போதைய நிலையில் ஒரு புதிய அரசியல் சாசன மாற்றம் முழுமையாக வருமா? - சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி Top News
[Monday 2016-02-29 18:00]

தற்போதைய நிலையில் ஒரு புதிய அரசியல் சாசன மாற்றம் முழுமையாக வருமா? அல்லது தற்போதைய ஒற்றையாட்சி சாசனத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படுமா? சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி? - இலங்கைத்தீவின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான

தமிழீழம் இல்லாத நிலையில் தமிழ் மக்களுடைய கோரிக்கை என்ன என்பதை தெளிவாக முழுமையாக முன்வைக்காத ஒரு சூழல் இருந்து கொண்டு வந்தது. அரசாங்கம் ஒரு அரசியல் சாசன சபையை உருவாக்க சிந்தித்தது. அதன் காரணமாக அந்த சபைக்கு தமிழ் மக்களின் தேவைகள் என்ன என்று கூற வேண்டிய தேவை இருந்தது.

அதனால் தான் நாம் தமிழ் மக்கள் பேரவை மூலம் ஒரு நிபுணர் குழுவை நியமித்து இந்த தீர்வு திட்ட வரைவை தயாரிக்கவேண்டி ஏற்பட்டது. இன்றைய பத்திரிகைகளில் நீங்கள் பார்த்தால் தமிழ் மக்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு தீர்வுத் திட்டமும் முன்வைக்கவில்லை. நீங்கள் வையுங்கோ என தொடர்ச்சியாக சம்மந்தனோ ஏனைய கட்சிகளோ எங்களிடம் தான் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் முன்வைத்தால் அவர்கள் ஏற்கமாட்டார்கள். அதனால் அவர்கள் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கட்டும். நாங்கள் ஆராய தயாராகவே உள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

குறிப்பாக சொல்லப் போனால் அவர் பந்தை எமது பக்கம் தட்டிவிட்டுள்ளார். நீங்கள் தீர்வுத் திட்டத்துடன் வாருங்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு முன்பாக அவர்கள் வடக்கு- கிழக்கு இணைக்க முடியாது, சமஸ்டி கொடுக்க முடியாது, 13 திருத்தம், ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்ற ஒரு மனநிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். தற்போது இருக்க கூடிய நிலையில் ஒரு அரசியல் சாசன மாற்றம் முழுமையாக வருமா? அல்லது தற்போதைய ஒற்றையாட்சி சாசனத்தில் சில திருத்தம் கொண்டு வரப்படுமா? என்பது கேள்விக்குறியே.

ஏனென்றால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த பாராளுமன்ற விவாதத்தில் புதிய அரசியல் சாசனம் என்பதில் புதிய என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் மாற்றம் என்றே பேசப்படுகிறது. அரசியல் சாசன சபையை நிறுவது தொடர்பாக போன மாதம் இரண்டு நாட்கள், இந்த மாதம் இரண்டு நாட்கள் விவாதங்கள் நடந்தும் இன்னும் வாக்கெடுப்புக்கு செல்லவில்லை. அடுத்த மாதம் தான் வாக்கெடுப்புக்கு போகும் என்று கூறப்படுகிறது. வாக்கெடுப்புக்கு போகும் முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்று குறிப்பிடப்பட்ட பந்தி எல்லாம் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆளும் கட்சி இரண்டும் சேர்ந்து கொண்டு வரப்போகின்ற அரசியல் சாசன சபை ஓரு புதிய அரசியல் அமைப்பை கொண்டுவரப்போகிறதா அல்லது இருக்கின்ற அரசியல் சாசனத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரப் போகின்றதா என்பது பெரிய கேள்வி.

இப்பொழுது பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் அவர்கள் இருக்கிறார். அவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா, பிரமதமர் ரணில், சந்திரிக்கா பண்டாரநாயக்கா எல்லோரிடமும் தொடர்புகளை பேணி வருகிறார். அதனால் அவருக்கு எங்களை விட நன்றாக தெரியும் எவ்வாறான அரசியல் சாசனம் கொண்டு வரப்போகிறது என்பது. சம்மந்தன் கூட தெளிவாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும், சமஸ்டி அரசியல் அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிடுகின்றார்.

அவர் குறிப்பிடுவது உண்மையாக இருந்தால் புதிய அரசியலமைப்பு கொண்டுவருவதன் மூலமே அதனை செய்ய முடியும். சமஸ்டி இல்லாவிட்டால் அது சம்மந்தன் பேச்சுவார்த்தையை கூட ஆரம்பிக்க முடியாத சூழலை ஏற்படும். ஆகவே, இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்புக்கும் இடையில் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசன சபையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுகின்ற போது அங்கு இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திரகட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுக்குள் ஒரு உடன்டபாடு ஏற்பட்டிருந்தால் நான்கு நாட்கள் விவாதம் தேவையில்லை. இரண்டு நாட்களுடன் வாக்கெடுப்பு கொண்டு போயிருக்கலாம்.

ஆனால் கொண்டு போன திட்டத்தில் பல திட்டங்கள் மாற்றப்பட்டு அவர்களுக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, ஜனாதிபதி, பிரதமர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த சம்மந்தன் அடுத்த கட்டத்தை எவ்வாறு கொண்டு செல்வது, என்ன செய்ய போகிறார் என்ற அடிப்படையில் தான் அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படப் போகிறது.

இது தவிர, அரசியல் சாசன சபை ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அதில் உள்ள 225 பேரில் 16 பேர் மாத்திரமே தமிழ் தேசியக் கூட்டமைப்பே சார்ந்தவர்கள். இதனால் 116 பேர் கூறுவது எடுபடுமா என்று ஒரு கேள்வி இருக்கிறது. ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திகட்சி போன்ற எல்லோரும் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட கூறுகின்ற எல்லா விடயங்களையும் எதிர்ப்பார்கள்.

இதனால் தான் நாங்கள் சில விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்கள் பேரைவையின் தீர்வுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். இதில் மக்கள் கருத்துக்களைப் பெற்று அனை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் வழங்கவுள்ளோம். இந்த தீர்வுத் திட்டத்தை சரி என்று ஏற்றால் சம்மந்தன் கூட சேர்ந்து இதனை இன்னும் வலுப்படுத்தி அரசாங்கத்திடம் முன்வைக்க முடியும். இதில் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு வேண்டாம். இதில் தமிழ் மக்களின் பிரச்சனை. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் எதற்காக உங்களை தெரிவு செய்தார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனால் தான் நாங்கள் சில விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்கள் பேரைவையின் தீர்வுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். இதில் மக்கள் கருத்துக்களைப் பெற்று அனை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் வழங்கவுள்ளோம். இந்த தீர்வுத் திட்டத்தை சரி என்று ஏற்றால் சம்மந்தன் கூட சேர்ந்து இதனை இன்னும் வலுப்படுத்தி அரசாங்கத்திடம் முன்வைக்க முடியும். இதில் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு வேண்டாம். இதில் தமிழ் மக்களின் பிரச்சனை. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் எதற்காக உங்களை தெரிவு செய்தார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் இதய வைத்தியநிபுணர் பூ.லக்ஸ்மன் அவர்கள், நிபுணர்குழு உறுப்பினர்கள்: சட்டத்தரணி திரு.ந.காண்டீபன், சட்டத்தரணி திரு.வி.புவிதரன், சமுக செயல்பாட்டாளர் திரு.ரி.பரந்தாமன், சுரேஸ் க.பிறேமச்சந்திரன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), ஆகியோர் தமிழ் மக்கள் பேரவை தொடர்பிலும், அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பிலும் பொதுமக்களின் கேள்விகள் - ஐயங்களுக்கு விளக்கமளித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா