Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நோர்வே: 'தமிழ்3 இன் தமிழர் மூவர்' - இளைய ஆளுமையாளர் விருது! Top News
[Wednesday 2016-03-09 07:00]

தமிழ்3 நோர்வே தமிழர் வானொலியின "சங்கமம்" நிகழ்வு கடந்த ஞாயிறு (06.03.16) ஒஸ்லோவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் "தமிழ்3 இன் தமிழர் மூவர்-2016": எனும் சிறப்பு விருது மூலம்; இளைய தலைமுறையைச் நேர்ந்த துறைசார் ஆளுமையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

ஒரு உதவி மேயர், ஒரு நீதிபதி, ஒரு மருத்துவ ஆய்வாளர் முன்மாதிரி ஆளுமைகளாகத் தெரிவு!

நோர்வே தமிழ்3 வானொலியினால் வருடந்தோறும் வழங்கப்பட்டுவரும் "தமிழ்3 இன் தமிழர் மூவர்" விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. இளநிலை நீதிபதியாக இருக்கின்ற பிரசாந்தி சிவபாலச்சந்திரன்,ஒஸ்லோ மாநகரத்தின் பிரதிமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள கம்சாயினி குணரத்தினம், மற்றும் புற்று நோய் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள மருத்துவர் லாவண்யா திருச்செல்வம் கைலை ஆகியோரே இம் மதிப்பளிப்பினைப் பெற்றுள்ளனர்.

இவ்வாரம் ஒஸ்லோ தமிழ் மூன்று வானொலியானது தனது மூன்றாவது ஆண்டுநிறைவினை கோண்டாடியவேளையே இம் மூவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

முதலாவது தமிழ்ப் பின்னணி நீதிபதி

ஒரு வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு இடம்பெயர்ந்த பிரசாந்தி சிவபாலச்சந்திரனே நோர்வேயில் முதலாவது தமிழ்ப் பின்னணியினைக் கொண்ட நீதிபதியாக நியமனம் பெற்றவராகின்றார். வடநோர்வேயின் துரொம்சோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்துக்கொண்ட பிரசாந்தி பல்வேறு பொறுப்புகளினூடு தனது தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொண்டுள்ளார்.

- தலைமை தாங்குவது எனக்குப் பிடித்தவிடயம். இந்தவகையில் நீதிபதித் தொழில் எனக்கு நன்கு ஒத்துவருகிறது, என்று கூறும் பிரசாந்தி ஒரு நோக்கத்தினைத் தெரிந்தெடுத்தால் அதற்காகக் கடுமையாக உழைப்பது தனது பண்பு என்று கூறுகிறார்.

இளவயதுப் பிரதி முதல்வர்

மூன்று வயதில் நோர்வேக்கு தனது பெற்றோருடன் குடிபெயர்ந்த ஹம்சாயினி குணரத்தினத்தினை நோர்வேத் தொழிற்கட்சி இவ்வருடம் இளவயதிலேயே ஒஸ்லோவின் உதவி மேயராக ஆக்கியமை நோர்வே பெருந்தளத்தில் கவனத்தினை ஈர்த்தது. தனது பத்தொன்பதாவது வயதில் ஒஸ்லோவாழ் தமிழ்மக்களின் அமோக ஆதரவுடன் மாநகரசபைசென்ற ஹம்சாயினி வெகுவேகமாக ஒஸ்லோவின் ஒரு முக்கியபதவிக்கு தனது 27 வது வயதிலேயே உயர்ந்தமைக்கு தனது கடும் உழைப்பே காரணம் என்கிறார்.

-எனது பெற்றோர்கள் எனக்கு நல்ல வழிகாட்டிகளாக இருந்துள்ளார்கள், அதனைவிடவும் ஒஸ்லோவில் இருந்த தமிழ்ப் பெரியோர்கள் பலர் எனது வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார்கள். எனினும் அரசியல் அரங்கில் எனது கடும் உழைப்புத்தான் என்னை மேலும் வளர்த்துவிட்டுள்ளது. 2013 ம் ஆண்டு ஹம்சாயினி குணரத்தினம் தொழிற்கட்சியின் ஒஸ்லோப்பகுதி இளையோரமைப்புத் தலைவராகவும் இருந்துள்ளார். 2011ம் ஆண்டு நோர்வேயில் இடம்பெற்ற உலகறிந்த பெரும் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தப்பி மீண்டவர் ஹம்சாயினி குணரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இளவயதில் தமிழ் இளையோர் அமைப்பில் தன்னை இணைத்துச் செயற்பட்டவர் இவர்.

சளைக்காத புற்று நோய் ஆய்வாளர்

நான்குவயதுச் சிறுமியாக1988 ம் ஆண்டு நோர்வே வந்த லாவண்யா திருச்செல்வம் கைலை, மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவானது முதலே ஆய்வாளராக வரவேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளார். மருத்துவம் என்பது நோயாளிகளைமட்டும் கருத்தில் கொள்வதுமட்டுமல்ல சுகதேகிகளாக இருப்பவர்கள் நோய்வாய்ப்படாமல் பாதுகாப்பதுவும் மருத்துவக்கல்வியின் முக்கியபங்கு என்று கூறும் லாவண்யா தனது ஆய்வு உயிர்காக்க உதவலாம் என்கிறார். -புற்றுநோய்க்கெதிரான மருந்தொன்றைக் கண்டுபிடிப்பதற்கு எனது ஆய்வு உதவினால் மிகவும் சந்தோசப்படுவேன். சின்ன வயதில் இருந்தே ஒருவிடயம் விளங்காவிட்டால் அதனை அறியாமல் விடமாட்டேன், என்றுகூறும் லாவண்யா நோர்வேவாழ் இளையோரிற்கு எடுத்துக்காட்டாகவிருப்பது மகிழ்வாகவிருக்கிறதென்கிறார்.

-நோர்வேயில் முனேறுவதற்கு பலவழிகளுள்ளன. இளையோர்கள் தமக்குப் பிடித்த துறையினை தெரிந்துவிட்டால்-அது எத்துறையாயிருந்தாலும் கடுமையாக விடாப்பிடியாக உழைக்கவேண்டும்.

"தமிழ்3இன் தமிழர் முவர்" மதிப்பளிப்பு வைபவத்தினை நோர்வே பேர்கன்வாழ் பேரசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை, மருத்துவக்கலாநிதிப் பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் ரவீனா மனோதீபன் அகியோர் தலைமைதாங்கினார்

பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை தலைமையில், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், மருத்துவர் ரவீனா மனோதீபன், ஊடகவியலாளர் ராஜன் செல்லையா, மற்றும் ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா ஆகிய ஐவர்; அடங்கிய நடுவர்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட ஆளுமைகளிலிருந்து மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட மூவரும் 06.03.2015 நடைபெற்ற தமிழ் 3 வானொலியின் 'சங்கமம்' நிகழ்வில் மதிப்பளிக்களிக்கப்பட்டனர்.

-ராஜன் செல்லையா-

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா