Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
யேர்மனியில் எழுச்சிகரமாக நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்: Top News
[Monday 2016-03-14 07:00]

அனைத்துலக பெண்கள் தின நிகழ்வு நேற்றையதினம் டுசுல்டோர்வ் நகரில் எழுச்சிகரமாக நடைபெற்றது. பெண்கள் அமைப்பினர் கறுப்புஉடையணிந்து கலந்துகொண்டுடிருந்தனர். தாயகத்தில் போரின் பின்பான காலங்களில் சிறீலங்கா இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் பெண்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் கருத்தடைகள், பாலியல் ரீதியான தொல்லைகள், இனக்கலப்பிற்கு தூண்டுதல், போன்ற கொடுமைகள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்றது.

பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும், உளவியல்பாதிப்புக்கு உட்பட்டவர்களாகவும் அலைகின்ற நிலைமையே உள்ளது. இவ் அவலங்களுக்கெதிராக குரல் கொடுக்கும் முகமாக பெண்கள் அமைப்பினரும் யேர்மனிய பெண்கள் அமைப்புக்களுடனும் பெண்கள் உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றது தெரிந்ததே.

அனைத்துலக பெண்கள் தினத்தில் தொடர்ச்சியாக பேர்லின் நகரில் ஆர்பாட்ட ஊர்வலமும் சுற்காட் வீஸ்பாடன் நகரில் யேர்மனிய மற்றும் வேற்று நாட்டின பெண்கள் அமைப்புக்களுடனான சந்திப்புக்களும்; டுசுல்டோர்வ் நகரில் பெண்கள் எழுச்சி தின நிகழ்வுகள் நடைபெற்றது.

நிகழ்வில் பெண்களின் ஆக்கங்களிள் உருவான கவியரங்கம் நாடகம் எழுச்சிநடனங்கள் என்பன நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய டெர்சிம் நாட்டு பெண்மணி உரையாற்றுகையில் பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்ற கருத்ததை வலியுருத்தி உரையாற்றினார்.உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது. என்று உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றியவர்களும் இக்கருத்தையே வலியுறுத்தினார்கள். தாயகத்தில் போரினால் விதவைகள் ஆக்கப்பட்டவர்களின் தொகை அசாதாரணமானது. இதனை சர்வதேசதாபனங்களும் அறிக்கைப்படுத்தியுள்ளது. வடக்கு வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் யுத்தவிதவைகளும் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் யுத்தவிதவைகளும் உள்ளார்கள். இவர்களில் 12 ஆயிரம் பெண்கள் 40 வயதிற்கு உட்பட்ட இளம் விதவைகள்.

8 ஆயிரம் பெண்கள் 3 பிள்ளைகளுடன் கணவர் இன்றி வாழவேண்டியுள்ளது. இவை மட்டும் அல்ல இன்னம் காணாமல் போனோர்கள் அதிகமாக உள்ளார்கள். இவர்களின் வாழ்வாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் பெண்கள் சமூகத்தில் நாதியற்றவர்களாக உள்ளார்கள். இவர்களுக்கு வெளிநாடுகளில் வாழும் பெண்கள் தான் வலுவூட்டல் செய்யவேண்டும் வாழ்வாதாரத்திலும் வலுவூட்டலிலும் வெளிநாட்டில் வாழும் பெண்கள் உதவிக்கரம் நீட்டவேண்டும் என்ற கருத்தை அண்மையில் அனந்தியும் உணர்த்தியுள்ளார்.

தகவல்

தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா