Untitled Document
November 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ரொறன்ரோ - பெரிய சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற Blends Of Bharatham நிகழ்வு: Top News
[Monday 2016-03-14 11:00]

Toronto Society Of Bharathanatyam Dancers presented - Blends Of Bharatham - A fundraiser event and donated $12,001 to the Scarborough Hospital Foundation, Sunday, March 13, 2016, Toronto. Toronto Society Of Bharathanatyam Dancers என்ற அமைப்பினால் முன்னணி நடன பள்ளிகளை மிகவும் சிறந்த முறையில் நடத்திவரும் பரத நாட்டிய ஆசிரியைகளின் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அமைந்த கூட்டணியினால் இன்று சரியாக திட்டமிட்டபடி நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. வழக்கம்போல கனேடிய தமிழ் வாழ்த்து கீதங்கள் காற்றலைகளில் தவன்றது.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றல் இடம்பெற்றது. வைத்திய கலாநிதி டாக்டர் கிருபாகரன் ஆரம்ப மங்கள விளக்கினை ஏற்றிவைத்தார்கள். ஆரம்பநிகழ்வாக விநாயகர் துதி பாடலுக்கு இரண்டு மாணவிகள் மிகவும் அசத்தலாக பரத நாட்டிய விருந்தளித்தனர். அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பான பாடல்களுக்கு பரத நாட்டிய நிகழ்சிகள் அரங்கேறின. நிகழ்சிகள் அனைத்தும் தரத்தில் மிகவும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக நடன விருந்தளித்த மாணவிகளின் ஆடை அணி மற்றும் ஆபரணங்களின் தெரிவு அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அருமையான பொறிபறந்த ஜதிகள், அடவு கோர்வைகள், பாத வே லைகள் பரவச மூட்டின. ஒவ்வோர் இனத்தின் பெருமைகளைப் பறை சாற்றுவது அவ்வினத்தினால் பேணி வளர்க்கப்பட்டு வரும் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவாகும். இந்த வகையில் தமிழினம் மிகுந்த சிறப்புகளைக் கொண்ட ஓர் இனமாக மிளிர்ந்து வருவதை உலகறியும். கலையும் பண்பாடும் ஓரினத்தின் அடையாளம் என்பதை நன்கு நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழினத்தின் கலைகளில் மிக முக்கியமானதோர் இடத்தைப் பரதநாட்டியக் கலை பெற்றிருக்கிறது என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். அதற்கு ஒரு காரணமாக அமைவது அதன் தொன்மையாகும்.

பரத நாட்டியக் கலையானது மற்றவரின் திறமைகளைப் போற்றவும் இரசிக்கவும் தூண்டுகோலாய் அமைகிறது. மற்றவர்களிடமுள்ள திறமைகளை ஆற்றல்களை இனங்கண்டு மதித்து வாழப் பழக்குகிறது. இதனை பறைசாற்றும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய பரத மற்றும் நடன நிகழ்சிகள் கலந்துகொண்டவர்களுக்கு விருந்தளித்தது என்றால் அதுமிகையாகாது. குறிப்பாக நடனத்துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் அதை நிரூபிக்கும் பொருட்டு இந்த சிறப்பான கலை நிகழ்ச்சியை ஓர் சவாலாக எடுத்து இந்த பெரிய தொகையினை சேர்த்தமைக்கு அனைவரும் முன்வந்து அவர்களை வாழ்த்த வேண்டுமென தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன். நிகழ்சிகளை கண்டு ரசிக்க மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இன்றைய நிகழ்வின் பிரதான நோக்கம் யாதெனில் வியாபார மற்றும் பொதுமக்களிடம் இருந்து சேர்கின்ற தொகையினை ஸ்காபுரோ வைத்தியசாலையின் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாகும். அந்தவகையில் தொழில் அதிபர் கணேஷன் சுகுமார், தொழில் அதிபர் கிருபா கிருஷன், கனடா கந்தசாமி கோவில், நடன ஆசிரியைகள் என பலரும் தங்களால் ஆன நன்கொடையினை வழங்கி நன்கொடைத்தொகையினை $12,001 என்ற உச்சத்திற்கு அழைத்து சென்றனர்.

சேர்க்கப்பட்ட தொகையினை வைத்திய சாலையின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கின்ற ஓர் சம்பிரதாய நிகழ்வு அரங்கில் இடம்பெற்றது. ஸ்காபுரோ வைத்தியசாலையின் நிர்வாகத்திடம் சேர்க்கப்பட்ட தொகை வழங்கப்பட்டது. தற்போது கணேஷன் சுகுமார் அவர்கள் ஸ்காபுரோ வைத்தியசாலையின் நிதி சேகரிப்பு மையத்திற்கு தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. நடன நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவிகள் மற்றும் நடன ஆசிரியைகள் ஆகியோருக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பு கெளரவம் செய்யப்பட்டது. ஊடகத்துறை பொறுப்பினை கனடா உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஆர் என் லோகேந்திரலிங்கம் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வுகள் சம்பந்தமாக செய்திகளை சேகரித்ததனை அவதானிக்க முடிந்தது.

அதேபோல Tamil mirror , seithy.com , Ninaivukal-Lankasri , Ekuruvi , Analai Express , Eettv போன்ற ஊடகங்கள் கலந்துகொண்டு விழாவின் நிகழ்வுகளை படம்பிடித்த வண்ணம் இருந்தார்கள். நாவிற்கு சுவையான பலகார வகைகள் குறைந்த விலையில் விற்கப்பட்டன. சமூகத்தலைவர், திருத்தலத்தொண்டர், அறிவாளர், சமூக ஒருங்கிணைப்பாளர் திரு சோம சச்சிதானந்தம் அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளின் சிறப்பினை பகிர்ந்து கொண்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது. நிகழ்வுகளின் ஒலிக்கட்டுபாட்டினை நாகராஜா அவர்கள் மிகவும் திறமையான முறையில் வழங்கியிருந்தார்கள். வழங்கிய சகல நாட்டியங்களும் மிகவும் சிறப்பாக இருந்தன. இவ் அரிய நிதி சேகரிப்பு நிகழ்விற்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றிகள்.

செய்தி தொகுப்பு - இலங்கேஸ்

படங்கள் - www.puthinamphotos.com

படங்கள் - www.puthinamphotos.com

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா