Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சுவீடனில் நடைபெற்ற வட்டுக்கோட்டை 40 ஆவது ஆண்டு கருத்தரங்கு : Top News
[Tuesday 2016-03-22 18:00]

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாகிய இவ் ஆண்டை 'வட்டுக்கோட்டை தீர்மானம்' வலுவூட்டல் ஆண்டாக பிரகடனம் செய்து அதுகுறித்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழ் இளையோர்கள் ஆகியவை இணைந்து முன்னெடுத்துவரும் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' வலுவூட்டல் செயற்பாடுகளின் அடிப்படையில் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சமநேரத்தில் கடந்த 12 ஆம் திகதி சுவீடனில் முதலாவது கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் சுவீடன் வாழ் ஈழத்தமிழ் மக்களும் கலந்துகொண்டிருந்த இக்கருத்தரங்கில் அனைத்துலக மக்களவையின் தலைவர் பேராசிரியர் திரு. சிறிரஞ்சன் (கனடா), நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன்(அமெரிக்கா) மருத்துவர் எழிலன்(தமிழ்நாடு) திருமுருகன் காந்தி(தமிழ்நாடு), அரசியல் ஆய்வாளர் திரு. நிர்மானுசன் ஆகியோர் இணையவழித் தொடர்பின் மூலம் பங்கேற்று கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள்.

அத்துடன் தமிழீழ ஆதரவாளர்களான கொளத்தூர்மணி, மருத்துவர் வரதராசன் மற்றும் புகழேந்தி தங்கராஜ் ஆகியோரது கருத்துரைகள் காணொளிப் பதிவுகளாக திரையிடப்பட்டது.

இலங்கைத் தீவில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழமாக தமிழர்கள் மீழ்வது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதை அறுதியிட்டு உரைக்கும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலுப்படுத்துவது ஒன்றே தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்கும் மார்க்கமாகும். சிங்களக் குடியேற்றத்திற்கு வித்திட்ட இலங்கையின் முதலாவது பிரதமராகிய டி.எஸ். சேனநாயக்காவின் 64வது நினைவுதினமாகிய இன்று புலம்பெயர் தமிழர்களால் நினைவுபடுத்தும் செய்தியாக இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வலுவூட்டல் அமைகின்றது. நல்லாட்சி என்ற போர்வையில் புலம்பெயர் தமிழர்களை அடக்க முயலும் சிங்களப் பேரினவாத அரசின் சிந்தனைக்கு ஒரு அம்பு எய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இச்செயற்பாட்டின் அடுத்தகட்டமாக அமெரிக்கா மற்றும் யேர்மனி ஆகிய நாடுகளில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. வட்டுக்கோட்டை தீர்மானம் வலுவூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அமைப்புக்கள் மற்றும் அமைப்பு சாராத பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்க உள்ளார்கள்.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா