Untitled Document
November 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்ற ஒன்று கூடல்: Top News
[Friday 2016-03-25 20:00]

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்ற தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பிரித்தானிய தமிழர் பேரவையின் அரசியல் மட்ட ஒன்று கூடல் - பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒவ்வொரு வருடமும் ஒழங்கு செய்யப்பட்டு நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23ம் திகதி பங்குனி மாதம் அன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் (David Cameron) அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தலைமை வகித்ததுடன் பிரதம விருந்தினராக தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டு விவகார அமைச்சர் ஹுகோ ஸ்வைர் (Rt Hon Hugo Swire MP) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் (David Cameron) அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் இந்நிகழ்விற்கு தனது மனப்பூர்வ வாழ்த்தினை தெருவித்ததுடன் இலங்கையின் ஜனாதிபதியும், பிரதமரும் சர்வதேச நாடுகளின் வல்லுனர்கள் மற்றும் அவர்களின் அனுபவங்களின் பங்களிப்புடன் பொறுப்புக் கூறல் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் மீள் புனரமைப்பு என்பனவற்றை நிறைவேற்ற வேண்டும் என பிரித்தானியாவின் சர்வதேச விசாரணை தொடர்பான நிலைப்பாட்டினை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தியிருந்தார்.

இலங்கையில் தமிழர்களின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகவும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் முகமாகவும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழர்களின் கோரிக்கையினை முன்வைக்கும் முகமாகவும் ஒழுங்கு செயப்பட்ட இந்நிகழ்வில் பிரித்தானிய அரசின் கொள்கைகளிலும், முக்கியமான முடிவுகளிலும் தீர்மானகரமான செல்வாக்கு செலுத்தும் முக்கிய தலைவர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரித்தானியாவிலுள்ள இந்திய சமூகத்தின் செல்வாக்கு மிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது ஆதரவினையும் கருத்தினையும் வழங்கினர்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பிற்ப்பாடு உலக அரசியலின் ஒழுங்குக்கு ஏற்ப சர்வதேச நாடுகளுடன் எமது உறவைப் பலப்படுத்த வேண்டிய நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரித்தானிய தமிழர் பேரவை தனது அரசியல் செயற் ப்படுகளை சர்வதேச நாடுகளுடனான உறவைப் பலப்படுத்துவதினூடக பல தளங்களில் விரிவுபடுத்தியிருந்தத்துடன் சர்வதேச நாடுகளின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் பல மாற்றங்களையும் ஏற்ப்படுத்த வழிவகுத்திருந்தது. . குறிப்பாக கடந்த பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் அவர்களால் முன்மொழியப்பட்ட சுயாதீன சர்வதேச விசாரணை முதல் கடந்த வருடம் ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையாளரினால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான அறிக்கை வரை சர்வதேச நாடுகளுடனான பிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர் செயற்பாடே முக்கிய பங்கு வகித்தது.

ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையாளரினால் முன்மொழியப்பட்ட இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை அமெரிக்காவின் தலையீட்டாலும் இலங்கையில் ஏற்ப்பட்ட ஆட்சி மாற்றத்தினாலும் நீர்த்துப் போன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இத் தீர்மானம் அமைந்திருந்தாலும், இத் தீர்மானத்தில் உள்ள சர்வதேச நாடுகளின் ஈடுபாட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரி தமிழர்களின் அழுத்தங்களை பிரயோகிக்கும் முகமாக இவ் ஒன்றுகூடல் ஒழுங்கு செயப்பட்டு இருந்தது.

இவ் ஒன்று கூடலில் பங்கு பற்றிய பாராளு மன்ற உறுப்பினர்களிடம் இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரவும், விசாரணையில் சர்வதேச நீதவான்கள் மற்றும் விசாரணையாளர்களின் பங்குபற்றலினை உறுதிப்படுத்தவும் சாட்சியாலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுதத்துவதுடன் தமிழர் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினரை முற்றாக வெளியேற்றக்கோரி இலங்கை அரசிற்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகள் கிடைக்கும் வரையில் பிரித்தானியா தொடர்ச்சியாக தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் என உறுதிமொழி அழித்திருந்ததுடன் இலங்கை அரசு உடனடியாக யுத்தக்குற்றம் மற்றும் சித்திரவதை தொடர்பான குற்றச்செயல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்க்கொள்வதுடன் மீள் புனரமைப்பினை மேற்கொள்ளல் வேண்டும் எனவும் தமது கோரிக்கையினை முன்வைத்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா