Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சம்பூர் கைம்பெண்கள் வீடமைப்புத் திட்டம்: - வீடுகள் கையளிக்கப்பட்டது Top News
[Tuesday 2016-03-29 12:00]

திருகோணமலை மாவட்டத்தின்; மூதூர் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 24 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி பொதுவாகச் சம்பூர் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. 'சம்பூர்' எனக் சுட்டப்படும் மேற்படி பகுதியில் 2006ஆம் ஆண்டில் 1853 குடும்பங்களைச் சேர்ந்த 7046 மக்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்தனர் 2006 சித்திரைத் திங்களில் மாவிலாற்றில் தொடங்கி நடைபெற்ற போரின் விளைவாக முன்கூறிய 1853 குடும்பங்களும் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.பல்வேறு இடப்பெயர்வுகளுக்குப் பின்பு இவர்கள் சம்பூருக்கு அண்மையில் உள்ள கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

எனினும், முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், உயர் பாதுகாப்பு வலயம் ஆகியவற்றைக் காரணமாகக் காட்டிச் சம்பூர் மேற்கு, சம்பூர் கிழக்கு, கடற்கரைச் சேனை ஒரு பகுதி ஆகியவற்றில் வாழ்ந்து வந்த 825 குடும்பங்களைச் சேர்ந்த 2598 மக்கள் மீள்குடியேற ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

2015 தைத் திங்களில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்பு புதிதாக வந்த அரசு இக்காணிகளை விட முனைந்தாலும், முதலீட்டு ஊக்குவிப்பு வலயக் குத்தகைக்கு எடுத்த 'கேற்வே' என்ற நிறுவனம் பல்வேறு தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ. சுமந்திரன், மாண்புமிகு இரா சம்பந்தன் ஆகியோர் நீதிமன்றம் சென்று இத்தடைகளை அகற்றிய பின்பு முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கென ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் நிலம் 2015 ஆவணி 22ஆம் நாளன்று விடுவிக்கப்பட்டு 367 குடும்பங்கள் மீள்குடியமர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த 367 குடும்பங்ளில் 41 குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகும்.

இந்த 41 குடும்பங்களுக்கும் வீடமைக்கும் பணியைக் கனடியத் தமிழர் பேரவை பொறுப்பேற்றது. இதற்கு நிதிசேகரிக்கும் பொருட்டாக 2015 புரட்டாதி 13ஆம் நாள் நாம் ஒரு நிதிசேர் நடையை மேற்கொண்டது. திருகோணமலை நலன்புரிச் சங்கம் இதில் பங்காளராக இணைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 41 வீடுகளையும் அமைப்பதற்காக ஓர் இலட்சம் டொலர் நிதியைத் திரட்டப்பட்டது.

இந்த 41 வீடுகளில் 18 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, இவற்றைக் கையளிக்கும் விழா 2016.03.25 ஆம் நாள் காலை ஒன்பது மணிக்குச் சம்பூரில் நடைபெற்றது. இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு இரா சம்பந்தன், இலங்கை அரசின் மீள் குடியேற்ற அமைச்சர் மாண்புமிகு எம். சுவாமிநாதன், கிழக்குமாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் கபிஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண மீள்குடியேற்ற அமைச்சர் சி தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண வேளாண்மைத் துறை அமைச்சர் க. துரைராசசிங்கம், கிழக்கு மாகாணச் சாலை அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினசிங்கம், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் புஸ்பகுமார உள்ளிட்ட பெருமக்களோடு பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசின் மீள் குடியேற்ற அமைச்சர் மாண்புமிகு எம். சுவாமிநாதன், எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு இரா சம்பந்தன், கிழக்குமாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ, ஆகியோர் நாடாவைவெட்டித் திறப்புகளைக் கையளித்து 18 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வீடுகளைக் கையளித்தனர்.

இதுதொடர்பான படங்களையும் காணொலியையும் இங்கே காண்க. எஞ்சியுள்ள 23 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வீடமைக்கும் பணிகள் இன்னும் இரண்டு மாதத்துள் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா