Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானியாவில் இடம்பெற்ற
[Wednesday 2016-05-04 19:00]

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழவுகள் கடந்த 01/05/2016 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரு. இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம்,, தமிழகத்தின் பிரபல பாடகர் திரு. டி எல் மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன், கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும் மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு. ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய கொடியினை பிரித்தானிய காவல்துறையை சேர்ந்த திரு. சுரேஷ் அவர்களும். தமிழீழ தேசியக் கொடியினை திரு சாம்ராஜ் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து பொதுத்தூபிக்கான மலர் மாலையினை திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி அவர்கள் அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முதல் மாவீரர் லெப்டினன்ட் சத்தியநாதன் சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அவரது தந்தை ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார். முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் திருவுருவபடத்திற்கு திருமதி பிரிக்கேடியர் கடாபி சுதா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார்.

ஈகைச்சுடர் தியாகி முத்துக்குமார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு திரு. கபிலன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவிக்க, நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு திருமதி சுகிந்திரா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார்.

பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டு அனைத்து மக்களும் மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கும்,நினைவுக்கற்களுக்கும், பொதுத் தூபிக்கும் ஈகைச்க்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

மலர் வணக்கத்தை தொடர்ந்து தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அத்தியாயத்தை பதிவு செய்த உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் பெயர்ப்பலகைத் திரைநீக்கத்தினை எமது எதிர்கால சிற்பிகளான சிறார்கள் வைபவ ரீதியாக திரை நீக்கம் செய்துவைத்தனர்.

பெருந்திரளான பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வில், அரங்க நிகழ்வுகளாக. வரவேற்பு நடனத்தினை செல்வி ஆர்த்தி அவர்களும் செல்வன் மிதுரன் அவர்களும் வழங்க வாழ்த்துரையினை இந்தநிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து சிறப்பித்த பிரபல தமிழக பாடகர் மதிப்பிற்குரிய திரு. ரி. எல். மகாராஜன் அவர்கள் வழங்கினார்.

கருத்துரைகளை தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் தற்போதைய சபாநாயகர் திருபாலச்சந்திரன் அவர்கள் , ஓக்ஸ்போர்ட் நகரசபை முன்னைநாள் உறுப்பினர் திரு. மயில்வாகனம் மற்றும் சோபினா ஆகியோர் நிகழ்த்தியதை அடுத்து, சிறப்புரையினை தமிழீழ வைப்பக முன்னாள் மேலாளர் திருபாலகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து, மக்கள் மத்தியில் இருந்து உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு தமது வாழ்த்துக்கள், மற்றும் வேண்டுகோள்கள் அடங்கிய வாழ்த்துமடல் ஒன்றும் உலகத் தமிழர் வரலாற்று மைய நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

பின்னர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை திரு. சுரேஷ் அவர்களும், மாவீரர் புகழ்பாடும் கவிதையினை கவிஞர் திரு. சிவசுப்ரமணியம் அவர்களும் நிகழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் கணக்கறிக்கையினை அதன் இயக்குனர் சபை உறுப்பினர் திரு. சத்தியரூபன் அவர்கள் வாசித்தார். இறுதியாக உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையினை வளங்க தமிழீழ எழுச்சி பாடலுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடை ந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா