Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானிய தமிழர் பேரவையினரால் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான கண்டனப் பேரணி Top News
[Friday 2016-05-13 21:00]

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு நாட்களாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. நேற்றைய தினம் (12/05/2016) காலை 8 மணி முதல் மாலை 4மனி வரை இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இவ் கண்டனப் பேரணியில் லண்டனின் பல பாகங்களிலும் இருந்து பெரும் திரளாக தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஊழலுக்கு எதிராக நடைபெற்ற இம் மாநாட்டில் ஆரப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் மூலம் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் நடந்து விடவில்லை என்பதும்,2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் தமிழர் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு காரணமானவர்களில் இலங்கை அதிபராக இருக்கிற மைத்திரிபால சிறிசேனாவும் ஒருவர் என்பதும் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளின் பிரகாரம் பயங்கரவாத தடை சட்டம் உடனடியாக நீக்கப்படல் வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும், தமிழ் மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படல் வேண்டும், வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் மற்றும் சரவதேச சட்டவல்லுனர்களின் பங்களிப்புடன் இனப்படுகொலைக்கான நீதி விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையின் புதிய அரசாங்கம் ஓர் நல்லாட்சி அரசாங்கம் என சர்வதேச சமூகத்தை தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் இத் தருணத்தில், தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட இவ் கண்டனப் பேரணி இலங்கை அரசுக்கு உலக அரங்கில் பெரும் நெருக்கடிகளையும், இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளையும் வெளி உலகிற்கு தெளிவுபடுத்தியிருக்கின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவையினரால் எம் மக்களின் விடிவு நோக்கி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான அரசியல் செயர்ப்பாடுகளுக்கு புலம் பெயர் வாழ் எம் உறவுகளின் ஆதரவினை பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியாக வேண்டி நிற்கின்றது. இதே போன்று எதிர் வரும் 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செயப்பட்டுள்ள 7ம் ஆண்டு முள்ளி வாய்க்கால் நினைவு தினத்திலும் பெரும் திரளாக உறவுகள் கலந்து கொண்டு எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி குரல் கொடுக்க ஒன்று சேருமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா