Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரான்சு பாரிஸில் கடும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Thursday 2016-05-19 21:00]

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மிக பேரெழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணியளவில் பேரணி புறப்பட்டது. La Chapelle மெட்ரோ நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி Rue de Faubourg Saint Denis ஊடாக Gare de Nord சென்று Rue La Fayette வலது பக்க தெருவூடாக திரும்பி பின்பு இடது பக்கமாக Rue de Saint Quentin Clhf Boulevard Magenta சென்று Gare de l 'est முன்பாக Rue de 8 Mai 1945 ஊடாக சென்று பின்பு Rue du Faubourg Saint Martin வழியாக Rotonde de la Villette வழியாக Jaures metro நிலையத்துக்கு அருகாமையில் Place de la Bataille de Stalingrad இனைச் சென்றடைந்தது. குறித்த பேரணியில் குர்திஸ்தான் மக்களும் எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பேரணி சென்ற வழியில் Gare de Nord இல் குர்திஸ்தான் போராளிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பேரணி தொடர்ந்துசென்றது. Place de la Bataille de Stalingrad இல் முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் ​- தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் இடம்பெற்றன.

முதலில் அங்கு விசேடமாக அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் மகேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்காலில் மகளை இழந்த தந்தை ஒருவர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதில் ஆரம்ப பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.சுரேஸ் அவர்கள் ஆற்றினார்.

தமிழருக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவர் Mme Marie George Buffet Depute de Seine Saint Denis

ஐரோப்பிய குர்திஸ்தான் பெண்கள் அமைப்பு Mme Perevan பிரான்சு தமிழீழ ஆதரவு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் Mme Mireille Guitton Maire Adjoint d

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா