Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பீனிக்ஸ் பறவைகள் போல் மீண்டும் உயிர்பெறும் முல்லைத்தீவு. Top News
[Friday 2016-09-02 18:00]

முல்லைத்தீவு மாவடடம் - புதுக்குடியிருப்பு 10ம் வடடாரத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் 27-08-2016 சனிக்கிழமை 1. "பீனிக்ஸ் மாற்றுத் திறனாளிகள் சங்கம்", 2. "கணினிக் கல்வி மையம்", 3. "வன்னீஸ்வரம் இசைக்குழு" ஆகிய மூன்று அமைப்புகளின் அங்குரார்ப்பண நிகழ்வு , மறுவாழ்வு - கனடா அமைப்பினரின் ஏற்பாட்டில் வடமாகாண சபையின் கௌரவ அமைச்சர் டெனிஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ள சங்கத் தலைவர் இ.பிரபாகரன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முதலில் சங்கத்தின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்த அமைச்சர் " நாங்கள் வீழ்ந்துவிட்ட இனமல்ல, மாற்றுத் திறனாளிகளாய் இருந்தாலும் கூட பீனிக்ஸ் பறவைகள்போல் நாங்கள் மீண்டும் எழுவோம் என்பதை இங்கு நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்" என்று குறிப்பிடடார்.

அடுத்த நிகழ்வாக புதியதொரு கணினிக் கல்வி நிலையம் பத்துக் கணினிகளோடு மேசை கதிரைகள் உட்பட்ட தளபாட வசதிகளோடு 20 மாணவர்கள் பங்குகொள்ள கௌரவ அமைச்சரால் மங்கல விளக்கேற்றித் திறந்து வைக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய அமைச்சர் " உலகம் கணினி மயமாகி உள்ளது. கணினிக் கல்வி இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை. அனைத்தின் ஆதாரமாக இன்று கணினிதான் பயன்படுகிறது.

முல்லை மக்களின் கல்விக்கு கணினி அறிவின் அத்தியாவசியத்தை உணர்ந்துதான் மறுவாழ்வு - கனடா அமைப்பினர் இந்த கல்வி நிலையத்தை உருவாக்கியுள்ளனர். கூடியளவு மாற்றுத் திறனாளிகளையும் போரால் பாதிக்கப்பட்டோரையும் அரசியற் கைதிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் இந்த வகுப்புகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். அமைச்சர், ஆசிரியர் மாணவர்களோடு கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த "வன்னி ஸ்வரங்கள் " இசைக்குழுவின் அங்குரார்ப்பணம் அங்கே அமைக்கப்பட்டிருந்த மிக அழகிய மேடையில் பல்லாயிரம் மக்கள் கூடியிருக்க கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. கௌரவ முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களினால் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து தமது சார்பில் நீண்ட உரை ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அதை முழுமையாக வாசித்த அமைச்சர் டெனிஸ்வரன் இந்த முயற்சியை மிகவும் பாராட்டி இதற்கு அனுசரணை வழங்கிய மறுவாழ்வு - கனடா அமைப்பிற்கு தமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்த இசைக்குழுவின் மூலம் மாற்றுத் திறனாளிகள் உட்பட பலர் தமது வாழ்வாதாரத்தை பெறவுள்ளதோடு அவர்கள் தமது வருமானத்தின் மூலம் இன்னுமின்னும் பலருக்கு சுயதொழில் வாய்ப்புகளை தாமே ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதை அறியும்போது இத்திட்டம் பற்றி தாம் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக குறிப்பிடடார்.

ஒரு வயலினை எடுத்து சங்கத் தலைவர் பிரபாகரனிடம் கொடுத்து இசை நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதாக கௌரவ அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து இசைநிகழ்வுகள் முழங்கின. நடுஇரவு கடந்து 1.30 மணிவரை மக்கள் திறந்தவெளியில் ஆர்வமாக அமர்ந்திருந்து இசைமழையை ரசித்து மகிழ்ந்தார்கள். அனைவர் உள்ளங்களிலும் ஒரு புது நம்பிக்கையும் உற்சாகமும் மகிழ்ச்சியும் உருவான நிலையில் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா