Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இராணுவமயமாக்கலின் பின்னணியில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பினை அம்பலப்படுத்தும் முக்கியமான ஆவணம் வெளியிடப்பட்டது. Top News
[Friday 2016-10-28 20:00]

"Proliferating Buddhist Structures in Tamil Home land - Sowing the Seeds of Disharmony" என்னும் ஆவணத் தொகுப்பு திங்கள் கிழமை 24 அக்டோபர் 2016 அன்று மாலை 6 மணியிலிருந்து 8:30 மணிவரை பிரித்தானிய பாராளுமன்றத்தில் Attlee Suite, Portcullis House, London SW1A 2LW என்னும் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடன் (APPG T) இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஆவண தொகுப்பானது பல சிரமங்கள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல் மத்தியில் தமிழர் தாயகத்திலிருந்து ஆதாரபூர்வமான உண்மை தகவல்களை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டதாகும்.

இலங்கை தீவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து தமிழர் தாயகமானது சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் காரணமாக தமிழர்களின் அரசியல் மற்றும் பொருளாதார வலிமை சிதைக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா அரசின் முன்னைய சிங்கள குடியேற்றங்களும் நில ஆக்கிரமிப்பும் தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து புதிய வடிவங்களில் மிகவும் தூர நோக்குடனான தந்திரோபாயமிக்க பௌத்த சிங்களமயமாக்கல் திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

2009இல் வடக்குஇ கிழக்கு முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் உளவியல ரீதியாக அச்சறுத்தபட்டுள்ள பின்னணியில் சிறிதும் பெரிதுமாக பௌத்த சின்னங்கள் தமிழர் வாழ்விடங்களில் நிறுவப்பட்டு வருகின்றது. இன்று நடைபெறுவது, எதிர்காலத்தில் இவ் இடங்களை சூழ சிங்கள பௌத்த குடியேற்றங்களின் விஸ்தரிப்பை நியாயப்படுத்துவதற்கான ஒரு முயற்சி ஆகும்.

சர்வதேசத்தின் உதவியுடன் இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதர அம்சங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

தமிழ் மக்கள் மதவாதிகளோ இனவாதிகளோ அல்லர். தமிழர் தம் தாயகத்தில் சுயாதீனமாக தெற்கில் இருந்து இடம்பெயர்ந்து வரும் ஏனைய மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஆயினும் ஒரு அரசியல் மூல உபாயத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கின் குடித்தொகை பரம்பலில் தமிழ் மக்களிற்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடிய சிங்கள தேசத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் உள்ளது.

இவ் ஆவணம் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பது குறிப்பாக பிரித்தானிய நாட்டின் அரசியல் சக்திகள் மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள், கல்வி சார் அமைப்புகள், பிரித்தானியாவிலுள்ள தமிழர் சமூக அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் என பல வேறு அமைப்பினர் கலந்து கொண்டது முக்கியமான அம்சமாகும்.

இந்த புத்தகத்தின் அடிப்படைகளையும் அதிர்ச்சி ஊட்டும் தகவல்களையும் காணொளி வடிவில் பிரித்தானிய தமிழர் பேரவையும்,

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா