Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome

[Saturday 2016-10-29 17:00]

ஊவா மாகாண பதுளை மாவட்ட மீரியபெத்த மக்களுக்கான மக்கள்தெனிய புதிய மலைநாட்டு கிராமத்து மலையக தமிழர்களுக்கு, நாங்கள் அனைவரும் இந்த பூமி பந்தில் எங்கே வாழ்ந்தாலும் இனத்தால் ஒன்றுபட்ட தமிழர்களே என்ற செய்தியை, என் மூலமாக கனடிய தமிழர் தேசிய அவை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் மலைநாடு, வடக்கு, கிழக்கு, மேலகம், நாடுகடந்து கனடா என்ற பல்வேறு தளங்களில் வாழும் அனைத்து தமிழரையும் இணைக்கும் ஒரு நாடோடி தமிழன் என்ற பெருமை எனக்கும் கிடைத்துள்ளது. மீரியபெத்த- மக்கள்தெனிய மக்களுக்கான நிதியுதவிகளை முழுமையாக வழங்கி இந்நிகழ்வை சாத்தியமாக்கிய, கனடிய தமிழர் தேசிய அவை நண்பர்களுக்கு எனது நன்றிகளையும், உள்ளூரில் இந்த நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்துள்ள ஜனநாயக இளைஞர் இணைய உடன்பிறப்புகளுக்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மீரியபெத்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாட்சி அரசால் வழங்கப்பட்ட புதிய மலைநாட்டு மக்கள்தெனிய கிராம வீடமைப்பு திட்டத்தில் வாழும் 75 குடும்பங்களுக்கு கனடிய தமிழர்களின் நிதி உதவியின்மூலம் பெறப்பட்ட வீட்டு உபகரண பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிடும் நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், அரவிந்தகுமார் எம்பி, தேசிய தொழிலாளர் சங்க அமைப்பாளர் ராஜமாணிக்கம், முன்னாள் கொமாஉ சின்னத்தம்பி பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

எங்கேயோ ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தில் கனடிய மண்ணில் வாழுபவர்களையும், இங்கே மலையுச்சியில் பதுளை மண்ணில் வாழுபவர்களையும் இணைக்கும் மூலக்கூறு எதுவென கேட்டால், அது பச்சை தமிழ் இரத்தம் என பச்சை குழந்தையும் கூறுகின்ற நிலைமையை நாம் இன்று ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம், நாம் தமிழர் என்ற செய்தி தமிழருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்களுடன் விளையாட வேண்டாம்; நாம் ஒருவருக்கு ஒருவர் துணையிருப்போம் என்ற செய்தி எங்கள் எதிரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீரியபெத்த மண்சரிவின் போது, நான் எதிரணியில் இருந்தேன். அப்போதைய அரசாங்க தலைவர்களும், அதற்குள் இருந்த நம்மவர்களும், புதிய கிராமம் அமைக்கப்பட வேண்டிய பாதுகாப்பான மாற்று பிரதேசத்தை தேடி கண்டுபிடிப்பதிலேயே நீண்ட காலத்தை செலவழித்தனர்.

அதன்பிறகு நகர அபிவிருத்தி சபை, இடர் நிவாரண அமைச்சு, ஆட்சி மாற்றம் என நீண்ட காலம் எடுத்துதான், இந்த 75 வீடுகளை கொண்ட புதிய மலைநாட்டு கிராமம் அமைந்தது. இதையும்கூட நானும், சகோதரர் திகாம்பரமும் ஒவ்வொரு அமைச்சரவை கூட்டங்களிலும் இடைவிடாமல் வலியுறுத்தியே இதை கட்டத்திலாவது முடிவுக்கு கொண்டு வந்தோம். கடைசியாக இந்த தீபாவளிக்கு முன் வீடுகளை வழங்கிட வேண்டும் என்ற எம் பிடிவாதத்தை நண்பர் அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப்பா ஏற்றுக்கொண்டார். அவருக்கும் எம் நன்றி. ஆகவே வீடுகள் இப்போது வழங்கப்பட்டன. இன்று இந்த வீட்டாருக்கு நானும், அரவிந்தகுமாரும் வந்து கனடிய நண்பர்கள் சார்பாக வீட்டு உபகரணங்களை வழங்குகிறோம்.

மண்சரிவு நடந்த அந்த சோகமான நாட்களில் நாம் விரைந்து திட்டமிட்டு செயற்பட்டோம். அந்த மண்சரிவு அவலம், உலகின் கண்களையும், நாட்டின் கண்களையும் திறந்து மலைநாட்டு மக்களின் வீடில்லா பிரச்சினையை உலகறிய செய்ய பயன்பட வேண்டும் என முடிவு செய்து திட்டமிட்டு வேலை செய்தோம். நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பீக்களை மீரியபெத்த பகுதிக்கு அழைத்து வந்தேன். என் நண்பர் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் அழைத்து வந்தேன். எமது திட்டத்துக்கு தமிழ் ஊடகங்களும், ஏனைய ஊடகங்களும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கின. அவைமூலம் இந்த அவல செய்தி உலகம் முழுக்க சென்றது.

அன்று மலைநாட்டுக்கு ஏன், மாவை சேனாதிராசா தலைமையில் கூட்டமைப்பு எம்பீகள் அழைத்து வந்தீர்கள்? ஏன் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரனை அழைத்து வந்தீர்கள்? என்று என்னை பார்த்து கேள்விகள் கேட்டவர்கள் மலைநாட்டில் அமைச்சு பதவிகளில் இருந்தார்கள். இது எங்கள் ஊர், எங்கள் கோட்டை உள்ளே வராதே என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நண்பர்களை நோக்கி, பிரதேசவாதம் பேசிய ஒரு கூட்டம் இங்கே அன்று கோலோச்சியது. இன்று அதேநபர்கள் வடக்கு தமிழர்களுக்காக முதலை கண்ணீர் விடுத்து ஊடக அறிக்கைகளை விடுவதை பார்த்து கூட்டமைப்பு எம்பீக்கள் சிரிக்கிறார்கள். எங்களுக்கும் சிரிப்பு வருகிறது. நெருக்கடிமிக்க காலங்களில் இந்த நாட்டில் எந்த மூலையிலும் வாழும் எல்லா தமிழ் பேசும் மக்களுக்காகவும் அச்சறுத்தல்களுக்கு மத்தியிலும் குரல் எழுப்பி, போராடியவர் யார் என்பது நமது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மீரியபெத்த உறவுகளின் தியாகத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி வீண் விரயம் செய்யவில்லை. அதைகொண்டு இன்று நாட்டின் மனசாட்சியை திறந்துள்ளோம். அதன் அடையாளமாகத்தான், மலைநாட்டு புதிய கிராம தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு எங்கள் கூட்டணியின் வசம் இருக்கிறது. தம்பி திகாம்பரம் பம்பரமாக சுற்றி மும்முரமாக மலைநாடு முழுக்க தனிவீடுகளை அமைத்து வருகிறார். சகோதரர் ராதாகிருஷ்ணன், மலைநாட்டு புத்தலைமுறையின் கல்விகண்களை திறந்து வருகிறார். நான் அனைத்தையும் கூட்டிணைத்து தலைமை தாங்கி வருகிறேன். மலைநாட்டில் 35 வருடங்களாக, அதாவது 420 மாதங்களாக அமைச்சு அதிகார வரலாறு கொண்டவர்கள் பதவிகளில் இருந்தார்கள். எங்கள் முற்போக்கு கூட்டணி ஆக, கடந்த 13 மாதங்களாகத்தான் அமைச்சு அதிகாரத்தில் இருக்கின்றது. இரண்டையும் நிறுத்து பார்க்கும் வல்லமை, மக்களிடம் இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா