Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் இடம்பெற்ற நில ஆக்கிரமிப்பு ஆவண வெளியீட்டில் நவநீதம்பிள்ளை அவர்கள் முதல் பிரதி பெற்றுக் கொண்டார்: Top News
[Wednesday 2016-11-09 19:00]

அமெரிக்க தமிழ் சங்கத்தின் வருடாந்த நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) 8 மாத ஆய்வின் வெளிப்பாடான "Proliferating Buddhist Structures in Tamil Home land- Sowing the Seeds of Disharmony" என்னும் ஆவணத் தொகுப்பு 5ஆம் திகதி நவம்பர் 2016 Monroe Township, New Jersey என்னும் இடத்தில் வெளியிடப்பட்டது. பிரித்தானிய தமிழர் பேரவையின் சகோதர அமைப்பான USTPAC இன் அனுசரணையுடன் அமெரிக்காவில் இடம்பெற்ற இன் நிகழ்வில் ஐ நா மனித உரிமை கழகத்தின் முன்னால் ஆணையாளர் டாக்டர் நவநீதம்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு ஆவணத்தின் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய கலாநிதி நவநீதம்பிள்ளை அவர்கள் இதனைத் தயாரித்து வெளியிட்ட பிரித்தானிய தமிழர் பேரவையை பாராட்டியதுடன் இவ்வறான உண்மைத் தகவல்களின் அடிப்படையிலான ஆவண தொகுப்புகள் மேலும் வெளியிடப்பட வேண்டும் என்றும் அதே நேரம் அவ் வகையான ஆவணங்களை சர்வதேச சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக விழிப்புணர்வினை ஏற்படுத்தலாம் என்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல முக்கிய பிரதிநிதிகள் காலத்தின் தேவை கருதி கொண்டு வரப்பட்ட முக்கிய ஆவணம் இதுவென்றும் மேற்குலகின் கொள்கை முடிவெடுப்போர் மற்றும் ராஜதந்திரிகள் மத்தியில் தமிழர் தாயகத்தில் சமகாலத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு பற்றிய விபரங்களை ஆதாரபூர்வமாக இலகுவாக புரிய வைக்கும் என்றும் கருத்துரைத்தனர்.

இவ் ஆவணம் பிரித்தானியாவில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடன் (APPG T) இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)அக்டோபர் 24ஆம் திகதி பாராளுமன்ற அரங்கினுள் வெளியிடப்பட்டதுடன் அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் (ATC) அவுஸ்திரேலியாவில் வெளியிட்டதும் குறிப்பிடத் தக்கது. இவ் ஆவணம் தமிழர்கள் வாழும் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வைக்க பல அமைப்புகள் முன் வந்துள்ளன.

இந்த நிகழ்வில் வழங்கிய செய்திக்கும், தமிழ் மக்களின் நீதி தேடும் பயணத்திற்கு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை நவநீதம்பிள்ளை அவர்களிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றது. உயிராபத்தின் மத்தியில் தாயகத்திலிருந்து இத் தகவல்களை துணிவுடன் தேடிப் பெற்று அனுப்பிய செயல் வீரர்களுக்கும் மற்றும் பல்வேறு விதத்தில் இவ் ஆவணம் முழுமை பெற உதவி புரிந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை தலைவணங்குகின்றது.

தமிழ் மக்களின் நிலையினை அறிந்து கொண்டு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் ஆற்றலுள்ளவர்கள் அனைவருக்கும் இவ் ஆவணம் சென்றடைய வேண்டும் என்ற எம் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குமாறு எம் சகோதர அமைப்புகளையும் அனைத்து தமிழ் மக்களையும் உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம். சர்வதேசத்தின் பல்வேறு அங்கங்களுக்கும் இவ் ஆவணத்தினை எடுத்துச் செல்ல விரும்பும் அனைவரையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா