Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மட்டு அம்பாறையில் கல்வி மேம்பாட்டிற்காக ஏழுலட்சம் பெறுமதியான உதவி வழங்கல்: Top News
[Tuesday 2016-11-15 18:00]

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள இருட்டுச்சோலைமடு விஸ்ணு வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வித்தியாலய முதல்வர் திரு. ரூபஸ் பெனாண்டோ தலைமையில் கடந்த 09-11-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய வலயக் கல்விப்பணிப்பாளர் திரு க. சத்தியநாதன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் திரு.தர்மலிங்கம் சுரேஸ் வலயக் கல்வி அலுவலக பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் திரு.குணரெத்தினம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் பெற்றோர்கள் கிராம அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

367 மாணவர்தொகையைக் கொண்ட இப்பாடசாலை எவ்வித அடிப்படை வசதி களுமின்றி காணப்படுகின்றது விவசாயம் கூலித்தொழில்களை மேற்கொள்ளும் இக்கிராம மக்கள் தமது பிள்ளைகளை குறைந்த வருமானம் காரணமாக தொடர்ந்து பாடசாலைக்கு அனுப்புவதில் பல சிரமங்ளை எதிர்நோக்கிவருகின்றனர். மேற்படி நிலைமைகளை கருத்திற்கொண்டு பாடசாலை அதிபரின் வேண்டுதலுக்கமைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது இம் மாணவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான அனைத்து கற்றல் உபகரணங்களையும் வழங்கியுள்ளது.

மேலும் கடந்த 02.11.2016 அன்று அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள திருநாவுக்கரவு வித்தியாலயத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த புள்ளிகளைப் பெற்ற 17 மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் (ஆங்கில அகராதிகள்) வழங்கவதற்கான நிதியாக நாற்பதினாயிரம் ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிதி பாடசாலை அதிபரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட உதவி அமைப்பாளர் வரதராஜா அவர்களால் கையளிக்கப்பட்டது.

மேற்படி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களையும் நிதி உதவியையும் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஹெல்ப் போ ஸ்மைல்(Help for Smile - Germany) அமைப்பு மற்றும் அம்மா உணவகம் - ஜேர்மனி ஆகிய அமைப்புக்கள் இணைந்து ரூபா ஏழு இலட்சம் பெறுமதியான நிதி உதவியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கியிருந்தன.

ஜேர்மனியில் பேர்லின் நகரில் இயங்கிவரும் அம்மா உணவகமானது அதற்கு கிடைக்கும் இலாபம் முழுவதனையும் தாயக உறவுகளுக்காக நன்கொடையாக வழங்கிவருகின்றது. கடந்த 3 வருடங்களாக இவ் அமைப்பானது அயராது உழைத்து தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகளை செய்துள்ளது. 2016 ஆண்டில் 40 இலட்சம் ரூபாய்க்கும் மேலான வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா