Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா பிரம்டன் ஈழமக்கள் ஆதரவில் மாற்றுத்திறனாளிகளிற்கான நிர்வாக தொழிற்பயிற்சி கட்டிடம்! Top News
[Wednesday 2016-11-16 17:00]

தமிழர் தாயகத்தில் தாயக விடுதலைப் பயணத்திலும் அசம்பாவிதங்களிலும் பாதிப்புற்று மாற்றுத்திறனாளிகளாகி வாழ்ககையில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் எம் உறவுகளின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்பு தன் பணிகளை விரிவாக்கி செயற்பட அமையவிருக்கும் நிர்வாக தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாண வேலைகள் உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு வைபவத்துடன் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கான முழுப்பொறுப்பை கனடா பிரம்டன் வாழ் ஈழ உறவுகள் ஏற்றுள்ளதாக பிரம்டன் தமிழ் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்புபின் நிர்வாக உறுப்பினர்கள் பயனாளி உறுப்பினர்கள் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டு வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஐ கலந்து கொண்டார். அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே கட்டிட பணிகள் பூர்த்தியாகி பாவனைக்கு வரும் வகையில் பணிகள் துரிதகதியில் நடைபெறுவதாக மேலும் அறியப்பட்டுள்ளது.

கழுத்துக்கு கீழே இடுப்புக்கு கீழே இயக்கம் அற்றவர்கள் இவ்வமைப்பால் பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பாளர்களைக் கொண்டு அவ்வாறு பாதிப்புற்றுள்ளோரை இவ்வமைப்பு தனது கவனப்பிற்குள் கொண்டுவந்துள்ளது. இச்செயற்பாடுகளை இணைக்கும் தலைமையகமாகவும் பாதிப்புற்றோருக்கான சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல் முதல் கொண்டு பல்வேறு நலத் திட்டங்கள் இங்கிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு முதற்தவணையாக 12 லட்சத்து 54ஆயிரம் ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிராம்டன் தமிழ் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர் மாங்குளத்தில் பிரதான வீதிக்கு அருகில் இதற்கான காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மேலதிக நிதியை பிரம்டன் வாழ் தமிழ் உறவுகளும் தமிழ் நலனில் அக்கறையுள்ள அனைவரும் தந்துதவுவார்கள் என்றும் இப்பணியை விரைந்து முடிக்க அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாக பிரம்டன் தமிழ் ஒன்றியத்தினர் மேலும் தெரிவித்தனர்.

இதற்கான பணியை பிரம்டன் தமிழ் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களும் பிரம்டன் முதியோர் சங்க நிர்வாக உறுப்பினர்களும் விரைந்து முன்னெடுத்துள்ளனர். கார்த்திகை மாதத்தில் தமிழ் அன்னையின் தவப்புதல்வர்களின் நினைவாக இப்பணியை விரைந்து முடிப்பது எனவும் அவர்கள் திடசங்கர்பம் பூண்டுள்ளனர்.

இப்புனிதப்பணியில் தம்மையும் இணைத்து பங்களிப்பு செய்ய விரும்பும் நல் உள்ளம் கொணடவர்கள் அனைவரையும் உடன் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் வேண்டியுள்ளனர். தொடர்புக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 647 8730732 அல்லது மின்அஞ்சல் info@bramptontamil.ca இது குறித்த மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் அறியத்தரப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா