Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாவீரர் நினைவெழுச்சிநாள்
[Tuesday 2016-11-29 11:00]

தமிழீழத்தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் தமிழீழ மாவீரர்நாள்- 2016 நிகழ்வுகள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரில் கங்கேரியன் மண்டபத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் ஆயிரத்தி ஐநூறிற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தனர். தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் செல்வன் லூயின் பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் செல்வி துளசி தெய்வேந்திரன் (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமையில் மாலை 6.00 மணிக்கு மணிஒலி எழுப்பலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

முதல்நிகழ்வாக மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் முதன்மைச்சுடர் ஏற்றப்பட்டது. இவ் முதன்மைச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர் கபிலன் நந்தகுமார்அவர்கள் ஏற்றிவைத்தார். அதனையடுத்து ஒஸ்ரேலியத் தேசியக்கொடியினை திரு சாள்ஸ் வோல்கர் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியினை திரு எட்றியன் சின்னப்புஅவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முதற்களப்பலியாகிய மாவீரர் லெப்ரினன்ட் சங்கர்அவர்களின் திருவுருவப்படத்திற்கு திரு கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முதற்பெண்மாவீரர் 2-ம்லெப்ரினன்ட் மாலதிஅவர்களின் திருவுருவப்படத்திற்கு திருமதி மாலா பாஸ்கர் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

அதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கு அவர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஈகைச்சுடர்கள் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து மக்களும் நீண்டவரிசையில் சென்று மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக மவர்வணக்கம் செலுத்தினார்கள்.

மலர்வணக்க நிகழ்வையடுத்து இதுவரைகாலமும் தாயகமண் மீட்புப்போரில் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களையும் மற்றும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவிற்கொண்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்ட சிட்டிகளை கைகளில் ஏந்தியிருக்க சமநேரத்தில் "மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை....." என்ற மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்தது. அதனையடுத்து அனைவரும் மாவீரர் நாளிற்கான உறுதியுரையை எடுத்தனர்.

தொடர்ந்து அரங்கநிகழ்வுகளாக மெல்பேர்ண் நடனாலயாப்பள்ளி மாணவர்களின் "விழிமடல்மூடி துயில்கின்றவீரர் வித்துடல்மீதிலே வீரசபதம்......." என்ற பாடலுக்கான வணக்க நடனம் இடம்பெற்றது. அடுத்து மாவீரர்கள் நினைவுசுமந்த கவிதையினை செல்வன் துவாரகன் சந்திரன் அவர்கள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து மாவீரர் நாள் நினைவுரை இடம்பெற்றது. இவ் நினைவுரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் "கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் ஆனையிறவுப்படைத்தளத்தில் காயமடைந்து பலதுன்பங்களை அனுபவித்தும் தன்னை அழித்துக்கொள்ளும் தெரிவை தவிர்த்து தான் வாழ்வதற்கு ஊடாகவே போராட்டத்தில் மேலும் சாதிக்கலாம் என்ற தற்துணிவோடு மூன்று நாட்களின் பின்னர் தளம்வந்து அவர் கொடுத்திருந்த தகவல்களே பின்நாளில் ஆனையிறவுப் படைத்தளத்தை நாம் வெற்றிகொள்ள வழிவகுத்தது.." என்றும் "வெடிபொருள் களஞ்சியம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு ஒன்றின் வெடிப்பி வெடித்துவிட மறுகணப்பொழுதில் நிகழப்போகும் அபாயத்தை உணர்ந்த கப்டன் அன்பரசன் ஒருகணமும் தாமதிக்காது அந்த வெடிகுண்டை தன்னோடு அணைத்து வெடித்து தன்னுயிரை ஈந்து அந்தப் பாசறையிலிருந்த மற்றைய போராளிகளின் உயிர்களைக் காத்தவன் கப்டன் அன்பரசன்" என்றும் மாவீரர்களான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் மற்றும் கப்டன் அன்பரசன் ஆகிய மாவீரர்களின் தியாகங்களையும் விளக்கியதோடு தாயகத்தின் சமகாலஅரசியல் நிலவரங்களையும் சுருக்கமாக ஆராய்ந்து தனது நினைவுரையினை நிகழ்த்தியிருந்தார்.

அதையடுத்து பரதசூடாமணி பள்ளி மாணவர்களின் "காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை......" என்ற பாடலுக்கான நடனம் இடம்பெற்றது. இறுதியாக சமூக அறிவித்தல்களோடு தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற உறுதிமொழியுடன் இரவு 8.15 மணிக்கு மாவீரர்நாள்-2016 நிகழ்வுகள் நிறைவுற்றன. மாவீரர்களின் நினைவுகளைச்சுமந்து ஆண்டுதோறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்படுகின்ற "காந்தள்மலர் புத்தகம்" இவ்வாண்டும் மிகவும் தரமான முறையில் அச்சுப்பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா