Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாவீரர் நினைவெழுச்சிநாள் 2016
[Tuesday 2016-11-29 11:00]

அவுஸ்திரேலிய நகர் சிட்னியில் 2016 மாவீரர் நாள் நவம்பர் 27ந் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் நிகழ்ந்தேறியது. சிட்னி நகரின் புறநகர் ஒன்றில் திறந்தவெளி அரங்கில் நிகழ்ந்த இந்நிகழ்வில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டனர். சிட்னி வாழ் உறவுகளில் 120 மாவீரர்களின் குடும்பங்கள் பங்குபற்றினார்கள். மைதானம் சிவப்பு மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டது. வாசலில் மாவீரர் நாள் வளைவு தமிழீழத்தில் இருந்தவை போல் அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்துள், மாவீரர் கல்லறைகள் இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்ததுமே மாவீரர்களை நினைத்து உருக வைக்கக்கூடியதாக மாவீரர் துயிலும் இல்லம் போன்றதொரு அமைப்பு செய்யப்பட்டு சிட்னி வாழ் உறவுகளின் மாவீரர் கல்லறைகளில் அவர்கள் படங்கள் வைக்கப்பட்டிருந்தது.

2001ம் ஆண்டு வீரகாவியமாகிய வீரவேங்கை ஆழியமுது அவர்களின் சகோதரன் சுமன் பொதுச்சுடர் ஏற்றிவைத்ததுடன் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய பூர்வீக மக்கள் கொடியை சிறிகரன் அவர்கள் ஏற்ற, அவுஸ்திரேலிய கொடியை ஆனா பரராஜசிங்கம் அவர்கள் ஏற்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி பொறுப்பாளர் ஜனகன் சிவராமலிங்கம் அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார். அவுஸ்திரேலிய கொடி ஏற்றப்படும் போது அவுஸ்திரேலிய தேசிய கீதமும் எமது தேசியக் கொடி ஏற்றப்படும் போது கொடிப்பாடலும் இசைக்கப்பட்டது.

ஈகைச்சுடரை சுரேஷ்குமார் ஏற்றி வைத்தார். இவர் 2ம் லெப்டினன் கவிதாஸ் அவர்களின் சகோதரன். துயிலும் இல்லப் பாடல் இசைக்கப்பட, மாவீரர் குடும்பங்கள் மலர், தீப வணக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து பொது மக்கள் மலர் வணக்கம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து, தமிழகத்திலிருந்து வந்திருந்த, எழுத்தாளர், ஒலிபரப்பாளர் அப்துல் ஜப்பார் சிறப்புரையாற்றினார். அதன்போது, தேசியத் தலைவரைத் தான் சந்தித்த அனுபவங்களை சுவைபடச் சொன்னார். மேலும், தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் எப்படி தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தை எடுத்துச் செல்லலாம் என்ற தனது கருத்தையும் பகிர்ந்தார்.

எமது போராட்ட வரலாற்றுடன் ஒற்றுமைகள் பலவுள்ள பாரி மன்னன் கதை, அற்றைத் திங்கள் என்ற பரதமும் கூத்தும் கலந்த நாடகத்தில் அழகாக எடுத்துவரப்பட்டது. மக்களுடன் மாவீரரும் மாண்டு போயினர் என்று அந்த நாடகத்தில் பாடப்படும்போது வந்திருந்தவர்கள் அனைவரும் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து சத்தியன் இளங்கோ மற்றும் ஆனந்தசிங்கம் சிவதாஸ் இருவரும் மாவீரர் புகழ் பாடும் பாடல்களைப் பாடினார்கள். இறுதியாக, சிட்னி இளைஞர் ஜனனி ஜெகன்மோகன் உணர்ச்சி மிக்க உரை ஒன்றை ஆங்கிலத்தில் வழங்கினார். கொடியிறக்கலைத் தொடர்ந்து, மக்கள் உறுதிமொழி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா