Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிறிலங்கா தூதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமர்வின் எதிரொலி ! Top News
[Friday 2016-12-02 09:00]

நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நடாத்த Le Blanc Menil (93) நகரசபை அனுமதிதித்ததற்கு சிறிலங்கா தூரதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் என நகரபிதா அவர்கள் தெரிவித்துள்ளார். பாரிசின் புறநகர் பகுதியான நகரசபையின் முறையான அங்கீகாரத்துடன் நகரசபை மண்டபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு வெள்ளியன்று பிரான்சில் தொடங்கியுள்ளது. இந்த அமர்வின் அங்குராப்பண நிகழ்வில் உரையாற்றும் பொழுதே நகரபிதா Thierry Meignen அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நகரசபையில் நடாத்துவதற்கு தாங்கள் அனுமதித்திருப்பது தொடர்பில், பிரென்சு மத்திய அரசாங்கம் மாற்றுக்கருத்தொன்றினையும் தெரிவிக்கவில்லை என்றும் நகரபிதா அவர்கள் தெரிவித்தார். இதேவேளை, இவ்விடயத்தில் கடந்தமுறை போல் இம்முறையும், சிறிலங்காவின் பிரான்ஸ் தூதரகத்தின் கடிதம் வரலாம் எனவும் நகரபிதா மேலும் தெரிவித்தார்.

மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகின்ற இந்த அரசவை அமர்வில்கலாநிதி சுதா நடராஜா( University of London), தகைநிலைப் பேராசிரியர் பீற்றர் சால்க்( Uppsala University - Sweden), திரு.கென்டல் நெசான் (குருதீஸ் மக்கள் நிறுவனம் - பிரான்ஸ் ) , திரு. பீற்றர் குஜோ (சுடான் மக்கள் விடுதலைய இயக்கம்) ஆகியோர் வளப்பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர்.

புலோ மினில் நகரபிதா தியோ மெயினன், நகரசபை உறுப்பினர் செல்வி சுரேந்திரன் ஸ்ரெபனி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்குகின்றனர்.

புலம்பெயர் தேங்களில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இந்த அமர்வில் கூடியுள்ளனர்.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திகழ்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது. நாதம் ஊடகசேவை

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா