Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிறிலங்காவுக்கு ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தொடங்கியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! Top News
[Tuesday 2016-12-13 09:00]

சிறிலங்காவின் சட்டப்போராட்டத்தை பன்னாட்டு சட்டாவாளர்களின் துணையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியது. தமிழ்மக்கள் தமக்குரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தனிநாடு கோருவது தண்டைக்குரிய குற்றமாக, சிறிலங்காவின் ஆறாம் திருத்தச்சட்டம் அமைவதோடு, மக்களது கருத்துச் சுதந்திரத்தினையையும், பேச்சு உரிமையினையையும் மறுக்கின்றது. இந்நிலையில், மக்களின் அடிப்படை உரிமையினை மறுக்கின்ற சிறிலங்காவின் இச்சட்டமூலத்துக்கு எதிராகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சட்டப் போராட்டத்தினை முறையாக தொடங்கியுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு சட்டவாளர்களை உள்வாங்கி, ஐ.நா. மனிதவுரிமைக் குழுவின் முன் வாதிடப்பட இருக்கும் இச்சட்டப் போராட்டத்தில் பிரான்சின் பிரபல சட்டவாளர் திரு. ஜில் பிக்குவா அவர்களும், தென் சுடான் சட்டவாளர் திரு. பீற்றர் குஜோ ஆகியோர் முதற்கட்டமாக ஒப்பமிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க், தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி இளைப்பாறிய நீதியரசர் கே.பி.சிவசுப்பிரமணியம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் இச்சட்டப் போராட்டத்திற்கு தலைமை தாங்குகின்றனர்.

இச்செயல்முனைப்பு தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை விடுத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டமூலமானது ஐ.நா. சபையின் சிவில் மற்றும் பொது மக்கள் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் 18ம் 19 சரத்துகளில் குறிப்பிட்பட்டுள் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியே இந்த நெருக்கடியினை சிறிலங்காவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்துகின்றது.

ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானம் 2625 (1070) வழமையான சர்வதேசச் சட்டமாகவுள்ளதன் அடிப்படையில், தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிநாட்டை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாம் திருத்தத்தில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பபடுவது தொடர்பாக தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இக்காலகட்டத்தில் தமிழ்மக்கள் தமக்கான உரிமையை எதுவித தடைகளுமின்றிப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். ஆகையால் இம்மனு பொருத்தமானதொரு காலத்தில் தாக்கல் செய்படவிருக்கிறது.

தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுமுள்ள சட்டவாளர்களையும், மற்றும் உலகெங்கும் வாழும் முற்போக்குக் கருத்துடைய சட்டவாளர்களையும் ஆதரவு வழங்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருகிறது.

1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரதிகளை வினியோகித்ததாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட ட்ரயல் அற் பார் (யூரிகளற்ற நீதிமன்றம்) வழங்கில் ஜீ.ஜீ. பொன்னம்பலம், சா.ஜே.வே. செல்வநாயகம், மு. திருச்செல்வம் ஆகியோரின் தலைமையில் அறுபத்தியாறு சட்டவாளர்கள் வாதிட்டதை ஒத்ததாகவே இம்முயற்சியும் அமையவிருக்கிறது.

இவ்விடயத்தில் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் உட்பட்ட சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு தீர்ப்புகளை முன்னுதாரணங்களாக் கொண்டு வாதிடப்படும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இவ்விடயத்தில் இணைப்பாளராகச் செயற்படும் டேவிற் மற்றாஸ் அவர்களுடன் dmatas@mts.net என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா