Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அமுதச்செல்வியின் உயிரைக் காப்பாற்ற உதவிய மின்னல் செந்தில் குமரன்! Top News Top News
[Monday 2017-01-30 21:00]

அண்மையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சார்ந்த அமுதச்செல்வி அவர்களிடம் இருந்து ஒரு வேண்டுகோள் செந்தில் குமரன் அவர்களுக்கு வந்தது. அமுதச்செல்வி 10 அகவை நிரம்பிய ஒரு மகனின் தாயார் ஆவர். அமுதச்செல்விக்கு பாரதூரமான இதயக் கோளாறு இருந்தது. அவரது இரண்டு இருதய தடுப்பான்களை (Heart Valves) மாற்ற அறுவைமருத்துவம் தேவைப்பட்டது. இலங்கை முழுதும் இப்படியான கோளாறுகளால் அவலப்படும் பல நோயாளிகள் இலவச அறுவை மருத்துவம் செய்யக் காத்திருக்கிறார்கள்.

இப்படியான சிக்கலான அறுவை மருத்துவம் செய்யக் குறைந்தளவு அறுவை மருத்துவர்கள் இருப்பதால் நோயாளிகள் சிறிது காலத்தில் இறந்துவிடுகிறார்கள். இலங்கா மருத்துவமனை அமுதச்செல்விக்கு அறுவை மருத்துவம் செய்ய அண்ணளவாக ரூபா 1.400.000 (Roughly CDN $12,000) தேவை என்று மதிப்பீடு செய்தார்கள். இப்படியான 18 அறுவை மருத்துவம் செய்த முன் அனுபவம் இருந்த காரணத்தால் செந்தில் குமரன் உடனடியாக இலங்கா மருத்துவமனையோடு தொடர்பு கொண்டு பேசினார்.

வழக்கம்போல செந்தில் குமரன் இந்த அறுவை மருத்துவத்தோடு தொடர்புடைய (இலங்கா மருத்துவ மனையில் பணிசெய்யும் அறுவை வைத்தியர் ஜி.காந்திஜி மற்றும் அவரது குழு) வைத்தியர்களோடு பேசி இந்த உயிர் காக்கும் பணியில் அவர்களும் சேரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் அமுதச்செல்வி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது இவ்வாறிருக்க மட்டக்களப்பில் இருந்து இதே கோளாறினால் பீடிக்கப்பட்ட 23 வயதுடைய பரமேஸ்வரன் என்பவரிடம் இருந்தும் அவசர உதவி கேட்கப்பட்டது. இந்த இரண்டு வேண்டுகளையும் பரிசீலனை செய்துவிட்டு மக்களிடம் இருந்து அன்பளிப்புகளையும் உதவிகளையும் கேட்டு வேல் வேல் வெற்றி வேல் என்ற தனது சொந்தப் பாடலை தரையிறக்கம் செய்து கேட்கும் முகமாக வெளியிட முடிவு செய்தார்.

காணொளி வெளியீடு நிகழ்ச்சி அய்யப்பன் கோயில் மண்டபத்தில் கடந்த சனவரி 15 இல் இடம்பெற்றது. இதன் மூலம் கிடைத்த நிதியைப் பயன்படுத்தி அமுதச்செல்விக்கு அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. அவர் இப்போது குணம் அடைந்துவருகிறார்.

இந்த அறுவை மருத்துவத்தை மேற்கொண்ட மருத்துவர் காந்திஜி மற்றும் மயக்க மருந்து ஆலோசனை மருத்துவர் லுஷன்தா பத்மசிறி (Dr. Lushantha Padamasiri - Anesthetic Consultant) இருவரும் தங்களது ஆலோசனைக் கட்டணத்தை வாங்கவில்லை என்பதும் தங்கள் நேரத்தை இலவசமாக கொடுத்து உதவினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்போது இன்னொரு மருத்துவர் இரகுராம் செந்தில் குமரனோடு தொடர்பில் இருந்தார். அதே போல் இலங்கா மருத்துவமனையும் செந்தில் குமரனோடு தொடர்பில் இருந்ததோடு மருத்துவமனைக் கட்டணத்தை வழக்கமாக அறவிடுவதைவிட மிகக் குறைத்தே அறவிட்டது. ஆம் ரூபா 1,400,000 இருந்து ரூபா 565,894 ஆக கட்டணம் குறைக்கப்பட்டது.

அடுத்து பரமேஸ்வரன் அறுவை மருத்துவம் செய்ய இருக்கிறார். அவரது அறுவை மருத்தும் வெற்றிகரமாக முடிய வேண்டும் என வாழ்த்துகிறோம். மின்னல் செந்தில் குமரன் திரட்டும் நிதி நூறு விழுக்காடு பயனாளிகளது மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்தப் படுகிறது என்பது ஒரு சிறப்பு அம்சம் ஆகும். மிகுந்த ஆர்வத்தோடும் முனைப்போடும் இப்படிப் பிணியுற்றோருக்கு உதவி செய்யும் மின்னல் செந்தில் குமரனின் பாரத்தை குறைக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தப் பாடலை தரையிறக்கம் செய்வதன் மூலமாகவும் மற்றும் அவரது இணையதளத்துக்குச் சென்று உங்களால் ஆன பங்களிப்பை செய்வதன் மூலமாகவும் பல உயிர்களைக் காக்கும் இந்தப் பணியில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

Help Us Save Lives!
100% of the proceeds are donated to fund life saving surgeries in Sri Lanka. All donations and the hospital bills will be enlisted to show transparency.

http://www.heartsforhumanity.ca/

பாடல்களை தரவிறக்கம் செய்ய -

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா