Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நீங்களும் உதவி செய்ய முன்வரலாம்.. Top News
[Friday 2017-03-03 19:00]

கனடா வன்னிச் சங்கத்தினது தொடர்ச்சியான முயற்சியினால் மாற்றுத்திறனாளியான மேரிபாலன் கிரிசாந்தன் அவர்களுக்கு சுயதொழில் முயற்சிக்குரிய முச்சக்கர வாகனம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாகனத்தினை வாங்கி வழங்குவதற்குரிய முதற்கட்ட நிதிஉதவியினை வழங்கிய சுதாகர் பரஞ்சோதி னுநடவயரசயஇ ஆளைளளைளயரபய நிறுவன உரிமையாளர் அவர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தினர் தங்கள் இதைய பூர்வமாக நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள். அத்தோடு மேற்படி நிதி உதவியினைப் பெறுவதற்கு எல்லாவகையிலும் உழைத்த அமையத்தின் தலைவர் திரு பொ. சிவசுதன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

மேரிபாலன் கிரிசாந்தன் அவர்கள் 2009ம் ஆண்டுப் போர் அனர்த்தத்தின்போது தேவிபுரம் புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த செல்வீச்சுக் காரணமாக தனது ஒரு காலை இழந்தவர். மீள்குடியேற்றத்தின் பின்னர் நெடுங்கேணியில் உள்ள இறம்பைக்குளம் என்னும் கிராமத்தில் வசித்து வருகின்றார். 2016ம் ஆண்டுவரை இவர் உதவிக்காக விண்ணப்பிக்கும்வரை மிக ஏழ்மையான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார் என்பதை அவர் வசிக்கின்ற வீடு பறைசாற்றி நிற்கின்றது.

இத்தகைய வாழ்வின் விளிம்பில் நின்றுகொண்டுதான் ஒரு சுயதொழில் ஒன்றினைச் செய்வதற்கான கோரிக்கையினை ஆவணி மாதம் 2016ம் ஆண்டில் கனடா வன்னிச் சங்கத்திடம் கோரிக்கையாக முன்வைத்தார். அவரது விண்ணப்பம் நிர்வாகசபையினால் வலுவளர்களுக்கான உதவி வழங்கும் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களினால் பல்வேறு மட்டங்களிலும் ஆராயப்பட்டு அவரது சொந்த விருப்பத்தின் பிரகாரம் இந்த வாகனத்தினைப் பெற்றுக் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இவருக்கு இந்த உதவியினை வழங்கலாமென நிர்வாகசபை முடிவெடுத்ததன் பின்னர்; 1-3-2017ம் ஆண்டு டெல்ரோறா நிறுவத்தின் நிதியுதவியோடு மாற்றுத் திறனாளியான மேரிபாலன் கிரிசாந்தனுக்கு முச்சக்கர வண்டி உதவியானது வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பிரதேசச் செயலாளர் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக வழங்கப்பட்டது.

தனிப்பட்ட குடும்பத்தவர்கள் மாத்திரமன்றி கனடாவிலே தொழில் நிறுவனங்களை நடாத்துபவர்களும் கூட இவ்வாறான உதவிகளைச் செய்ய முன்வரலாம் என்பதற்கு னுநடவயரசய நிறுவன உரிமையாளரது இச்செயற்பாடு முன்மாதிரியாக அமைகின்றது.

இது விளம்பரத்திற்காக அல்லது விமர்சனத்திற்காக வெளியிடப்படுகின்ற விடயமல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகக் காத்திருக்கின்ற நல்லுள்ளங் கொண்ட மக்களாகிய நீங்கள் உங்களாலும் இப்படியானவர்களுக்கு ஏதாவது உதவி செய்யமுடியும் என்பனை விளக்குவதற்காகவே வெளியிடப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா