Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மனிதம் சாகவில்லை ஆனால் நாங்கள்தான்!!
[Tuesday 2017-03-07 16:00]

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள கற்சிலைமடு என்னும் கிராமத்தில் உள்ள பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றுபவர்தான் தர்சன் என்னும் 27 வயதுடைய இளைஞர். இவருக்கு பாடசாலையில் மாதாந்தப் படியாக ரூபா 5000.00ல் இருந்து ரூபா 10,000.00 வரை வழங்குகின்றார்கள். இவர் ஏறக்குறைய 7 ஆண்டுகள் இப்பகுதியிலே தொண்டர் ஆசிரியராகக் கடமைபுரிகின்றார்.

இதனைவிட புதுக்குடியிருப்பிலும் ஒட்டுசுட்டானிலும் தனியார் நடன வகுப்புகளையும் நடாத்திவருகின்றார். இதில் கற்கும் மாணவர்களில் போரினால் பெற்றோரை இழந்த, மற்றும் வறிய மாணவர்களுக்கு இலவசமாகவும், மற்றயோருக்கு மாதாந்தக் கட்டணம் பெற்றும் வகுப்புக்களை நடாத்தி வருகின்றார். இவர் தற்போது இடமாற்றம் பெற்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் உள்ள பாடசாலையில் நடன ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார்.

இவர் ஆரம்பத்தில் பெற்ரோரற்ற இரண்டு மாணவர்களை தனது இருப்பிடத்தில் வைத்து அவர்களுக்கு உணவு,உடை போன்ற உதவிகளை வழங்கி அவர்களது கல்விக்கு உதவி செய்துகொண்டிருந்தார். காலப்போக்கில் அவரின் உதவியை நாடிய மாணவர்களின் தொகை ஆறாக அதிகரிக்க அவர் தனியான ஒரு வீட்டினை ரூபா 2500.00 வாடகைக்குப் பெற்று அதில் மாணவர்களைத் தங்கவைத்து அவர்களுக்கு உணவு, உடை மற்றும் கல்வி உதவிகளைச் செய்து வருகின்றார். மாதாந்த வருமானம் போதாத நிலை உருவாகும்போது யாழ்ப்பாணத்தில் 3 வாகனங்கள் வைத்துத் தொழில் புரிந்துவரும் தனது தகப்பனாரின் உதவியை நாடினார். அவரது தகப்பனாரும் இவருக்கு மாதாந்தம் பற்றாக்குறையாக உள்ள பணவுதவியைச் செய்து வருகின்றார்.

இந்த ஆசிரியரும் மாணவர்களும் தாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டில் வீட்டுத் தோட்டம் செய்து அதில் வரும் மரக்கறிவகைகளையும் உணவுக்காகப் பயன்படுத்துகின்றார்கள். மாணவர்களின் கல்வி நலன்கருதி வெளி ஆசிரியர்களை இந்த மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்காக மாதாந்தம் ரூபா 5000.00ம் சம்பளத்தில் நியமதித்துள்ளார். கணிதம், விஞ்ஞானம், கணனிக் கல்விக்கென 3 ஆசிரியர்களை அழைத்து பாடம் கற்பிக்க வைக்கின்றார். கணனி ஆசிரியர் ஒரு மடிக்கணனியை வைத்தே 10 மாணவர்களுக்குக் கற்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது மாணவர் தொகை 10ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட இவர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்களும் இதில் உள்ளடங்கி உள்ளனர் எனக் குறிப்பிட்டடார். (10 மாணவர்களில் 4 மாணவர்கள் தங்களது பெற்ரோரோடு வாழும் வறிய மாணவர்களாவர்.) மாணவர் தொகை அதிகரித்ததனால் தனக்கு அவர்களுக்கான எல்லாச் செலவுகளையும் கவனிக்கமுடியாது உள்ளதாகவும் ஒரு சில உதவிகளைச் செய்தால் இவர்களது படிப்பு முடியும்வரை அவர்களுக்கு உதவி செய்வதாகவும் குறிப்பிடுகின்ற இவர் தற்போது கனடா வன்னிச் சங்கத்தின் உதவியை நாடி நிற்கின்றார்.

இவரது இந்த விடயங்கள் உண்மையா பொய்யா என்பதனை அறிவதற்காக கனடா வன்னிச் சங்கத்தின் தலைவர் தொலைபேசி மூலமாகத் தர்சனைத் தொடர்பு கொண்டு பல விடயங்களைக் கேட்டு அறிந்துள்ளதோடு நேரடியாகவும் அவரைச் சந்தித்து உண்மைநிலைகளை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுத்தார். அதன் பிரகாரம் இரண்டு சந்திப்புக்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இன்னும் ஒரு சந்திப்பு அவருடன் இடம்பெறவுள்ளது. தலைவரோடு உரையாடியபோதும், நேரடியான சந்திப்பின்போதும் அவர் பின்வரும் உதவிகளை முதற்கட்டமாக வேண்டிநிற்கின்றார்.

1. மாணவர்களுக்காக வீட்டில் உடுக்கும் உடுப்புகள்.

மாணவர்கள் தற்போது பொக்கல் உள்ள காற்சட்டைகளையே வீட்டில் அணிகிறார்கள் எனக் குறிப்பிட்டார். காற்சட்டை, ரீசேட் போன்றவை, இவை பாவித்தவையாக இருந்தாலும் பறவாயில்லை என்றார். மாணவர்கள் வயது 13 தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

2. ஒரு கறவை மாடு வாங்கித் தந்தால் அதனைத் தாங்கள் இருக்கும் வீட்டிலேயே வளர்த்து மாணவர்களுக்குத் தேவையான தேனீர் பால் தேவைகளுக்குப் பயன்படுத்தமுடியும் எனக் குறிப்பிட்டார்.

3. தன்னிடம் நடனம் பழகும் வறுமையுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கொடுப்பதற்காக சலங்கைகள், பழகுவதற்கு பாவிக்கும் உடுப்புகள், அரங்கேற்றத்திற்கான உடுப்புகள் பாவித்தவையாக இருந்தாலும் நல்லதாக இருந்தால் போதுமானதாககும் எனக் குறிப்பிட்டார்.

மேற்குறித்த விபரங்களை வாசித்து அறிந்துகொண்ட எங்கள் கருணை உள்ளங் கொண்ட உறவுகளே !!!!!!!!!!!!!!!!

இவ் உதவிகளைச் செய்வதற்கு உங்கள் உதவிக்கரங்ளைத் தாருங்கள். நீங்கள் உதவிசெய்யவிரும்பும்போது கனடா வன்னிச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். எங்களது 3 உறுப்பினர்கள் தாயகப் பிரதேசத்திற்குச் செல்ல இருப்பதனால் அவர்களிடமே இவ்வுதவிப் பொருட்களைக் கொடுத்துவிடுவதற்கு ஒழுங்கு செய்துள்ளோம். எனவே உங்கள் உதவிகளை எதிர்வரும் 30 நாட்களுக்குள் (சித்திரை 06 க்கு முன்பாக)செய்வதற்கு முன்வாருங்கள் என அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

நடனப் பொருட்கள் தொடர்பில் நடனம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், நடனம் பயின்ற மாணவர்களும் இதற்காக உதவி செய்யலாம். எனவே நீங்கள் எங்களுடன் தொடர்பு கொண்டால் நாங்களே உங்கள் இடத்திற்கு நேரடியாகவந்து பெற்றுக் கொள்கின்றோம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா