Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டயகம பகுதியில் பெற்றெடுத்த சிசுவை வீசி எறிந்த தாயை தேடி பொலிஸார் வலை விரிப்பு! Top News
[Sunday 2020-01-19 08:00]

டயகம பகுதியில் பெற்றெடுத்து ஆண் சிசுவை வீசி எறிந்த தாய் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். டயகம பொலிஸ் பரிவுக்குட்பட்ட டயகம வேவர்லி தோட்டத்திற்கு சொந்தமா ஆட்லி பரிவில் நேற்று (18) திகதி மாலை 5.00 மணிளவில் ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டு பிடிக்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பற்றை நிறைந்த கால்வாய் பகுதியில் சிசுவின் சடலம் கிடப்பதனை கண்ட பொது மகன் ஒருவர் டயகம பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்தே குறித்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிசு ஓரிரு நாளுக்கு முன் பிறந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். குறித்து சிசு யாருடையது என்பது தொடர்பாகவும் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த சிசுவின் மரணம் தொடர்பாக நுவரெலியா கைரேகை அடையாள பிரிவினர் உட்பட விசேட பொலிஸ் குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுததுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் சந்தேகத்தின் பின் கைது செய்யப்படவில்லை. எனவும் சிசுவின் சடலம் நீதவானின் மேற்பாரவையின் பின் பிரேத பரிசாதனைக்காக நுவரலியா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா