Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஶ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை புறக்கணித்து லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! Top News
[Thursday 2020-02-06 08:00]

இலங்கை சிங்கள அரசின் 72 ஆவது சுதந்திர தினமானது தமிழ் மக்களின் கரி நாளாக 04/02/2020 அன்று அனுஷ்டிக்கபட்டது. உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களினை தமிழ் மக்கள் நடாத்தினர். இதில் குறிப்பாக பிரித்தானியாவில் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ் சொலிடரிடி ஆகிய அமைப்புக்கள் இணைந்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாரிய போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். இப்போராடத்தில் பெருந்திரளான பொதுமக்கள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழம் கேட்பவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களை கொன்றொழிப்பதிலேயே இலங்கை அரசாங்கம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து செய்து வருகின்றது.

தமிழீழ தலைநகரம் திருகோணமலையில் சிங்க கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்ற முனைந்த தியாகி திருமலை நடராஜன் அரச படைகளால் கொல்லப்பட்டது, 1956 இனக்கலவரம், 1983 கறுப்பு ஜூலை மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்று தனது கட்டமைக்கப்பட்ட அழிப்பினை தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் நடாத்தி கொண்டு வருகின்றது.

இதன் அண்மை நிகழ்வுகளாக சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடுவது நிறுத்தப்பட்டது, அத்தோடு முக்கியமாக தற்போதைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும் முன்னாள் பாதுக்காப்பு செயலாளரும் ஆகிய கோட்டாபய ராஜபக்ச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 20000 க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துவிட்டார் என்ற கூற்றை வெளிப்படுத்திருப்பது பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கையை விடுபடச்செய்வதாகவுள்ளது என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும் என்பதை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளமையும்குறிப்பிடத்தக்கது. தமிழர்களுக்கான நிரந்தர தமிழீழம் அமையும் வரை தமிழர்களின் போராட்டம் அடக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா