Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டொரோண்டோ - மற்றும் நோர்வேயில் "பொய்யா விளக்கு" திரையிடல் - மருத்துவர் வரதராஜாவின் உண்மைக் கதை! Top News Top News
[Wednesday 2020-02-12 07:00]

11வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு பல படைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஈழத்தின் கதை பேசும் திரைப்படம். "பொய்யா விளக்கு" திரையிடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 16.02.2020, டொரோண்டோ - மற்றும் நோர்வேயில் பொய்யா விளக்கு. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 16ம் திகதி கனடா டொரோண்டோவில் Woodside Square Cinemas, 1571 Sandhurst Cir, Scarborough திரை அரங்கில் மதியம் 1:30 மணி பிற்பகல் மற்றும் நோர்வேயில் "Rommen Scene " திரையரங்கில் மாலை 17.00 மணிக்கும் திரையிடல் நடைபெற உள்ளது .

ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை அவலங்களை எமது எதிர்காலச் சந்ததிக்கும் பிற தேச மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் ஒரு திரைப்படமான பொய்யா விளக்கு திரையிடலுக்கு உங்களை தாழ்மையுடன் அழைக்கிறோம். இந்த முக்கியமான திரைப்படம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களில் மக்களோடு நின்று சேவையாற்றிய வைத்தியர்களில் ஒருவரான வைத்தியர் வரதராஜாவின் கதையினை எடுத்து வருகிறது.

ஈழத்தமிழர்களது இன்னல் மிகுந்த 2009 காலப் பகுதி இறுதிக்கட்ட போரின் நேரடி சாட்சிப் பதிவுகளை காலத்தில் இறுதிவரை நின்று பணியாற்றிய வைத்தியர்களில் ஒருவரான வைத்தியர் வரதராஜாவின் கதை இது. புலப்பெயர் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் பார்த்து அறிந்து கொள்ளவேண்டிய வலிகளின் பதிவுகள் "பொய்யா விளக்கு" திரைப்படத்தில் வரலாறாக வெளிவருகிறது. 2009 ம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது உயிர்கள் மற்றும் உடைமைகளை இழந்து வலிகளை சுமந்து வாழ்கிறோம் என்பவர்கள் அனைவரும் வாருங்கள் ஆதரவு கொடுப்போம். - வரலாறுகள் பதியப்படவேண்டியவை.

"The Lamp of Truth" உண்மைக் கதையை சொல்லும் திரைக்காவியம் “பொய்யா விளக்கு”. தனேஷ் கோபால் இயக்கத்தில், ஒட்டாவா கலைஞர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படம். போர்க் களத்தில் குண்டுகளுக்கும், ஷெல் அடிகளுக்கும் நடுவில் நிகழ்ந்த ஒரு சரித்திரக் கதையை படமாக்கியிருப்பது மிகவும் முக்கியமானதொரு ஆவணப் பதிவு என்றே சொல்லவேண்டும்

"பொய்யா விளக்கு" திரைப்படத்தின் திரையிடல்

Sted: Rommen Scene

Dato: Søndag, 16.02.2020

Tid: KL 17.00

Billetter: Voksen/Barn - 100kr/50kr (Barn under 15år)

இந்த திரைப்படம் மருத்துவர் வரதராஜாவின் உண்மைக் கதை! மருத்துவர் வரதராஜா அவர்களே தனது பாத்திரத்தைத் ஏற்றும் நடித்திருக்கின்றார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா