Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா தமிழர் தகவல் 29வது ஆண்டு விருது விழாவும் இளமதிச் சுவடு மலர் வெளியீடும்!.. Top News
[Sunday 2020-02-16 19:00]

கனடாவிலிருந்து 29 ஆண்டுகளைக் கடந்து வெளிவரும் கனடிய மூத்த தமிழ் இதழான தமிழர் தகவலின் 29வது ஆண்டு விருது விழா இந்த மாதம் (பெப்ரவரி) 9ம் திகதி ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபாபீடத்தில் நடைபெற்றது. அரச அவை போன்று காட்சியளித்த இம்மண்டபம் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. முன்னாள் நகரசபை உறுப்பினரும் கல்விச்சபை உறுப்பினருமான திரு. நீதன் சண்முகராஜா தலைமையில் இவ்விழா நடைபெற்றது. கனடாவில் ஒவ்வொரு ஜனவரி மாதத்தையும் தமிழர் மரபுரிமை மாதமாக பிரகடனம் செய்யும் மசோதாவை 2014ம் ஆண்டு ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் முன்மொழிந்து அதனைச் சட்டமாக்கிய தற்போதைய சமூகசேவைகள் அமைச்சர் திரு. ரொட் சிமித் இவ்விழாவில் பிரதம விருந்தினராகப் பங்குபற்றி தமிழர்களின் விசேட சிறப்புகளையும் அவர்கள் தங்கள் விழுமியங்களை பாதுகாப்பதில் காட்டும் அக்கறையையும் எடுத்துரைத்தார். இவருக்கு இவ்விழாவில் ஷசரித்திரம் படைத்தவர்ஷ விருது (ர்ளைவழசல ஆயமநச யுறயசன) வழங்கி கௌரவம் செய்யப்பட்டது.

தமிழர் தகவல் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் இங்கு உரையாற்றும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள புலமையாளர்களையும் சான்றோர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழர் தகவல் விருது அதன் இலக்கை நேர்த்தியாக வளர்த்து வருவதாக குறிப்பிட்டார். இவ்விழாவில் பல்துறை சார்ந்த எண்மர் அவரவர் பணிக்காக விருதுடன் தங்கப்பதக்கம் சூட்டி மதிப்பளிக்கப்பட்டனர். கனடா தமிழீழச் சங்கம் கனடா உலகத்தமிழர் இயக்கம் ஆகியவற்றின் தலைவராகவிருந்து நெருக்கடியான காலங்களில் மண்ணையும் மக்களையும் மறவாது பணியாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. சின்னத்தம்பி சிற்றம்பலம் (86 வயது) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் ஒலிபரப்புத்துறையில் நான்கு தசாப்தங்களாக அறாத்தொடராக சேவையாற்றிவரும் மூத்த ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜன் ஊடக ஆளுமையாளர் சிறப்பு விருது வழங்கி மதிப்புச் செய்யப்பட்டார். அமைச்சரின் பாராட்டுப் பத்திரம் தமிழர் தகவலின் சான்றிதழ் உட்பட ஐந்து வகையில் விருது சிறப்புச் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு கனடிய பல்கலைக்கழக புகுமுக பரீட்சையில் 99 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் வந்த நான்கு மாணவர்களில் ஒரேயொரு தமிழரான செல்வி சாரண்யா ஜெயகாந்தன் இளையோர் சாதனை விருதினைப் பெற்றார்.

கனடிய தேசிய நீரோட்ட தொழிற்துறை முன்னோடி விருதை பிரபல கட்டிடக்கலை நிறுவன அதிபர் திரு. தேவதாஸ் சண்முகலிங்கமும் இசைத்துறைக்கான விருதை வாய்ப்பாட்டு மற்றும் வீணை வாத்திய இசைக்கலைஞர் திருமதி சாருமதி மனோகாந்தனும் தமிழர் பண்பாட்டுக் கலைத்துறை பணிக்கான விருதை திருமதி சசிகலா நரேந்திரனும் கனடிய வணிகத்துறையில் 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த சாதனை விருதை திரு. வடிவேலு பூலோகஇந்திரனும் பெற்றனர். விருது பெற்றவர்களை கனடிய தமிழ் இளையோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

தமிழர் தகவலின் 29வது ஆண்டு மலர் இளமதிச் சுவடு என்ற மகுடத்தில் 172 பக்கங்களில் வெளியிடப்பட்டது. பேராசிரியர்கள் மருத்துவர்கள் சட்டத்தரணிகள் கல்வியியலாளர்கள் ஊடகவியலாளர்கள் என பன்முக புலமையாளர்கள் இதில் எழுதியுள்ளனர். தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ள இம்மலரில் 11 இளையோரின் படைப்புகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மலர் வெளியீட்டு நிகழ்வுக்கு கனடிய பாடசாலை ஆசிரியர் அஜந்தி மதனாகரன் தலைமை தாங்கினார். ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திரு. ராஜ்மோகன் செல்லையா மலர் வெளியீட்டுரை நிகழ்த்தினார். ரொறன்ரோ மாவட்ட கல்விச்சபை உறுப்பினர் செல்வி யாழினி ராஜகுலசிங்கம் வாழ்த்துரை வழங்கினார். விருது தெரிவுக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் சிறப்புரையாற்றினார். அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டது போன்று சரியாக மூன்று மணிக்கு ஆரம்பமான விழா ஐந்து மணிக்கு நிறைவுபெற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா